TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
2022ம் ஆண்டில் வாகனங்களுக்கு ஏபிஎஸ் கட்டாயம்… விபத்துக்களை தவிர்க்க புதிய நடவடிக்கை...
கார்களுக்கு எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ஆட்டோனமஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை வரும் 2022-2023ம் ஆண்டிற்குள் கட்டாயமாக்கப்படும் என மத்திய போக்குவரத்து துறை இணை செயலாளர் அபே டேம்லே தெரிவித்துள்ளார்.
உலக அளவில் ஒப்பிடும் போது, இந்தியாவில்தான் அதிக அளவிலான வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்று வீட்டிற்கு 2-3 வாகனங்களை பயன்படுத்தும் சூழ்நிலையும் நிலவி வருகிறது. இப்படி வாகன நெருக்கடி அதிகமாகி வரும் அதே நேரத்தில், வாகன விபத்துக்களும் அதிக அளவில் நிகழ்ந்து வருகின்றன.
இந்தியாவில் வாகன விபத்துக்களை தடுக்க அரசு பல்வேறு வகையிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பைக் ஓட்டிகளுக்கு ஹெல்மெட்டை கட்டாயப்படுத்துவது, காரில் செல்பவர்களுக்கு சீட் பெல்ட்டை கட்டாயப்படுத்துவது என அரசும் தங்கள் பங்கிற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் டில்லியை அடுத்த நொய்டாவில் சர்வதேச என்சிஏபி சார்பில் "ஸ்டாப் தி கிராஷ்" என்ற தலைப்பில் கூட்டம் ஒன்று நடந்தது. இதில், ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கான பிரேக்குகளை தயாரிக்கும் போஷ், காண்டினென்டல், இசட் எஃப் ஆகிய நிறுவனங்களும் கலந்து கொண்டன.
இதில், விபத்தை தடுக்க உதவும் டூவீலருக்கான ஏபிஎஸ், இஎஸ்சி மற்றும் ஆட்டோனமஸ் பிரேக்கிங் ஆகியவற்றின் செயல்முறை விளக்கங்கள் நிகழ்த்தப்பட்டன.
இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக இணை செயலாளர் பேசுகையில் "இந்தியாவில் வரும் 2022-2023ம் ஆண்டிற்குள் புதிய கார்களுக்கு எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ஆட்டோனமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் ஆகியவை கட்டாயமாக்கப்படும்.
அதன் மூலம் எதிர்காலத்தில் விபத்துக்களின் எண்ணிக்கையையும், விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும்" என கூறினார்.
சாலை போக்குவரத்து கல்வி மைய தலைவர் ரோஹித் பாலுஜா பேசுகையில் "எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்ற கருவிகளை கட்டாயமாக்குவதன் மூலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிர் சேதங்கள் தவிர்க்கப்படும். விபத்துக்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறையும்" என கூறினார்.
அரசு தற்போது பைக்குகளுக்கு ஏபிஎஸ் மற்றும் கார்களுக்கு இஎஸ்சி மற்றும் ஏஇடி ஆகியவற்றை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலாவின் பார்வையில்:
ஆட்டோமொபைல் துறையில் சமீபத்தில் வந்த மிகப்பெரிய வரப்பிரசாதம் இந்த ஏபிஎஸ் தொழிற்நுட்பம்தான். வாகனங்களில் வேகமாக செல்லும் போது ஏற்படும் பெரும் விபத்துக்களை கூட இந்த ஏபிஎஸ் தொழிற்நுட்பம் எளிதாக தடுத்து விடுகிறது. இதை வாகனங்களில் கட்டாயப்படுத்துவது மிகவும் அவசியமானது. பல வெளிநாடுகளில் ஏற்கனவே இந்த சட்டம் அமலுக்கு வந்து விட்டது.
அதன்பின் அந்த நாடுகளில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதன் பலனை பார்த்தபின்பும், இந்தியாவில் செயல்படுத்தவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும். மேலும் 2022-2023 என்ற இலக்கே அதிகமானதுதான். 2020ம் ஆண்டிலேயே அதை நடைமுறைக்கு கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.