யுத்தம் இனிதான் ஆரம்பம்.. ஜீப் காம்பஸ், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக லான்ச் ஆகும் 6 கார்கள்

ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா ஆகிய எஸ்யூவி கார்கள், இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன. ஆனால் இவ்விரு கார்களுக்கும், வருங்காலத்தில் கடும் சவால் காத்திருக்கிறது.

By Arun

ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா ஆகிய எஸ்யூவி கார்கள், இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன. ஆனால் இவ்விரு கார்களுக்கும், வருங்காலத்தில் கடும் சவால் காத்திருக்கிறது. ஏனெனில், ஜீப் காம்பஸ், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், 6 புதிய எஸ்யூவி கார்கள், இந்தியாவில் லான்ச் ஆகவுள்ளன. அந்த கார்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

யுத்தம் இனிதான் ஆரம்பம்.. ஜீப் காம்பஸ், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக லான்ச் ஆகும் 6 எஸ்யூவி கார்கள்

ஸ்கோடா கரோக் (Skoda Karoq)

ஸ்கோடா இந்தியா நிறுவனம் யெட்டி (Yeti) கார் தயாரிப்பை கைவிட்டுள்ளது. அதற்கு பதிலாக கரோக் காம்பேக்ட் எஸ்யூவியை ரீப்ளேஸ் செய்ய ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஸ்கோடா கரோக் கார், இந்தியாவில் அடுத்த ஆண்டு லான்ச் ஆகவுள்ளது.

யுத்தம் இனிதான் ஆரம்பம்.. ஜீப் காம்பஸ், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக லான்ச் ஆகும் 6 எஸ்யூவி கார்கள்

இந்திய சாலைகளில் தற்போது கரோக் காரை சோதனை செய்து வருகிறது ஸ்கோடா நிறுவனம். இது தொடர்பான ஸ்பை படங்கள் சமீபத்தில் வெளியாயின. யெட்டி காருக்கு இது மிகச்சிறந்த மாற்றாக இருக்கும் என கருதப்படுகிறது.

யுத்தம் இனிதான் ஆரம்பம்.. ஜீப் காம்பஸ், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக லான்ச் ஆகும் 6 எஸ்யூவி கார்கள்

இந்தியாவிற்கான ஸ்கோடா கரோக் கார், 2.0 லிட்டர் டிடிஐ (TDI) டீசல் இன்ஜினுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் 1.8 லிட்டர் டிஎஸ்ஐ (TSI) டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனையும் ஸ்கோடா நிறுவனம் வழங்கும் என கூறப்படுகிறது.

யுத்தம் இனிதான் ஆரம்பம்.. ஜீப் காம்பஸ், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக லான்ச் ஆகும் 6 எஸ்யூவி கார்கள்

டாடா ஹாரியர் (Tata Harrier)

டாடா நிறுவனத்தின் பிரீமியம் ஹாரியர் எஸ்யூவி கார், 2018ம் ஆண்டின் இறுதியில், விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரை விரைவாக விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை டாடா நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது.

யுத்தம் இனிதான் ஆரம்பம்.. ஜீப் காம்பஸ், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக லான்ச் ஆகும் 6 எஸ்யூவி கார்கள்

டாடா ஹாரியர் காரில், அதிகபட்சமாக 140 பிஎச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய, 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

யுத்தம் இனிதான் ஆரம்பம்.. ஜீப் காம்பஸ், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக லான்ச் ஆகும் 6 எஸ்யூவி கார்கள்

ஹூண்டாய் டக்ஸான் ஃபேஸ்லிப்ட் (Hyundai Tucson Facelift)

ஹூண்டாய் டக்ஸான் ஃபேஸ்லிப்ட் கார், 2019ம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் லான்ச் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவி கார், அதன் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் என இரண்டிலும் மாற்றங்களை சந்திக்கவுள்ளது.

யுத்தம் இனிதான் ஆரம்பம்.. ஜீப் காம்பஸ், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக லான்ச் ஆகும் 6 எஸ்யூவி கார்கள்

ஆனால் தற்போது உள்ள அதே 2.0 லிட்டர் பெட்ரோல், 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள்தான் வழங்கப்படும் என தெரிகிறது. இதில், பெட்ரோல் இன்ஜின் 155 பிஎச்பி பவர், 192 என்எம் டார்க் திறனையும், டீசல் இன்ஜின் 185 பிஎச்பி பவர், 400 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வல்லமை வாய்ந்தது.

