டொயோட்டா ஃபார்ச்சூனர் சந்தையை அல்டுராஸ் அசைக்கும்... மஹிந்திரா நம்புவது இதைத்தான்!!

வெளிப்புற தோற்றத்திலும், இன்டீரியர் டிசைனிலும் மிகச் சிறப்பான மாடலாக இருப்பதும் இதன் கூடுதல் பலம்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த பிரம்மாண்ட விழாவில், மஹிந்திரா நிறுவனத்தின் விலை உயர்ந்த அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.26.95 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வந்திருக்கும் இந்த புதிய மாடல் இந்த ரகத்தில் ஜாம்பவான்களாக விளங்கும் டொயோட்டா ஃபார்ச்சூனரை எப்படி எதிர்கொண்டு ஜெயிக்கப்போகிறது என்பதுதான் எல்லோருடைய கேள்வியும், சந்தேகமுமாக இருக்கிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் சந்தையை அல்டுராஸ் அசைக்கும்... மஹிந்திராவின் நம்புவது இதைத்தான்!!

பிரம்மாண்டமான தோற்றம், சாலை ஆளுமை, நீடித்த உழைப்பு, நம்பகத்தன்மை என எல்லா விதத்திலுமே, டொயோட்டா ஃபார்ச்சூனர் இந்திய வாடிக்கையாளர்களிடையே நீண்ட காலமாக நம்பிக்கையை வெகுவாக பெற்றுவிட்ட மாடல். இந்த நிலையில், டொயோட்டா ஃபார்ச்சூனரை வீழ்த்துவது அவ்வளவு சுலபம் அல்ல என்பது மஹிந்திராவுக்கு தெரியாமல் இல்லை.

டொயோட்டா ஃபார்ச்சூனர் சந்தையை அல்டுராஸ் அசைக்கும்... மஹிந்திராவின் நம்புவது இதைத்தான்!!

ஃபார்ச்சூனரைவிட மதிப்பு கூட்டும் விஷயங்கள் இருந்ததால் மட்டுமே, குறைந்தபட்சம் வாடிக்கையாளர்கள் அல்டுராஸ் பக்கம் திரும்புவார்கள் என்பதை உணர்ந்து கொண்டு செயல்பட்டுள்ளது மஹிந்திரா. சில கூடுதல் சிறப்பம்சங்களை வைத்தே, ஃபார்ச்சூனரின் சந்தையை முடிந்தவரை உடைப்பதற்கான வியூகத்துடன் மஹிந்திரா களமிறங்கி இருக்கிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் சந்தையை அல்டுராஸ் அசைக்கும்... மஹிந்திராவின் நம்புவது இதைத்தான்!!

அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி என்பது மஹிந்திரா பிராண்டுக்கான முத்திரையையும் தாண்டி, அது பிரிமீயம் எஸ்யூவி மாடல் என்பதையும், அதற்கான வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறை எவ்வாறு இருக்கும் என்பதை உணர்ந்து, அறிமுக விழாவிற்கு முன்னதாக போலோ விளையாட்டு நிகழ்ச்சி நடந்தது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் சந்தையை அல்டுராஸ் அசைக்கும்... மஹிந்திராவின் நம்புவது இதைத்தான்!!

போலோ விளையாட்டு நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிலரும் பங்கேற்றனர். அறிமுக விழாவும் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. புதிய அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் பிரிமீயம் ரகத்தை சேர்ந்தது என்பதை மறைமுகமாக உணர்த்துவதாகவே இருந்தது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் சந்தையை அல்டுராஸ் அசைக்கும்... மஹிந்திராவின் நம்புவது இதைத்தான்!!

அடுத்து, ரூ.23 லட்சம் முதல் ரூ.25 லட்சத்திற்குள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.26.95 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வந்துள்ளது. ஃபோர்டு எண்டெவர், இசுஸு எம்யூ-எக்ஸ், ஃபோக்ஸ்வேகன் டிகுவான் உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு கிட்டத்தட்ட இணையான விலையில் வந்துள்ளது. அதேநேரத்தில், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி மாடல்களைவிட ஒன்றிரண்டு லட்சங்கள் விலை குறைவு.

டொயோட்டா ஃபார்ச்சூனர் சந்தையை அல்டுராஸ் அசைக்கும்... மஹிந்திராவின் நம்புவது இதைத்தான்!!

முன்பே சொன்னது போல, இந்த ரக வாடிக்கையாளர்களுக்கு ஒன்றிரண்டு லட்சங்கள் பெரிதல்ல. ஆனால், அவர்களை சமரசம் செய்வதற்காக பல கூடுதல் சிறப்பம்சங்களை மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி பெற்றிருக்கிறது.

