11 வேரியண்ட்டுகள், 7 வண்ணங்களில் வருகிறது புதிய மாருதி சியாஸ்!

By Saravana Rajan

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய மாருதி சியாஸ் கார் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

11 வேரியண்ட்டுகள், 7 வண்ணங்களில் வருகிறது புதிய மாருதி சியாஸ்!

வடிவமைப்பில் சிறிய மாறுதல்களுடன் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட புதிய மாருதி சியாஸ் கார் வரும் 20ந் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய மாடல் குறித்த ஸ்பை படங்களும், புதிய புதிய தகவல்களும் வெளி வந்த வண்ணம் உள்ளன.

11 வேரியண்ட்டுகள், 7 வண்ணங்களில் வருகிறது புதிய மாருதி சியாஸ்!

தற்போது வெளிவந்துள்ள தகவல்களின்படி, புதிய மாருதி சியாஸ் கார் 11 வேரியண்ட்டுகளில், 7 புதிய வண்ணங்களில் வர இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலானது சிக்மா, டெல்ட்டா, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடல் டெல்ட்டா, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா மாடல்களில் கிடைக்கும்.

11 வேரியண்ட்டுகள், 7 வண்ணங்களில் வருகிறது புதிய மாருதி சியாஸ்!

டீசல் எஞ்சின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலானது சிக்மா, டெல்ட்டா, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா வேரியண்ட்டுகளில் கிடைக்கும். டீசல் மாடலில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இல்லை.

11 வேரியண்ட்டுகள், 7 வண்ணங்களில் வருகிறது புதிய மாருதி சியாஸ்!

எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய ரேடியேட்டர் க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. புதிய அலாய் வீல்கள் மற்றும் புதிய எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஏராளமான க்ரோம் பாகங்கள் கொண்ட அலங்காரமும் செய்யப்பட்டுள்ளன.

11 வேரியண்ட்டுகள், 7 வண்ணங்களில் வருகிறது புதிய மாருதி சியாஸ்!

புதிய மாருதி சியாஸ் கார் நெக்ஸா புளூ, மெட்டாலிக் பிரிமியம் சில்வர், பியர்ல் மிட்நைட் பிளாக், மெட்டாலிக் மேக்மா க்ரே, பியர்ல் மெட்டாலிக் டிக்னிட்டி பிரவுன், பியர்ல் சங்கிரியா ரெட் மற்றும் பியர்ல் ஸ்னோ ஒயிட் ஆகிய 7 வண்ணங்களில் கிடைக்கும்.

11 வேரியண்ட்டுகள், 7 வண்ணங்களில் வருகிறது புதிய மாருதி சியாஸ்!

உட்புறத்தில் மர அலங்கார வேலைப்பாடுகள், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், வண்ண திரையுடன் கூடிய மல்டி ஃபங்ஷன் திரை, அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல், சுஸுகி கனெக்ட் மொபைல் அப்ளிகேஷன் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறுகிறது.

11 வேரியண்ட்டுகள், 7 வண்ணங்களில் வருகிறது புதிய மாருதி சியாஸ்!

புதிய மாருதி சியாஸ் காரில் கொடுக்கப்பட இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104.7 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடலில் கிடைக்கும். பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 21.56 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 20.38 கிமீ மைலேஜையும் தரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

11 வேரியண்ட்டுகள், 7 வண்ணங்களில் வருகிறது புதிய மாருதி சியாஸ்!

டீசல் மாடலில் இருக்கும் 1.3 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் மட்டுமே கிடைக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வர இருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாக கூறலாம்.

11 வேரியண்ட்டுகள், 7 வண்ணங்களில் வருகிறது புதிய மாருதி சியாஸ்!

புதிய மாருதி சியாஸ் காரின் விலை, தொழில்நுட்ப விபரங்கள் வரும் 20ந் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாருதி சியாஸ் கார் குறித்த அப்டேட்டுகளை தெரிந்து கொள்வதற்கு தொடர்ந்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள்.

Fuel Type Transmission Description Model Code

K15B

Smart Hybrid Petrol

Manual The New Ciaz Sigma Petrol CIR4CL100
The New Ciaz Delta Petrol CIR4CV100
The New Ciaz Zeta Petrol CIR4CZ100
The New Ciaz Alpha Petrol CIR4CZ200
Automatic The New Ciaz Delta Automatic Petrol CIA4CV100
The New Ciaz Zeta Automatic Petrol CIA4CZ100
The New Ciaz Alpha Automatic Petrol CIA4CZ200

DDiS 200

Smart Hybrid Diesel

Manual The New Ciaz Sigma Diesel CIRDBL300
The New Ciaz Delta Diesel CIRDBV300
The New Ciaz Zeta Diesel CIRDBZ300
The New Ciaz Alpha Diesel CIRDBZ400
Color Code Color Description Color Type
ZYR Nexa Blue Metallic
ZZP Metallic Premium Silver Metallic
ZAM Pearl Midnight Black Metallic
Z7Q Metallic Magma Grey Metallic
ZQK Pearl Metallic Dignity Brown Metallic
ZQL Pearl Sangria Red Metallic
ZQM Pearl Snow White Metallic
Most Read Articles

Tamil
English summary
2018 Maruti Ciaz variants details leaked.
Story first published: Tuesday, August 14, 2018, 16:11 [IST]
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more