விரைவில் அறிமுகமாகும் முத்தான 3 புதிய கார் மாடல்கள் - விபரம்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஏராளமான புதிய கார், பைக் மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி காத்திருக்க செய்திருக்க

பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஏராளமான புதிய கார், பைக் மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி காத்திருக்க செய்திருக்கும் 3 புதிய கார் மாடல்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

விரைவில் அறிமுகமாகும் முத்தான 3 புதிய கார் மாடல்கள் - விபரம்!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் படங்கள், விபரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுவிட்டன. வரும் 23ந் தேதி இந்த கார் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. பெயர் மட்டும்தான் பழசு. மற்ற அனைத்துமே புத்தம் புதிய கார் மாடலாக வெளிவருகிறது புதிய சான்ட்ரோ கார். பட்ஜெட் விலையில் அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் இந்த கார் வர இருக்கிறது.

விரைவில் அறிமுகமாகும் முத்தான 3 புதிய கார் மாடல்கள் - விபரம்!

இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் கமாண்ட் வசதி, மிரர் லிங்க் தொழில்நுட்பம், ரியர் ஏசி வென்ட்டுகல், ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கும். டியூவல் ஏர்பேக்குகள் ஆப்ஷனலாகவும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வசதியும் இடம்பெற இருக்கிறது.

விரைவில் அறிமுகமாகும் முத்தான 3 புதிய கார் மாடல்கள் - விபரம்!

இந்த காரில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வருகிறது. சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் மாடலிலும் கிடைக்கும். ரூ.3.70 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அறிமுகமாகும் முத்தான 3 புதிய கார் மாடல்கள் - விபரம்!

புதிய மாருதி எர்டிகா

அடுத்த மாதம் 21ந் தேதி புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த கார் வடிவமைப்பிலும், வசதிகளிலும் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய முக அமைப்பு, டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்க்கும் அம்சமாக இருக்கும். மாருதி எர்டிகா காரின் மூன்றாவது வரிசை இருக்கை நெருக்கடியாக இருந்தது என்ற குறையை போக்கும் விதமாக, இடவசதி அதிகரிக்கப்பட்டு வருகிறது.

விரைவில் அறிமுகமாகும் முத்தான 3 புதிய கார் மாடல்கள் - விபரம்!

இந்த காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல அலாய் சக்கரங்கள், 7 அங்குல தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி வசதிகள் இடம்பெற்றிருக்கும். டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட இருக்கிறது.

விரைவில் அறிமுகமாகும் முத்தான 3 புதிய கார் மாடல்கள் - விபரம்!

புதிய மாருதி எர்டிகா காரின் ஆகப்பெரிய மாற்றங்களில் ஒன்று, புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். டீசல் மாடலில் அதே 1.3 லிட்டர் எஞ்சினுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் புதிய மாருதி எர்டிகா கார் எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அறிமுகமாகும் முத்தான 3 புதிய கார் மாடல்கள் - விபரம்!

மஹிந்திரா ஒய்-400 பிரிமீயம் எஸ்யூவி

புதிய தலைமுறை சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி இந்தியாவில் மஹிந்திரா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. மஹிந்திரா ஒய்-400 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி மாடல் எக்ஸ்யூவி700 என்ற பெயரில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றத்தில் மிக பிரம்மாண்டமாகவும், அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் வர இருக்கிறது.

விரைவில் அறிமுகமாகும் முத்தான 3 புதிய கார் மாடல்கள் - விபரம்!

இந்த எஸ்யூவியானது லேடர் ஃப்ரேம் சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், பழைய மாடலைவிட வடிவத்தில் பெரிய காராக மாறி இருக்கிறது. இந்த எஸ்யூவியில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 9.2 அங்குல எச்டி டச்ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 7 அங்குல எல்சிடி திரையுடன் கூடிய டிஜிட்டர் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கூல்டு சீட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

விரைவில் அறிமுகமாகும் முத்தான 3 புதிய கார் மாடல்கள் - விபரம்!

புதிய மஹிந்திரா ஒய்-400 எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 185 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனலாக இருக்கும். போட்டியாளர்களை விட மிக சவாலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அறிமுகமாகும் முத்தான 3 புதிய கார் மாடல்கள் - விபரம்!

டாடா டியாகோ மற்றும் டிகோர் ஜேடிபி

மேற்கண்ட மூன்று புதிய கார் மாடல்கள் தவிர்த்து, டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் ஜேடிபி என்ற பெர்ஃபார்மென்ஸ் மாடல்கள் வரும் 23ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கோவையை சேர்ந்த ஜெயம் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் இந்த பெர்ஃபார்மென்ஸ் மாடல்களை உருவாக்கி இருக்கிறது. சாதாரண டியாகோ மற்றும் டிகோர் மாடல்களிலிருந்து வேறுபடுத்தும் விதத்தில் ஏராளமான ஆக்சஸெரீகள் பயன்படுத்தப்பட்டு வேறுபடுத்தப்பட்டுள்ளன.

விரைவில் அறிமுகமாகும் முத்தான 3 புதிய கார் மாடல்கள் - விபரம்!

இந்த கார்களில் கருப்பு வண்ண பின்னணியுடன் ஹெட்லைட்டுகள், பானட்டில் ஏர் இன்டேக் அமைப்பு, கருப்பு வண்ண க்ரில் அமைப்பு, புதிய பம்பர், க்ரில் அமைப்பில் ஜேடிபி பிராண்டு எழுத்துகள், சைடு ஸ்கர்ட்டுகள், 15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், இரட்டை புகைப்போக்கி குழாய்கள் ஆகியவை வெளிப்புறத்தின் முக்கிய அம்சங்கள். உட்புறத்தில் சிவப்பு வண்ண தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய லெதர் இருக்கைகள், அலுமினியம் பெடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

விரைவில் அறிமுகமாகும் முத்தான 3 புதிய கார் மாடல்கள் - விபரம்!

இந்த இரண்டு கார்களிலுமே 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தவை. இந்த கார் மாடல்கள் 5 ஸ்பீடு மேனுவல் கிய்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும். பெர்ஃபார்மென்ஸ் ஹேட்ச்பேக் கார்களில் அதிக சக்திவாய்ந்த மாடல்களாகவும், குறைவான விலையிலும் இந்த மாடல்கள் வர இருப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Most Read Articles
English summary
Here we list out 3 exciting new cars to be launched in India by next two months.
Story first published: Wednesday, October 17, 2018, 13:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X