இந்தாண்டு விற்பனை வர தயாராகி வரும் குறைந்த விலை ஏஎம்டி கார்களின் பட்டியல்

இந்தியாவில் 2018ம் ஆண்டிற்குள் விற்பனைக்கு வரவுள்ள பல்வேறு நிறுவனங்களின் குறைந்த விலை ஏ.எம்.டி கார்களை பற்றி இந்த செய்தியில் விரிவாக காணலாம்.

By Balasubramanian

இந்தியாவில் 2018ம் ஆண்டிற்குள் விற்பனைக்கு வரவுள்ள பல்வேறு நிறுவனங்களின் குறைந்த விலை ஏ.எம்.டி கார்களை பற்றி இந்த செய்தியில் விரிவாக காணலாம்.

இந்தாண்டு விற்பனை வர தயாராகி வரும் குறைந்த விலை ஏ.எம்.டி கார்களின் பட்டியல்

இந்தியாவில் ஏஎம்டி கார்களுக்கான மவுசு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. ஏஎம்டி என்றால் ஆட்டோமெட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் என்பது தான் அதாவது. மேனுவல் கியரை நாம் கார் இயக்கும் வேகம், தன்மை ஆகியவற்றை பொருத்து நம் காருக்க தேவையான கியரை தானாக செட் செய்யும் சிஸ்டம் தான் ஏஎம்டி. சிலர் அதை ஆட்டோ கியர் என கூறுகின்றனர்.

இந்தாண்டு விற்பனை வர தயாராகி வரும் குறைந்த விலை ஏ.எம்.டி கார்களின் பட்டியல்

ஆட்டோ கியர் என்ற வார்த்தையை கேள்விபட்டதும் சிலர் கியர் இல்லாத கார் என்று கூறுகின்றனர். ஆனால் தவறு இந்த காரிலும் கியர்கள் உள்ளது. ஆனால் அதை நாம் மாற்ற தேவையில்லை தானாக நமது தேவையை உணர்ந்து மாறிக்கொள்ளும். அந்த வகையில் ஏஎம்டி கார்கள் ஓட்டுவதற்கு செளகரியமாக உள்ளதால் இந்தியர்கள் அந்த ரக கார்களை விரும்பு கின்றனர்.

இந்தாண்டு விற்பனை வர தயாராகி வரும் குறைந்த விலை ஏ.எம்.டி கார்களின் பட்டியல்

கடந்த வாரம் விற்பனைக்க வந்த டொயோட்டா யாரீஸ் கார்கள் இது வரை 5000க்கும் மேற்பட்ட கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதில் 60 சதவித்திற்கும் மேலான கார்கள் ஆட்டோ கியர் ஆப்ஷன் உள்ள கார்களை தான் புக் செய்துள்ளனர்.

இந்தாண்டு விற்பனை வர தயாராகி வரும் குறைந்த விலை ஏ.எம்.டி கார்களின் பட்டியல்

இந்த வகையில் இன்னும் 6 மாதங்களுக்குள் அதாவது 2018ம் ஆண்டே சில குறைந்த விலை ஏஎம்டி கார்கள் விற்பனைக்கு வர தயார்ப்படுத்தப்பட்டு வருகிறது. புதிதாக குறைந்த விலை ஏஎம்டி கார் வாங்குபவர்கள் இந்த கார்களையும் உங்கள் பட்டியலில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தாண்டு விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள ஏ.எம்டி கார்களின் பட்டியலை கீழே பார்ப்போமா?

