அள்ளி குவியும் ஆடி தள்ளுபடி..!; லட்ச கணக்கில் கார்களின் விலை குறைகிறது
ஆடி மாதத்தை முன்னிட்டு கார் நிறுவனங்கள் தங்கள் கார்களின் விற்பனைகளை அதிகரிக்க தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்த மாதம் மட்டும் 12 கார்கள் சுமார் 1 லட்சத்திற்கு மேல் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
ஆடி மாதத்தை முன்னிட்டு கார் நிறுவனங்கள் தங்கள் கார்களின் விற்பனைகளை அதிகரிக்க தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்த மாதம் மட்டும் 12 கார்கள் சுமார் 1 லட்சத்திற்கு மேல் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அந்த கார்களின்பட்டியலை இங்கே காணலாம்.

ரெனோ கேப்சர் - ரூ 2 லட்சம் தள்ளுபடி
இந்த ரெனோ கேப்சர் காருக்கு நேரடியாக அதன் விலையில் இருந்து ரூ 2 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த காரின் விற்பனை மந்தமாக உள்ள சூழ்நிலையில் இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எஸ்யூவி கார் விரும்பிகளை திரும்பி பார்க் வைத்துள்ளது. தற்போது ரூ 2 லட்சம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கொடுக்கும் காசுக்கு ஏற்ற சிறப்பான காராக இந்த கார் தற்போது உருவாகியுள்ளது.

ஹோண்டா சிஆர்-வி - ரூ 1.5 லட்சம் தள்ளுபடி
ஹோண்டா சிஆர்-வி யின் புதிய கார் விரைவில் வெளிவரவுள்ளது. இதனால் தற்போது உள்ள மாடலை விற்பனை ரூ 1.5 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி நேரடியாக காரின் விலையில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. இருக்கும் ஸ்டாக்கை விற்க இந்த தள்ளுபடி அறிவிக்கப்படுள்ளதால் நீங்கள் சென்றால் டீலர்களின் நல்ல கவனிப்பும் கிடைக்கும்.

ஹோண்டா பிஆர்-வி- ரூ 1.26 லட்சம் தள்ளுபடி
ஹோண்டா பிஆர்- வி காருக்கு அந்நிறுவனம் ரூ 50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாக வழங்குகிறது. மேலும் முதல் ஆண்டு இன்சூரன்ஸ் இலவசமாக வழங்குகிறது. அதன் மதிப்பு சுமார் ரூ 50,000 மேலும் ரூ 26,000 மதிப்புள்ள கார்களுக்கான ஆக்ஸசரீஸையும் அந்நிறுவனம் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.

மாருதி சுஸூகி சியஸ் - ரூ 1.2 லட்சம் தள்ளுபடி
தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸூகி கார் விரைவில் பேஸ்லிப்ட் வேர்ஷனை வெளியிட திட்டமிட்டுள்ளது. அதனால் தற்போது உள்ள மாடலை விற்று தீர்க்க முடிவு செய்துள்ளது. இதன் பெட்ரோல் வேரியன்டிற்கு நேரடியாக ரூ 40,000 மற்றும் டீசல் வேரியன்டிற்கு ரூ 70,000 தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் ரூ 50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாக வழங்கப்படுகிறது. மேலும் சில கார்பரேட் டிஸ்கவுண்ட்களும் வழங்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வாகன் வென்டோ - ரூ 1.15 லட்சம் தள்ளுபடி
ஃபோக்ஸ் வாகன் வென்டோ தற்போது நல்ல விற்பனையில் இருந்து வருகிறது. இருந்தாலும் அந்நிறுவனம் தொடர்ந்து தங்கள் விற்பனையை மேலும் உயர்த்த தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த காரின் டீசல் அல்லது பெட்ரோல் வேரியன்டிற்கு காரின் விலையில் இருந்து ரூ 60,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ 40,000 மற்றும் கார்பரேட் தள்ளுபடியாக ரூ, 15,000 அறிவிக்கப்பட்டுள்ளது ஆக மொத்தம் ரூ 1.15 லட்சம் தள்ளுபடி கிடைக்கிறது.