யுத்தம் இனிதான் ஆரம்பம்.. ஜீப் காம்பஸ், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக லான்ச் ஆகும் 6 எஸ்யூவி கார்கள்

அதேபோல் டக்ஸான் ஃபேஸ்லிப்ட் கார், 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டக்ஸான் ஃபேஸ்லிப்ட் உள்ளிட்ட சில மாடல்களை விற்பனை செய்வதற்காக, மாருதி சுஸூகி நெக்ஸா போன்ற பிரீமியம் டீலர்ஷிப்களை திறக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

யுத்தம் இனிதான் ஆரம்பம்.. ஜீப் காம்பஸ், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக லான்ச் ஆகும் 6 எஸ்யூவி கார்கள்

ஹோண்டா ஹெச்ஆர்-வி (Honda HR-V)

ஹோண்டா நிறுவனம் 6 புதிய கார்களை இந்தியாவில் லான்ச் செய்யவுள்ளது. இதில், ஹெச்ஆர்-வி எஸ்யூவி காரும் ஒன்று. ஹோண்டா நிறுவனம், ஹெச்ஆர்-வி எஸ்யூவி காரை, இந்தியாவில் அடுத்த ஆண்டு லான்ச் செய்ய தயாராகி வருகிறது.

யுத்தம் இனிதான் ஆரம்பம்.. ஜீப் காம்பஸ், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக லான்ச் ஆகும் 6 எஸ்யூவி கார்கள்

ஹோண்டா நிறுவனத்தின் இந்திய லைன் அப்பில், பிஆர்-வி (BR-V) மற்றும் சிஆர்-வி (CR-V) எஸ்யூவி கார்களுக்கு இடையேயான இடைவெளியை, ஹெச்ஆர்-வி நிரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா நிறுவனம் ஜாஸ் காரின் பிளாட்பார்மை அடிப்படையாக வைத்து, ஹெச்ஆர்-வி காரை உருவாக்கியுள்ளது.

யுத்தம் இனிதான் ஆரம்பம்.. ஜீப் காம்பஸ், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக லான்ச் ஆகும் 6 எஸ்யூவி கார்கள்

ஹோண்டா ஹெச்ஆர்-வி காரில் பொருத்தப்பட்டுள்ள 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக, 142 பிஎச்பி பவர் மற்றும் 172 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி (CVT) டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.

யுத்தம் இனிதான் ஆரம்பம்.. ஜீப் காம்பஸ், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக லான்ச் ஆகும் 6 எஸ்யூவி கார்கள்

கியா எஸ்பி எஸ்யூவி (Kia SP SUV)

தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம், 2019ம் ஆண்டில்தான், இந்திய மார்க்கெட்டில் அதிகாரப்பூர்வமாக நுழையவுள்ளது. முதலில் 5 சீட்டர் பிரீமியம் எஸ்யூவி காரை கியா நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுத்தம் இனிதான் ஆரம்பம்.. ஜீப் காம்பஸ், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக லான்ச் ஆகும் 6 எஸ்யூவி கார்கள்

இந்த எஸ்யூவி கார், 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்ட, எஸ்பி கான்செப்ட்டை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காருடன், இது தனது பிளாட்பார்மை பகிர்ந்து கொள்கிறது.

யுத்தம் இனிதான் ஆரம்பம்.. ஜீப் காம்பஸ், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக லான்ச் ஆகும் 6 எஸ்யூவி கார்கள்

இதுதவிர மெக்கானிக்கல் ஆப்ஷன்களையும், ஹூண்டாய் கிரெட்டாவுடன், கியா எஸ்பி பகிர்ந்து கொள்கிறது. எனவே இந்த காரில், 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுத்தம் இனிதான் ஆரம்பம்.. ஜீப் காம்பஸ், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக லான்ச் ஆகும் 6 எஸ்யூவி கார்கள்

டொயோட்டா சி-ஹெச்ஆர் (Toyota C-HR)

இளம் வயது நபர்களை குறி வைத்து, டொயோட்டா சி-ஹெச்ஆர் களமிறக்கப்படுகிறது. இதன் நீளம் 4360 எம்எம். அகலம் 1795 எம்எம். உண்மையில் டொயோட்டா நிறுவனத்தின் மற்றொரு காரான கொரெல்லாவை (Corolla) காட்டிலும், சி-ஹெச்ஆர் சற்றே பெரியது.

யுத்தம் இனிதான் ஆரம்பம்.. ஜீப் காம்பஸ், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக லான்ச் ஆகும் 6 எஸ்யூவி கார்கள்

டொயோட்டா சி-ஹெச்ஆர் காரில், 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 114 பிஎச்பி பவர் மற்றும் 185 என்எம் டார்க் திறனை உருவாக்கும் சக்தி வாய்ந்தது. இதுதவிர 1.8 லிட்டர் naturally aspirated பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனையும் இந்த கார் பெறவுள்ளது.

யுத்தம் இனிதான் ஆரம்பம்.. ஜீப் காம்பஸ், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக லான்ச் ஆகும் 6 எஸ்யூவி கார்கள்

டொயோட்டா சி-ஹெச்ஆர் கார் அதிக நம்பகத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. அத்துடன் டொயோட்டாவுக்கு என உள்ள பில்டு க்வாலிட்டி (build quality) உள்ளிட்ட காரணங்களால், அதிக அளவிலான வாடிக்கையாளர்களை சி-ஹெச்ஆர் கார் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

English summary
6 Upcoming SUV Cars Expected to Launch Soon in India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X