TRENDING ON ONEINDIA
-
எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
-
லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...
-
LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்!
-
இந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க
-
"கடவுள் இல்லை" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்!
-
கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்!
-
இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?
-
பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது
இந்திய ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் புதிய சரித்திரத்தை நிகழ்த்தியது மாருதி சுஸுகி டிசையர்..
விற்பனையில் சக்கை போடு போட்டு வரும் மாருதி சுஸுகி டிசையர் கார், இந்திய ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் புதிய வரலாறு ஒன்றை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மூன்றாவது தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. லான்ச் ஆனது முதலே, மாருதி சுஸுகி டிசையர் கார் மிக அதிகளவில் விற்பனையாகி வருகிறது.
இதன்மூலம் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் மாருதி சுஸுகி டிசையர் வெகு விரைவிலேயே முதல் இடத்தை பிடித்தது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்தை பிடித்த செடான் வகை கார் என்றால், அது மாருதி சுஸுகி டிசையர்தான்.
அத்துடன் முதல் இடத்தை நீண்ட காலம் தக்க வைத்து கொண்ட செடான் வகை கார் என்ற பெருமையும் மாருதி சுஸுகி டிசையருக்கு உள்ளது. இந்த சூழலில் மாருதி சுஸுகி டிசையர் கார் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
3 லட்சம் டிசையர் கார்கள் விற்பனை என்பதுதான் அந்த புதிய சாதனை. வெறும் 17 மாதங்களில் 3 லட்சம் டிசையர் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் துறை வரலாற்றிலேயே 3 லட்சம் என்ற மைல்கல்லை மிக வேகமாக எட்டிய கார் மாருதி சுஸுகி டிசையர்தான்.
லான்ச் ஆனது முதல் சராசரியாக ஒரு மாதத்திற்கு 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிசையர் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த சாதனையை படைக்க உதவிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி நிறுவனம் நன்றி தெரிவித்து கொண்டுள்ளது.
டிசையர் காரின் டாப் வேரியண்டை 25 சதவீத வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் டிசையர் காரின் ஆட்டோமெட்டிக் வேரியண்ட்டை ஏறத்தாழ 20 சதவீத வாடிக்கையாளர்கள் தேர்வு செய்கின்றனர்.
MOST READ: க்ராஷ் டெஸ்ட்டில் சொதப்பியது புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்!
மாருதி சுஸுகி டிசையர் காரில், 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்தது.
அதே நேரத்தில் டிசையர் காரின் டீசல் வேரியண்ட்களில், 1.3 லிட்டர் மல்டிஜெட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவர் மற்றும் 190 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது.
இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 22 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும். அதே நேரத்தில் மாருதி சுஸுகி டிசையர் காரின் டீசல் வெர்ஷன்கள் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 28.4 கிலோ மீட்டர் மைலேஜை வழங்குகின்றன.
இந்திய மார்க்கெட்டில் ஃபோர்டு ஆஸ்பயர், ஹூண்டாய் எக்ஸ்சென்ட் மற்றும் ஃபோக்ஸ்வேகன் அமியோ உள்ளிட்ட கார்களுக்கு மாருதி சுஸுகி டிசையர் கடுமையான போட்டியை வழங்கி வருகிறது.
புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் 2018 காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.