பிரபல நடிகையின் ஜாகுவார் கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. பார்ச்சூனரை விட விலை குறைவுதான்

பிரபல நடிகையின் ஜாகுவார் கார், டொயோட்டா பார்ச்சூனர் காரை விட குறைவான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சுனில் ஷெட்டி. இவரது மகளும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டி, 2012 மாடல் ஜாகுவார் எக்ஸ்எப் எஸ் (Jaguar XF S) கார் ஒன்றை வைத்துள்ளார். தற்போது இந்த காரை விற்பனை செய்ய, அதியா ஷெட்டி முடிவு செய்துள்ளார்.

பிரபல நடிகையின் ஜாகுவார் கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. பார்ச்சூனரை விட விலை குறைவுதான்

இதற்கான விளம்பரம் பேஸ்புக்கில் வந்துள்ளது. 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள நடிகை அதியா ஷெட்டியின் ஜாகுவார் எக்ஸ்எப் எஸ் காரை வாங்க விருப்பம் உள்ளவர்கள், ஏஜென்ட் மணீஸ் நதனியை +91-9323626364 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பிரபல நடிகையின் ஜாகுவார் கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. பார்ச்சூனரை விட விலை குறைவுதான்

இந்த கார் இதுவரை யாருக்கும் கைமாறவில்லை. ஷெட்டி குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்த காரை பயன்படுத்தி வந்தனர். இதுவரை இந்த கார் 51 ஆயிரம் கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளதாக விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபல நடிகையின் ஜாகுவார் கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. பார்ச்சூனரை விட விலை குறைவுதான்

இதன் விலை 25.25 லட்ச ரூபாய். பேரம் பேசி விலையை குறைக்க முடிந்தால், முயற்சி செய்து பார்க்கலாம். புதிய ஜாகுவார் எக்ஸ்எப் எஸ் காரின் விலை சுமார் 59 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்). எனவே செகண்ட் ஹேண்டில் 25.25 லட்ச ரூபாயை அதிகம் என சொல்ல முடியாது.

பிரபல நடிகையின் ஜாகுவார் கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. பார்ச்சூனரை விட விலை குறைவுதான்

உண்மையில் டொயோட்டா பார்ச்சூனர் காரை காட்டிலும் இது விலை குறைவுதான். ஆனால் டொயோட்டா பார்ச்சூனரை காட்டிலும் இந்த காரை பராமரிக்க அதிக செலவு ஆகும் என்பதையும் மறுக்க முடியாது. அதுதவிர வாரண்டியும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகையின் ஜாகுவார் கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. பார்ச்சூனரை விட விலை குறைவுதான்

ஜாகுவார் எக்ஸ்எப் எஸ் காரில், 3.0 லிட்டர், வி6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 271.2 பிஎச்பி பவர் மற்றும் 600 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது. 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகையின் ஜாகுவார் கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. பார்ச்சூனரை விட விலை குறைவுதான்

இந்த கார் லிட்டருக்கு 13.53 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கவல்லது. பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியின் கார் பர்ப்பிள் (கேவியர்) நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கார் நல்ல கண்டிஷனில்தான் உள்ளது.

பிரபல நடிகையின் ஜாகுவார் கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. பார்ச்சூனரை விட விலை குறைவுதான்

ஜாகுவார் எக்ஸ்எப் எஸ் காரானது, இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டில், ஆடி ஏ6, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் வால்வோ எஸ்60 உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டது. இந்த காரில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பிரபல நடிகையின் ஜாகுவார் கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. பார்ச்சூனரை விட விலை குறைவுதான்

pedestrian contact sensing, ஏபிஎஸ், இபிடி, டிராக்ஸன் கண்ட்ரோல் ஆகியவை இதில் குறிப்பிடத்தகுந்தவை ஆகும். இதுதவிர ஜாகுவார் டிரைவ் கண்ட்ரோல், 7 இன்ச் ஃபுல் கலர் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

ஜாகுவார் எக்ஸ்எப் காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

Article Published On: Thursday, September 13, 2018, 19:17 [IST]
English summary
Actress Athiya Shetty’s Jaguar Car up for Sale. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+