2018 டொயோட்டா லேண்ட்க்ரூஸர் பிராடோ எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!
கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய டொயோட்டா லேண்ட்க்ரூஸர் பிராடோ எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
கூடுதல் சிறப்புகளுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய டொயோட்டா லேண்ட்க்ரூஸர் பிராடோ எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய டொயோட்டா லேண்ட்க்ரூஸர் பிராடோ எஸ்யூவியின் வெளிப்புற தோற்றம் மற்றும் உட்புறத் தோற்றத்தில் அதிக மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த பிரம்மாண்ட எஸ்யூவியில் புரொஜெக்டர் வடிவிலான எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

எல்இடி பகல்நேர விளக்குகள் மற்றும் எல்இடி டர்ன் இண்டிகேட்டர் ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை. இந்த புதிய மாடல் 60 மிமீ கூடுதல் நீளம் கொண்டதாக இருப்பதுடன், 19 அங்குல அலாய் வீல்கள் மிக கம்பீரமான தோற்றத்தை தருகிறது.

இந்த எஸ்யூவியில் டெயில் லைட்டுகள், பனி விளக்குகள் டிசைன் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ரியர் ஸ்பாய்லர் மற்றும் புதிய ரூஃப் ரெயில்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

உட்புறத்தில் டேஷ்போர்டு வடிவமைப்பில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. 8 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அத்துடன், காரின் இயக்க நிலை குறித்த தகவல்களை அளிப்பதற்காக தனியாக 4.2 அங்குல திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டீயரிங் வீலும் புதிது.

மும்முனை வெப்ப நிலை கட்டுப்பாட்டு வசதியை அளிக்கும் ஏசி சிஸ்டம் இடம்பெற்று இருக்கிறது. க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், 9 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம் என ஏராளமான தொழில்நுட்ப வதிகள் உள்ளன.

இந்த எஸ்யூவியில் 7 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஆக்டிவ் ஹெட்ரெஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டவுன் ஹில் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

இந்த புதிய எஸ்யூவியில் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 171 பிஎச்பி பவரையும், 410 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக கிடைக்கிறது.

புதிய டொயோட்டா லேண்ட்க்ரூஸர் பிராடோ எஸ்யூவி இந்தியாவில் ரூ.92.6 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவி ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டும் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஆடி க்யூ7, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ், லேண்ட்ரோவர் டிஸ்கவரி, வால்வோ எக்ஸ்சி90 உள்ளிட்ட பிரிமியம் எஸ்யூவி மாடல்களுடன் விலையில் போட்டி போடுகிறது.


Click it and Unblock the Notifications








