2018 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ரூ.84.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் கார். இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 242 பிஎச

2018 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டெல்லியில் நடந்து வரும் விழாவிலிருந்து எமது செய்தியாளர் புரோமித் கோஷ் தரும் தகவல்கள் மற்றும் பிரத்யேக படங்களை இந்த செய்தியில் காணலாம்.

2018 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மூன்றாம் தலைமுறை மாடலாக வந்திருக்கும் இந்த புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் கார் ஸ்போர்ட்ஸ் செடான் ரகத்தை சேர்ந்தது. தோற்றத்தில் மிக வசீகரமான அம்சங்களுடன் வந்துள்ளது. பகல்நேர விளக்குகளுடன் அட்டகாசமான ஹெட்லைட் அமைப்பு, புதிய க்ரில் அமைப்பு, தனித்துவமான டெயில் லைட் க்ளஸ்ட்டர் இந்த காருக்கு சிறப்பு சேர்க்கிறது.

2018 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த கூபே ரக காரில் ஃப்ரேம் அமைப்பு இல்லாத கதவுகள், மேற்கூரை பின்புறமாக தாழ்ந்து செல்வதும் தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது. இது 5 சீட்டர் மாடலாக கூறப்பட்டாலும், 4 பெரியவர்கள் அமர்ந்து செல்லக்கூடிய அளவில் இடவசதியை பெற்றிருக்கிறது. மேலும், பின் இருக்கையில் ஹெட்ரூம் எனப்படும் தலைப்பகுதிக்கான இடவசதியும் சற்றே குறைவுதான்.

2018 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் 5 ஸ்போக்ஸ் கொண்ட 18 அங்குல அலாய் வீல்கள் சில்வர் வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் கவர்ச்சியான விஷயமாகவே கூறலாம். இந்த காரின் ஏரோடைனமிக்ஸ் மிகச் சிறப்பானதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

2018 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

உட்புறத்தில் மிக தரமான பாகங்களுடன் மிக சிறப்பாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டில் உயர்தர மர அலங்கார தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த காரில் ஜெட் எஞ்சின் வடிவிலான ஏசி வென்ட்டுகள் மெர்சிடிஸ் பென்ஸ் வாரிசு என்பதை பரைசாற்றும் விஷயம்.

2018 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரின் டேஷ்போர்டில் இரண்டு மின்னணு திரை அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் மற்றும் எஸ் க்ளாஸ் கார்களில் இருப்பது போன்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தையும், மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டராகவும் இடம்பெற்றுள்ளது. ஸ்டீயரிங் வீலில் நப்பா லெதர் கவர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

2018 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 242 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 9 ஸ்பீடு டூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

2018 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

0 - 100 கிமீ வேகத்தை 6.2 வினாடிகளில் எட்டிவிடும் திறன் மிகுந்த இந்த கார் மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை வாய்ந்தது. இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் டீசல் எஞ்சின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது என்பதும் முக்கிய சிறப்பு.

2018 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் காரில் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சாலை நிலைகளுக்கு தக்கவாறு, சஸ்பென்ஷன் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் என்பதால், அலுங்கல் குலுங்கல் இல்லாத பயண அனுபவத்தை பெற முடியும்.

2018 மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ரூ.84.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் கார். ஆடி ஏ7, பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் கூபே, மஸேரட்டி கிப்லி மற்றும் போர்ஷே பனமிரா மாடல்களுடன் போட்டி போடும். இந்த ஆண்டில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் 12வது கார் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, November 16, 2018, 15:05 [IST]
English summary
2018 Mercedes Benz CLS Launched in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+