2018 ஸ்விஃப்ட் கார் விலை இதுதான்... சஸ்பென்ஸை போட்டுடைத்த மாருதி சுஸுகி நிர்வாக அதிகாரி..!!

Written By:

உற்சாகம் கொள்ளச் செய்யும் வடிவமைப்பு, கையாளுமையில் சிறப்பு, சரியான விலை என எல்லாவற்றிலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற கார் என்றால் அது மாருதி ஸிவிப்ஃட் தான்.

2018 மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை வெளியானது; முழுத் தகவல்கள்

மூன்றாவது தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார் இந்தாண்டு நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்படவுள்ளது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த காரின் விலை பற்றிய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.

புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் காரை ஒருங்கிணைக்கும் அனைத்து வேலைகளும் முடிந்து, தயாரிப்பு பணிகளும் நிறைவடைந்துவிட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

2018 மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை வெளியானது; முழுத் தகவல்கள்

இந்நிலையில் இதற்கான விற்பனை குறித்த விவரங்களை மாருதி சுஸுகி இந்தியாவின் தலைமை நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ். கல்ஸி பிஸ்னஸ்லைன் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

2018 மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை வெளியானது; முழுத் தகவல்கள்

2018ல் வெளிவரும் வாகனங்களில் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் காரின் அறிமுகம் மிக பிரம்மாண்ட அளவில் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 3ம் தலைமுறை ஸ்விஃப்ட் மாடலின் ஆரம்ப விலை ரூ. 4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி). இது தற்போதைய மாடலை விட ரூ. 10,000 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை வெளியானது; முழுத் தகவல்கள்

புதிய ஸ்விஃப்ட் காரின் டாப்-ரேஞ்ச் வேரியன்டான இசட்.டி.ஐ டீசல் மாடல் ரூ. 7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் போன்ற எரிசக்தி தேவைகளை தவிர புதிய ஸ்விஃப்ட் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி போன்ற மாற்று எரிசக்தி கொண்ட மாடல்கள் வெளியிடப்படாது என கூறப்படுகிறது.

Trending On Drivespark Tamil:

2018ல் இந்திய வகானத்துறையை புதியதாக ஆக்கிரமிக்கவுள்ள டாப் 5 நிறுவனங்கள் இவைதான்..!!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார்கள் விபரம் வெளியானது!

2018 மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை வெளியானது; முழுத் தகவல்கள்

பிஸ்னஸ்லைனின் தகவலின் படி மாருதி சுஸுகியின் மற்ற பலேனோ மற்றும் டிசையர் கார்களை காட்டிலும் புதிய ஸ்விஃப்ட் காரின் விலை குறைவாக இருப்பதை கவனிக்க முடிகிறது.

Recommended Video - Watch Now!
Shocking Car Accident That Happened In Karunagappally, Kerala
2018 மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை வெளியானது; முழுத் தகவல்கள்

கிரான்டு ஐ10 மற்றும் ஃபோர்டு ஃபிகோ கார்களுக்கு போட்டியாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு வருகிறது.

ஆனால் விலை என்ற அடிப்படையில் பார்க்கும் போது, ஹூண்டாய் கிரான்டு ஐ10-க்கு சரிநிகர் போட்டியாக புதிய ஸ்விஃப்ட் கார் உள்ளது.

2018 மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை வெளியானது; முழுத் தகவல்கள்

மூன்றாம் தலைமுறைக்கான இந்த ஸ்விஃப்ட் காரின் தோற்றம் மற்றும் வடிவமைப்பு புதுமையாக உள்ளன. அதற்கு காரணம் இது புதிய பிளாட்ஃபாரமில் தயாராகியுள்ளது.

2018 மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை வெளியானது; முழுத் தகவல்கள்

2018 ஸ்விஃப்ட் கார் ஹார்டெக்ட் பிளாட்பாரமின் கீழ் தயாராகியுள்ளது. இதன் கீழ் தான் முன்னர் மாருதி சுஸுகி பலேனோ மற்றும் புதிய டிசையர் கார்களை தயாரித்திருந்தது.

2018 மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை வெளியானது; முழுத் தகவல்கள்

தற்போதைய மாடலை விட மிகவும் குறைந்த எடையில் தயாராகியுள்ள இந்த கார், கையாள்வதில் எளிமையாக இருக்க பல்வேறு அதற்குரிய கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

2018 மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை வெளியானது; முழுத் தகவல்கள்

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என இருவேறு தேர்வுகள் கொண்ட எஞ்சினில் இந்த கார் வெளிவருகிறது. எஞ்சின் தேர்வுகளுக்கு ஏற்றவாறு 82 பிஎச்பி மற்றும் 74 பிஎச்பி ஆற்றலை இது வழங்கும்.

2018 மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை வெளியானது; முழுத் தகவல்கள்

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ள புதிய ஸ்விஃப்ட் கார் ஏஎம்டி தேவையிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர ஆட்டோ கியர் ஷிஃப்ட், ஏபிஸ் மற்றும் முன்பக்க இருக்கைகளில் ஏர்பேகுகள் என பாதுகாப்பு கட்டமைப்புகளும் இந்த காரில் கவனமீர்க்கின்றன.

2018 மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை வெளியானது; முழுத் தகவல்கள்

இந்திய வாடிக்கையாளர்களில் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் கார் 2018 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மாடல்.

Trending On Drivespark Tamil:

கூடுதல் சொகுசு வசதிகளுடன் வரும் சென்னை- பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்!

ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகள் பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கு தடை : காவல்துறை அதிரடி..!!

2018 மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை வெளியானது; முழுத் தகவல்கள்

தற்போது பயன்பாட்டில் இருக்கும் அதே எஞ்சின் தேர்வுகளோடு ப்ரீமியம் தர வடிவமைப்பு, தரமான தொழில்நுட்ப கட்டமைப்புகள் என இன்னும் பல புது அம்சங்களோடு இருக்கும் 2018 ஸ்விஃப்ட் கார், பிப்ரவரியில் நடக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக உலக பார்வைக்கு வருகிறது.

Trending On Drivespark:

110சிசி-ல் திறன் பெற்ற புத்தம் புதிய டாஸ் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்..!!

டெஸ்ட் டிரைவின் போது கண்ணில் பிடிப்பட்ட 125சிசி டிவிஎஸ் கிராஃபைட் கான்செப்ட் புதிய ஸ்கூட்டர்..!!

Trending DriveSpark YouTube Videos

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

English summary
Read in Tamil: 2018 Maruti Swift Price Details Revealed Launch Soon. Click for Details...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark