இந்தியாவில் இந்த மாதிரி ஜீப்பை நீங்க இதுக்கு முன்னாடி பாத்திருக்கீங்களா?

இந்தியாவில் ஜீப் ரசிகர்கள் அதிகம். ஒரு காலத்தில் பெரும் பணக்காரர்கள் என்றாலம் ஜீப் வைத்திருக்க வேண்டும், ஜமீந்தாரர்கள் எல்லாம் ஜீப் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருந்தது.

By Balasubramanian

இந்தியாவில் ஜீப் ரசிகர்கள் அதிகம். ஒரு காலத்தில் பெரும் பணக்காரர்கள் என்றாலம் ஜீப் வைத்திருக்க வேண்டும், ஜமீந்தாரர்கள் எல்லாம் ஜீப் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருந்தது. இதனால் பலர் ஜீப்களை வாங்க துவங்கினர். பலர் ஜீப் வாங்கியதால் அதில் சிலர் தங்கள் ஜீப்கள் வித்தியாசமாக தெரிவதற்காக அதை மாடிபிகேஷன் செய்ய துவங்கினர். அவ்வாறு இந்தியாவில் வித்தியாசமாக மாடிபிகேஷன் செய்யப்பட்ட பைக்கை கீழே காணலாம்.

இந்தியாவில் ஜீப் ரசிகர்கள் அதிகம்

ஜீப் ராட்

ஆந்திர ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் தனது வில்லீஸ் எம்பி மாடல் ஜீப்பை ஜீப் ராட் போன்ற ஜீப்பாக மாற்றியுள்ளார். இந்த ஜீப் 6 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்டது. இது டொயோட்டா சூப்பரா முதல் தலைமுறை காரில் பயன்படுத்தப்பட்ட இன்ஜின்.

இந்தியாவில் ஜீப் ரசிகர்கள் அதிகம்

இந்த ஜீப் ஆட்டோ கியர் தொழிற்நுட்பத்தில் இயங்க கூடியது. இந்த ஜீப் 280 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடியது. இந்த ஜீப்பில் ஸ்போட்ஸ் மப்ளர் போன்ற சில ஆப்ஷன்கள் உள்ளன. இதை நீங்கள் கீழ உள்ள வீடியோவில் பார்க்கலாம்.

லோ ரைடர் ஜீப்

இந்த ஜீப் முற்றிலும் கருப்பு நிற தீம்மால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் ஜீப்பை மாற்றியமைத்துள்ளது. அந்த ஜீப்பில் இருந்து டோர்கள் அகற்றப்பட்டு மேற்பகுதியில் உள்ள கூரைகளும் கழற்றப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஜீப் ரசிகர்கள் அதிகம்

இந்த ஜீப்பில் ஆடியோ சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஆடியோ சிஸ்டத்தில் கிக்கர் வசதியும் செய்யப்பட்டள்ளது. இந்த ஜீப்பில் பொருத்தப்பட்டுள்ள டயர் பெரிதாக இருப்பது தான் இந்த ஜீப்பின் லுக். இது குறித்து வீடியோவை நீங்கள் கீழே காணுங்கள்

6x6 ஜீப்

இந்த 6x6 ஜீப் பஞ்சாப்பில் மாடிபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. இது 6 வீல் கொண்ட ஜீப் பெரும்பாலும் இதை ராகணுவ பயன்பாட்டிற்காக பயன்படுத்துவர். இதே போன்ற ஜீப்பை மெர்சிடியஸ் நிறுவனம் 6x6 ஜி63 ஏஎம்ஜி என்ற ஜீப்பை வெளியிட்டது. ஆனால் இந்த ஜீப்பில் உள்ள 6 வீல்கள் கஸ்டமைஸ்டு செய்யப்பட்டது.

இந்தியாவில் ஜீப் ரசிகர்கள் அதிகம்

இந்த ஜீப் ஆன்லைனில் ரூ 7 லட்சத்திற்கு விற்பனைக்கு வந்தது. இந்த விலை மிகக்குறைவு தான் இவ்வளவு கஸ்டமைஸ்வடு செய்யப்பட்ட வாகனத்திற்கு இந்த விலை விலை குறைவு தான். இந்த ஜீப் குறித்த மேலும் விபரங்களக்கு கீழே உள்ள வீடியோவை பாருங்கள்

டம்பிளிபீ

இந்த டம்பிளி பீ ஜீப் டிரான்ஸ் பார்பார்மர் என்ற ஹாலிவுட் படம் மூலம் பரபலமானது. இந்த ஜீப்பிற்கு மஞ்சள் நிறம் மற்றும் 4x4 கஸ்டம் மாடிபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. டிரான்பார்மர் படத்தில் பம்பிளிபீ என்ற பெயரில் இந்த ஜீப் புகழ் பெற்றது.

இந்தியாவில் ஜீப் ரசிகர்கள் அதிகம்

இந்த பைக் ஆப் ரோடு பயணத்திற்கு மிகவும் பெயர் பெற்றது. புதிய வீல்கள்க, அகலமான ரப்பர் இவற்றிற்கு தான் இந்த ஜீப் பரபலம். சிறிய மாடிபிகேஷன் செய்திருந்தாலும் சிறப்பான லுக்கை பெற்ற ஜீப் இது.

இந்தியாவில் ஜீப் ரசிகர்கள் அதிகம்

உலகின் சிறிய ஜீப்

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பவர் சிங் என்ற மெக்கானிக் தான் இந்த ஜீப்பை டிசைன் செய்துள்ளார். இது தான் உலகின் சிறிய ரக ஜீப் ஸ்கூட்டர் இன்ஜினை கொண்டு செய்யப்பட்ட இந்த ஜீப்பை வில்லீஸ் ஜீப் போல இவர் டிசைன செய்துள்ளார்.

மொத்தமே 3 அடி உயரம் உள்ள இந்த ஜீப் அதிகபட்சமாக 60 கி.மீ. வேகத்தில் செல்லும், இதே போல 7 ஜீப்களை செய்து அவர் விற்பனை செய்துள்ளார். மேலும் 6 ஜீப்களை செய்ய இவருக்க ஆர்டர்கள் குவிந்துள்ளன. மூர்த்தி சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரிசு தான் போல

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
5 CRAZILY modified Jeeps of India.Read in tamil
Story first published: Saturday, May 26, 2018, 19:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X