இந்தாண்டு விற்பனை வர தயாராகி வரும் குறைந்த விலை ஏ.எம்.டி கார்களின் பட்டியல்

ஹூண்டாய் சான்ட்ரோ ஏஎம்டி

இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் புதிய சான்டரோ காரில் ஏ.எம்.டி ஆப்ஷன்களுடன் அறிமுகமாகவுள்ளது. இந்த கார் இயான் மற்றும் கிராண்ட் ஐ10 ஆகிய கார்களுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தாண்டு விற்பனை வர தயாராகி வரும் குறைந்த விலை ஏ.எம்.டி கார்களின் பட்டியல்

ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து முதன்முதலாக வெளிவரும் ஏஎம்டி கார் இது தான். இந்த காரின் விலை ரூ 3 லட்சத்தில் இருந்து ஆரம்பம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாப் என்ட் மாடலை பொருத்தவரை ரூ 5 லட்சம் வரை விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

இந்தாண்டு விற்பனை வர தயாராகி வரும் குறைந்த விலை ஏ.எம்.டி கார்களின் பட்டியல்

புதிய மாருதி வேகன் ஆர்

வேகன் ஆர் காரின் புதிய வேர்ஷனின் டிசைன்கள் எல்லாம் ரெடியாக உள்ளது. காரை தயராரித்து இந்தாண்டு வரவிருக்கும் ஏதோ ஒரு பண்டிகை காலத்தில் இந்த காரை வெளியிட்டு விடலாம் என அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கே10 இன்ஜினின் அப்டேடட் வேர்ஷனாக இந்த காரின் இன்ஜின் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் ஏஎம்டி ஆப்ஷனுடன் விற்பனைக்கும் என ஏற்கனவே அந்நிறுவனம் அறிவித்து விட்டது.

இந்தாண்டு விற்பனை வர தயாராகி வரும் குறைந்த விலை ஏ.எம்.டி கார்களின் பட்டியல்

மேலும் இந்த கார் வழக்கமான வேகன் ஆர் கார்களை விட உயரமாகவும், 7 பேர் அமர்ந்து செல்லக்கூடிய வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பெரிய குடும்பத்தினரையும், டாக்ஸி நிறுவனங்களின் தேவைகளையும் மனிதில் வைத்து இந்த கார் தயார் செய்யப்பட்டுள்ளது. சிட்டிக்குள் ஓட்ட இந்த கார் சிறந்த காராக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்தாண்டு விற்பனை வர தயாராகி வரும் குறைந்த விலை ஏ.எம்.டி கார்களின் பட்டியல்

மஹேந்திரா கேயூவி 100 பெட்ரோல் ஏஎம்டி

மஹேந்திரா கேயூவி 100 பெட்ரோல் வேரியன்ட் கார் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த காரும் ஏஎம்டி ஆப்ஷனுடன் விற்பனைக்கு வருகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அது 82 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த கார் மாருதி இக்னிஷ் பெட்ரோல் வேரியன்ட் ஏஎம்டி காருக்கு நேரடி போட்டியாக திகழ்கிறது.

இந்தாண்டு விற்பனை வர தயாராகி வரும் குறைந்த விலை ஏ.எம்.டி கார்களின் பட்டியல்

மஹேந்திரா கேயூவி 100 டீசல் ஏஎம்டி

மஹேந்திரா கேயூவி 100 காரின் டீசல் வேரியன்டும் வெளியாக இருக்கிறது. இந்த காரும் ஏ.எம்டி ஆப்ஷன்களுடன் வெளியாகிறது. இந்த கார் 1.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 77 பிஎச்பி பவரையும் 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுகிறது. மஹேந்திரா நிறுவனத்தின் வரும் குறை்நத விலை ஏ.எம்.டி கார் இது தானாம்.

இந்தாண்டு விற்பனை வர தயாராகி வரும் குறைந்த விலை ஏ.எம்.டி கார்களின் பட்டியல்

மைக்ரோ எஸ்.யூ.வி கார்களை பொருத்தவரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு உள்ளது. இதனால் புதிதாக வெளியாக உள்ள மஹேந்திரா 100 ஏஎம்டி கார்களால் பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டு வேரியன்ட்களிலும் விற்பனை அதிகரிக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
4 upcoming AMT cars in 2018 – New Maruti WagonR to Hyundai Santro. Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X