டாடா ஹெக்ஸா - ரூ 1 லட்சம்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதன்மைத்துவ காரான ஹெக்ஸா கார், சொகுசான இட வசதி, பவர்புல் இன்ஜின், ஆப்ரோடு கெப்பாசிட்டி, உள்ளிட்ட பல வசதிகளை இந்த கார் கொண்டுள்ளது. இந்த காருக்கு அந்நிறுவனம் நேரடியாக தள்ளுபடியை வழங்காவிட்டாலும் பல டீலர்கள், காரின் விலையில் தள்ளுபடி, மற்றும் மற்ற வகையான தள்ளுபடியாக ரூ 1 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஃபோர்டு அஸ்பயர்
தற்போது ஃபோர்டு அஸ்பயர் காரின் பேஸ்லிப்ட் வெர்ஷன் விரைவில் விற்பனைக்கு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால் தற்போது உள்ள ஸ்டாக்கை கிளியர் செய்ய காரின் விலையில் இருந்து ரூ 1 லட்சம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு பிகோ
ஃபோர்டு பிகோ காரிலும் அப்டேட் வெர்ஷனை வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அது மட்டும் இல்லாமல் ப்ரீ ஸ்டைல் காரின் வருகைக்கு பிறகு பிகோவின் விற்பனை குறைந்துள்ளது. இதனால் விற்பனையை அதிகரிக்கவும், அந்நிறுவனம் ரூ 1 லட்சம் காரின் விலையில் இருந்து தள்ளுபடி அறிவித்துள்ளது.

ஸ்கோடா சூப்பர்ப்
ஸ்கோடா சூப்பர்ப் காருக்கு தற்போது ரூ 1 லட்சம் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கார் வாங்கும் போது ரூ 75,000 மதிப்புள்ள முதல் வருட இன்சூரன்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது காருக்கான கார்பரேட் தள்ளுபடியாக ரூ 15,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. மற்றும் 4 ஆண்டு சர்வீஸ் பேக்கேஜ் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் இந்த காருக்க ரூ 1 லட்ச ரூபாய்க்கு மேல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஹோண்டா ஜாஸ்
ஹோண்டா ஜாஸ் காரிற்கான பேஸ்லிப்ட் வெர்ஷன் விரைவில் வெளிவரவிருக்கிறது. அதற்கு முன்னதாக தற்போது உள்ள மாடலை விற்று தீர்க்க சில அதிரடி ஆஃபர்களை அந்நிறுவனம் வழங்கியுள்ளது. கார் விலையில் தள்ளுபடி, இலவச உதிரி பாகங்கள், மற்றும் எக்ஸ்சேன்ஸ் போன்ஸ் என மொத்தம் ரூ 1 லட்சம் மதிப்பிலான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் கிராண்ட் ஐ10 காரின் விற்பனையை அதிகரிக்க கார்பரேட் டிஸ்கவுண்ட், எக்ஸ்சேஞ்ச் போனஸ், காரின் விலையில் தள்ளுபடி என மொத்தம் ரூ 1 லட்சம் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

ஹூண்டாய் எக்ஸ்ஸெண்ட்
ஹூண்டாய் நிறுவனம் தங்களது எக்ஸ்ஸெண்ட் காருக்கு மாருதி டிசையர், புதிய ஹோண்டா அமேஸ், ஆகிய கார்களுடன் இந்த கார் பேட்டியிடுவதால் விற்பனை குறைந்துள்ளது. அதனால் இந்த காருக்கு காரின் விலையில் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்பரேட் டிஸ்கவுண்ட், ஆகியவை சேர்த்து மொத்தமாக ரூ 1 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
Source: Cartoq


Click it and Unblock the Notifications








