டாடா நெக்ஸான் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!!

டாடா நெக்ஸான் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஏஎம்டி [ஆட்டோமேட்டிக்] கியர்பாக்ஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் என இரண்டு ஆப்ஷன்களிலும் கிடைக்கும்.

By Saravana Rajan

டாடா நெக்ஸான் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விலை மற்றும் சிறப்பம்சங்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா நெக்ஸான் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!!

டாடா நெக்ஸான் காரின் ஏஎம்டி [ஆட்டோமேட்டிக்] கியர்பாக்ஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் என இரண்டு ஆப்ஷன்களிலும் கிடைக்கும். பெட்ரோல், டீசல் ஏஎம்டி மாடல்கள் XZA+ என்ற ஒரு வேரியண்ட்டில் மட்டும் அதிகபட்ச வசதிகள் கொண்ட மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய டாடா நெக்ஸான் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் ஏஎம்டி மாடல்கள் மல்டி டிரைவ் ஆப்ஷன்களில்கிடைக்கும், ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என வெவ்வேறு நிலைகளில் எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்ளும் வசதியுடன் வந்துள்ளது. மல்டி டிரைவ் மோடுடன் வரும் முதல் ஏஎம்டி மாடலும் இதுதான்.

டாடா நெக்ஸான் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!!

டாடா நெக்ஸான் காரின் ஏஎம்டி மாடல் எத்னா ஆரஞ்ச் மற்றும் கூரை மீது சோனிக் சில்வர் வண்ணம் தீட்டப்பட்ட புதிய இரட்டை வண்ணக் கலவையில் வந்துள்ளது. புதிய டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் ஏராளமான தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

டாடா நெக்ஸான் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!!

மலைச்சாலைகளில் கார் பின்னோக்கி செல்வதை தடுக்கும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் செல்லும்போது, ஆக்சிலரேட்டர் கொடுக்காமல் காரை குறிப்பிட்ட வேகத்தில் நகர்த்தும் க்ராவ்ல் வசதி,பெப்ஸ் சாவி மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வைத்து ஓட்டுவதற்கான வசதிகளும் உள்ளன.

டாடா நெக்ஸான் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!!

டாடா நெக்ஸான் காரின் பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் எஞ்சினும், டீசல் மாடலில் 1.5 லிட்டர் ரெவோடார்க் எஞ்சினும் பொருத்தப்பட்டுள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா நெக்ஸான் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!!

டாடா நெக்ஸான் காரின் பெட்ரோல் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் ரூ.9.41 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.10.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

டாடா நெக்ஸான் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இல்லை. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் மாடலில் மட்டும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது. மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் டீசல் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது. ஆனால், டியூவி300 டீசல் ஏஎம்டி மாடல் ரூ.12.34 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஏஎம்டி மாடல்கள் மிகச் சரியான விலையில், அதிகபட்ச வசதிகளுடன் சிறந்த தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Article Published On: Wednesday, May 2, 2018, 16:56 [IST]
English summary
Tata Nexon AMT Model Launched In India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+