2018 நிஸான் மைக்ரா கார் விற்பனைக்கு அறிமுகம்!!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய நிஸான் மைக்ரா மற்றும் மைக்ரா ஆக்டிவ் கார் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த கார்களில் 6.2 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சி

By Saravana Rajan

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய நிஸான் மைக்ரா மற்றும் மைக்ரா ஆக்டிவ் கார் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

2018 நிஸான் மைக்ரா கார் விற்பனைக்கு அறிமுகம்!!

பண்டிகை காலத்தையொட்டி பல புதிய கார் மாடல்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில், நிஸான் நிறுவனம் தனது மைக்ரா மற்றும் மைக்ரா ஆக்டிவ் கார்களில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து 2018ம் ஆண்டு மாடலாக இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

2018 நிஸான் மைக்ரா கார் விற்பனைக்கு அறிமுகம்!!

2018 நிஸான் மைக்ரா

புதிய நிஸான் மைக்ரா காரில் முன்புறத்தில் இரண்டு ஏர்பேக்குகள் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் நிரந்தர அம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. எனினும், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் பிரேக் அசிஸ்ட் வசதிகள் XL D(O) என்ற பேஸ் வேரியண்ட்டில் இடம்பெறவில்லை.

2018 நிஸான் மைக்ரா கார் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய நிஸான் மைக்ரா காரின் சிவிடி கியர்பாக்ஸ் மாடலின் எக்ஸ்வி வேரியண்ட்டில் ரியர் பார்க்கிங் கேமரா வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று. 6.2 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் ஸ்பாய்லர் மற்றும் ரியர் வியூ கண்ணாடிகளில் இண்டிகேட்டர் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

2018 நிஸான் மைக்ரா கார் விற்பனைக்கு அறிமுகம்!!

2018 நிஸான் மைக்ரா ஆக்டிவ்

புதிய நிஸான் மைக்ரா ஆக்டிவ் காரிலும் முன்புறத்தில் டியூவல் ஏர்பேக்குகள் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. எக்ஸ்வி என்ற டாப் வேரியண்ட்டில் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் பிரேக் அசிஸ்ட் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.

2018 நிஸான் மைக்ரா கார் விற்பனைக்கு அறிமுகம்!!

நிஸான் மைக்ரா கார் போலவே, இந்த மைக்ரா ஆக்டிவ் மாடலிலும் 6.2 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை எக்ஸ்வி வேரியண்ட்டில் கொடுக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் ரியர் ஸ்பாய்லர் இடம்பெறவில்லை.

2018 நிஸான் மைக்ரா கார் விற்பனைக்கு அறிமுகம்!!

எஞ்சின்

இரண்டு கார்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 77 பிஎஸ் பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் மாடல் 68 பிஎஸ் பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

2018 நிஸான் மைக்ரா கார் விற்பனைக்கு அறிமுகம்!!

டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 64 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சின் ஆப்ஷன்களில் எந்த மாற்றங்களும் இல்லை.

2018 நிஸான் மைக்ரா கார் விற்பனைக்கு அறிமுகம்!!

விலை விபரம்

2018 நிஸான் மைக்ரா கார் ரூ.6.19 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து ரூ.7.90 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். 2018 நிஸான் மைக்ரா ஆக்டிவ் கார் ரூ.5.03 லட்சம் முதல் ரூ.5.98 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்ககும்.

Article Published On: Wednesday, August 8, 2018, 17:59 [IST]
English summary
Nissan has launched the 2018 version of the Micra and the Micra Active in India.
மேலும்... #நிஸான் #nissan
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+