சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

சொந்தமாக பெரிய கார் வாங்க வேண்டும் என்ற தந்தையின் நீண்ட நாள் கனவை 22 வயது மட்டுமே நிரம்பிய மகன் நிறைவேற்றியுள்ளார். அதுவும் தந்தையின் 50வது பிறந்தநாளில்.

சொந்தமாக பெரிய கார் வாங்க வேண்டும் என்ற தந்தையின் நீண்ட நாள் கனவை 22 வயது மட்டுமே நிரம்பிய மகன் நிறைவேற்றியுள்ளார். அதுவும் தந்தையின் 50வது பிறந்தநாளில். நெகிழ்ச்சிகரமான இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த படு சூட்டிப்பான இளைஞர் தம்மன்னா லோகித். 22 வயது மட்டுமே நிரம்பியுள்ள தம்மன்னா லோகித் சுய தொழில் செய்து வருகிறார். தனது குடும்பத்தினர் மீது தம்மன்னா லோகித்திற்கு அளவு கடந்த பாசம். குறிப்பாக தந்தை மீது இவருக்கு இருக்கும் அன்பு கடலினும் பெரியது.

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

தம்மன்னா லோகித்திற்கு தனது தந்தைதான் சகலமும். ஏனெனில் அவரது தந்தை குடும்பத்திற்காக பல தியாகங்களை செய்தவர். தம்மன்னா லோகித்தின் தந்தை இளைஞராக இருந்த கால கட்டத்தில் பெரிய கார் ஒன்றை எப்படியாவது வாங்க வேண்டும் என்ற ஆசை அவருக்குள் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

ஆனால் ஒரு சராசரி மிடில் க்ளாஸ் குடும்ப இளைஞனுக்கே உரித்தான கடினமான குடும்ப சூழல் தமன்னா லோகித்தின் தந்தையின் ஆசைகளுக்கு முட்டுக்கட்டை போட்டது. குறிப்பாக மகன் தம்மன்னா லோகித்தின் தேவைகளை பூர்த்தி செய்வதில்தான் அவரது கவனம் இருந்தது. அதுதானே ஒரு தந்தைக்கு அழகு!!

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

இதனால் தனது கனவுகளை எல்லாம் மூட்டைக்கட்டி பரணில் ஏற்றி விட்டார் தம்மன்னா லோகித்தின் தந்தை. காலம் கடந்தது. மகன் வளர்ந்து சுய தொழில் செய்ய ஆரம்பித்ததும், அவரது பாரங்கள் சற்றே குறைய தொடங்கின. இதனால் பெரிய கார் என்ற ஆசை அவருக்குள் மீண்டும் துளிர் விட தொடங்கியது.

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

ஆனால் காலமும், சூழ்நிலையும் அதற்கு கை கூடி வரவில்லை. என்றாலும் தந்தையில் ஆசைகள் குறித்து தம்மன்னா லோகித் அறிந்து வைத்திருந்தார். இந்த சூழலில் தம்மன்னா லோகித்தின் தந்தையினுடைய 50வது பிறந்தநாள் வந்தது.

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

அந்த நாளில் தனது தந்தையின் கனவை நிறைவேற்றி விட வேண்டும் என உறுதி பூண்டார் தம்மன்னா லோகித். இதற்காக அவர் தேர்வு செய்த கார் ஹூண்டாய் வெர்னா. அந்த காரை தனது தந்தைக்கு தம்மன்னா லோகித் பரிசளித்த விதம்தான் உணர்ச்சிபூர்வமானது.

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

தந்தையின் 50வது பிறந்தநாளில் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க வேண்டும் என்பதுதான் தம்மன்னா லோகித்தின் எண்ணம். இதற்காக ஹூண்டாய் வெர்னா காரை வாங்கி, அதை முன்கூட்டியே ஓரிடத்தில் நிறுத்தி விட்டார் தம்மன்னா லோகித்.

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

பின்னர் தான் வழங்கவுள்ள பரிசு காத்து கொண்டிருந்த இடத்திற்கு தந்தையின் கண்களை மூடி தம்மன்னா லோகித் அழைத்து வந்தார். தம்மன்னா லோகித்தின் தந்தை இறுதியாக கண்களை திறந்ததும் அவரது நீண்ட நாள் கனவான சொந்த காரின் சாவி அவரிடம் வழங்கப்பட்டது.

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

அந்த நேரத்தில் தம்மன்னா லோகித்தின் குடும்பத்தினரும், நண்பர்களும் அங்கு குழுமியிருந்தனர். அவர்களுக்கும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. பின்னர் தம்மன்னா லோகித்தின் தந்தைக்கு பிறந்த நாள் கேக் வெட்டப்பட்டது. அந்த நேரத்தில் அனைவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் எட்டி பார்க்கிறது.

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

இந்த நிகழ்வுகளை எல்லாம் ஒன்று விடாமல் பதிவு செய்து யூ டியூப்பில் வெளியிட்டுள்ளார் தம்மன்னா லோகித். கண்களில் கண்ணீர் வரவழைக்க கூடிய அந்த நெகிழ்ச்சிப்பூர்வமான வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

ஹூண்டாய் நிறுவனத்தின் முதன்மையான கார்களில் ஒன்று வெர்னா. மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி உள்ளிட்ட கார்களுடன் வெர்னா போட்டி போடுகிறது. 2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்களுடன் ஹூண்டாய் வெர்னா விற்பனைக்கு வருகிறது.

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

இதில், 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 99 பிஎச்பி பவர், 132 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 121 பிஎச்பி பவர் மற்றும் 151 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. வெர்னா காரில் ஒரே ஒரு டீசல் இன்ஜின் ஆப்ஷனை மட்டும் ஹூண்டாய் நிறுவனம் வழங்குகிறது.

சொந்தமாக பெரிய கார்.. தந்தையின் நீண்ட நாள் கனவை 50வது பிறந்த நாளில் நிறைவேற்றிய 22 வயது மகன்

1.6 லிட்டர் டீசல் இன்ஜினான இது அதிகபட்சமாக 126 பிஎச்பி பவர் மற்றும் 260 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

2017 ஹூண்டாய் வெர்னா காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

Article Published On: Friday, October 5, 2018, 16:02 [IST]
English summary
22 Year Old Son Gifts Father a Hyundai Verna on His 50th Birthday. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+