Recommended Video

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்
டொயோட்டா ஃபார்ச்சூனர் சந்தையை அல்டுராஸ் அசைக்கும்... மஹிந்திராவின் நம்புவது இதைத்தான்!!

முதல் விஷயம், தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் ரெக்ஸ்டன் நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ரெக்ஸ்டன் எஸ்யூவிதான் ரீபேட்ஜ் செய்யப்பட்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், நேரடியான மஹிந்திரா கார்களாக பாவித்து ஒப்பிட இயலாது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் சந்தையை அல்டுராஸ் அசைக்கும்... மஹிந்திராவின் நம்புவது இதைத்தான்!!

வெளிப்புற தோற்றத்திலும், இன்டீரியர் டிசைனிலும் மிகச் சிறப்பான மாடலாக இருப்பதும் இதன் கூடுதல் பலம். டொயோட்டா ஃபார்ச்சூனர் வாடிக்கையாளர்களே ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டால், நிச்சயம் இந்த கார் பிடித்ததுப் போகும் என்று மஹிந்திரா நம்புகிறது. இதற்காக, தகுதியுடைய வாடிக்கையாளர்களை இனம் கண்டு, டெஸ்ட் டிரைவ் வாய்ப்பையும் மஹிந்திரா வழங்க துவங்கி இருக்கிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் சந்தையை அல்டுராஸ் அசைக்கும்... மஹிந்திராவின் நம்புவது இதைத்தான்!!

இதன் ரகத்திலான பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் நீள, அகல, உயரத்தில் மிகப்பெரிய கார் அல்டுராஸ்தான். இதனால், உட்புறத்தில் தாராள இடவசதியை உணர முடிகிறது. மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் மிக முக்கிய பிளஸ் பாயிண்ட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் சந்தையை அல்டுராஸ் அசைக்கும்... மஹிந்திராவின் நம்புவது இதைத்தான்!!

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியில் சன்ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள், முப்பரிமாண கோணத்தில் 360 டிகிரி கோணத்தில் வீடியோவை வழங்கும் கேமரா வசதிகள் இந்த காரின் மிக முக்கிய அம்சங்கள். போட்டி மாடல்களில் இல்லை. குறிப்பாக, ஃபார்ச்சூனரில் இல்லை. இந்த சில விஷயங்கள் மட்டுமே போதுமா என்பதும் எல்லோரிடத்தில் உள்ள கேள்வி.

டொயோட்டா ஃபார்ச்சூனர் சந்தையை அல்டுராஸ் அசைக்கும்... மஹிந்திராவின் நம்புவது இதைத்தான்!!

எனினும், இந்த ரகத்தில் மிகச் சரியான மாற்றாக அல்டுராஸ் ஜி4 விளங்கும் என்று கூற முடியும். போட்டியாளர்களுக்கு சளைக்காமல் விலை நிர்ணயத்திருப்பதன் மூலமாக, இந்த கார் எந்த விதத்திலும் குறைவாக மதிப்பிட முடியாத அளவு சிறந்த சாய்ஸாக மாறும் என்று நம்பலாம்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் சந்தையை அல்டுராஸ் அசைக்கும்... மஹிந்திராவின் நம்புவது இதைத்தான்!!

புதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் தோற்றம் சாஃப்ட் ரோடர் என்ற ரகத்திலான சொகுசு எஸ்யூவி மாடல்களை போல இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதேபோன்று, போட்டி மாடல்கள் கிட்டத்தட்ட 225 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கும் நிலையில், இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மிமீதான். எனவே, ஆஃப்ரோடுகளில் இதன் பயன்பாட்டுக்கு உகந்த மாடலாக இருக்காது என்ற கருதப்படுகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் சந்தையை அல்டுராஸ் அசைக்கும்... மஹிந்திராவின் நம்புவது இதைத்தான்!!

இதற்கு பதில் சொல்லும் விதத்தில், நேற்று ஜெய்ப்பூரில் ஆஃப்ரோடு நிகழ்ச்சிக்கும் மஹிந்திரா ஏற்பாடு செய்திருந்தது. இதில், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 கரடுமுரடான சாலை நிலைகளையும், தடைகளையும் கடந்து வந்த அனுபவம் குறித்து விரிவான செய்தித் தொகுப்பை விரைவில் வழங்குகிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, November 26, 2018, 12:19 [IST]
English summary
5 Advantages Mahindra Alturas G4 Has Over The Competition.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+