மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியின் பெட்ரோல் எஞ்சின் குறித்த புதிய தகவல்கள்!!

அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியின் பெட்ரோல் எஞ்சின் குறித்த புதிய தகவல்கள்!!

இந்தியாவின் எஸ்யூவி மார்க்கெட்டில் மிக அதிகம் விற்பனையாகும் மாடல் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா. ஹூண்டாய் க்ரெட்டாவுக்கும் இந்த எஸ்யூவிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், போட்டியாளர்களாக இருக்கும் அனைத்து மாடல்களிலும் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. ஆனால், மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி டீசல் எஞ்சின் மாடலில் மட்டுமே கிடைக்கிறது.

மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியின் பெட்ரோல் எஞ்சின் குறித்த புதிய தகவல்கள்!!

இந்த நிலையில், சந்தைப் போட்டியை சமாளிக்கவும், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் ஆப்ஷனை வழங்கும் விதத்தில், மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி பெட்ரோல் மாடலிலும் வர இருப்பதாக நீண்ட காலமாக செய்திகள் உலவுகின்றன. ஆனால், மாருதி இதுகுறித்து எந்த தகவலையும் வெளியிடாமல் மவுனம் சாதித்து வருகிறது.

மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியின் பெட்ரோல் எஞ்சின் குறித்த புதிய தகவல்கள்!!

இதனிடையே, அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதே பெட்ரோல் எஞ்சின் புதிய மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியிலும் பொருத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியின் பெட்ரோல் எஞ்சின் குறித்த புதிய தகவல்கள்!!

மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியில் பொருத்தப்பட இருக்கும் 1.5 லி பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் அளிக்க வல்லதாக இருக்கும். போட்டியாளர்களைவிட மிகச் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தையும் வழங்கும்.

மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியின் பெட்ரோல் எஞ்சின் குறித்த புதிய தகவல்கள்!!

மற்றுமொரு தகவலாக மாருதி பிரெஸ்ஸா காரின் பெட்ரோல் மாடலில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக, எஞ்சின் அதிக டார்க் திறனை வெளிப்படுத்தும் திறனை பெறும். அத்துடன், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தையும், குறைந்த மாசு உமிழ்வு திறனையும் இந்த பெட்ரோல் மாடல் பெறும்.

மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியின் பெட்ரோல் எஞ்சின் குறித்த புதிய தகவல்கள்!!

மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியில் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வர இருக்கிறது. டாடா நெக்ஸான் பெட்ரோல் ஏஎம்டி மாடலுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். அத்துடன், க்ரூஸ் கன்ட்ரோல், அதிவேகம் குறித்து எச்சரிக்கும் வசதி உள்ளிட்டவை இடம்பெறும்.

மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியின் பெட்ரோல் எஞ்சின் குறித்த புதிய தகவல்கள்!!

புதிய மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் மாடலைவிட ரூ.60,000 வரை குறைவான விலையில் இந்த புதிய மாடல் வர இருப்பதாகவும் தெரிகிறது. வரும் தீபாவளிக்கு முன்னதாக சந்தைக்கு வந்துவிடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Article Published On: Friday, August 24, 2018, 11:47 [IST]
English summary
According to reports, Maruti Suzuki is readying up a petrol powered version of the Vitara Brezza for the Indian market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+