காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ

காரை ஏற்றி தங்களை கொலை செய்ய முயன்ற இளைஞரை, போலீசார் சினிமா பாணியில் விரட்டி சென்று பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த இளைஞர் யார்? என தெரிந்தால் நீங்கள் கோவப்படப்போவது உறுதி.

காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ

உலகம் முழுவதும் சாலை விபத்துகள் மற்றும் சாலை விபத்துக்களின் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டிருப்பதை சமீபத்தில் வெளியான புள்ளி விபரங்கள் உறுதி செய்கின்றன.

காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ

உலக சுகாதார நிறுவனம் (World Health Organization-WHO) கடந்த 2013ம் ஆண்டில் வெளியிட்டிருந்த அறிக்கையின்படி, உலகம் முழுவதும் ஒரு ஆண்டிற்கு மட்டும் சாலை விபத்துக்களின் காரணமாக, 10.25 லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என கணக்கிடப்பட்டிருந்தது.

காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ

ஆனால் தோராயமாக மதிப்பிடப்பட்டிருந்ததை காட்டிலும், சாலை விபத்துக்களின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிகவும் மோசமான வகையில் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் வெளியான WHO அறிக்கையின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ

தற்போது சாலை விபத்துக்களின் காரணமாக உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கு மட்டும் 10.35 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். ஒவ்வொரு 24 நொடிக்கும் யாரேனும் ஒருவர், சாலை விபத்துக்களின் காரணமாக பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ

5 மற்றும் 29 வயதுக்கு உட்பட்ட இளம் வயதினரே சாலை விபத்துக்களின் காரணமாக அதிகம் உயிரிழந்து வருகின்றனர் என்ற தகவலும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இது உலகம் முழுவதுக்குமான புள்ளி விபரம் என்றாலும், இந்தியாவிலும் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டேதான் உள்ளது.

MOST READ: டிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்?

காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ

இந்தியாவில் மட்டும் ஒரு ஆண்டுக்கு சாலை விபத்துக்களின் காரணமாக சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது என போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாததே விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணம்.

காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ

சாலை விபத்துக்களை மீறும் வாகன ஓட்டிகள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் அவ்வப்போது வெளியாகி வைரலாக பரவுவது வாடிக்கையாகவே உள்ளது. இந்த வகையில் தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள டீன் ஹாத் நகா பகுதி, ஞாயிற்றுக்கிழமை என்றாலும் கூட நேற்று (டிசம்பர் 9) மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது அங்கு சிக்னலை சற்றும் மதிக்காமல், தவறான பாதையில் வெள்ளை நிற கார் ஒன்று வந்தது.

காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ

இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து கான்ஸ்டபிள் ஒருவர் அந்த காரின் டிரைவரிடம் சென்றார். காருக்கு உள்ளே ஒரு இளைஞர் மட்டும் இருந்தார். போக்குவரத்து விதிமுறையை மீறிய அந்த இளைஞரிடம், டிரைவிங் லைசென்ஸை காட்டும்படி அந்த கான்ஸ்டபிள் கேட்டார்.

காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ

ஆனால் அந்த இளைஞர் டிரைவிங் லைசென்ஸை காட்ட மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் போலீஸ் கான்ஸ்டபிள் மீது காரை ஏற்றுவது போலவும் வந்தார். இதனால் அந்த கான்ஸ்டபிளுக்கு சற்றே காயம் ஏற்பட்டது.

MOST READ: 30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்... விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி இதை பயன்படுத்தவே மாட்டீர்கள்

காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ

இதனால் அங்கு மேலும் 2 கான்ஸ்டபிள்கள் வந்தனர். ஆனால் அவர்களை எல்லாம் அந்த இளைஞர் மதிக்கவே இல்லை. அத்துடன் அங்கிருந்து காரை அதிவேகத்தில் ஓட்டி கொண்டு பறந்தார். எனவே சினிமா பாணியில் அந்த இளைஞரின் காரை போலீசார் விரட்டி சென்றனர்.

காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ

ஒரு சில கிலோ மீட்டர்கள் சேஸிங்கிற்கு பிறகு அந்த இளைஞரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முன்னதாக போலீசார் மீது காரை ஏற்றுவது போல் வந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. மிரர் நவ் வெளியிட்டுள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த சூழலில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர், அப்பகுதியில் மிகவும் பிரபலமான சங்கிடா பாத் என்பவரின் மகன் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சங்கிடா பாத் பிரபலமான அரசு வழக்கறிஞர் என கூறப்படுகிறது.

காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ

போலீஸ் கான்ஸ்டபிள் முதலில் காரை நிறுத்தி டிரைவிங் லைசென்ஸை காட்டும்படி கேட்டபோது, 'நான் அரசு வழக்கறிஞரின் மகன்' என அந்த இளைஞர் மிரட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக சங்கிடா பாத் இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ

அரசு உயர் பதவிகளில் உள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என அவர்களை சார்ந்தோர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பதும், அதனை தட்டி கேட்கும் போலீசார் உள்ளிட்டவர்களை மிரட்டுவதும் வாடிக்கையாகி வருகிறது.

MOST READ: மோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...

காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ

இதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே. இதனால் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றும் சாமானிய மக்கள் அதிருப்தியும், ஆத்திரமும் அடைந்துள்ளனர். போலீசாருக்கு அவர்கள் விடுக்கும் கோரிக்கை எல்லாம், இவர்களின் 'பெண்ட நிமித்துங்க பாஸ்' என்பதுதான்.

Most Read Articles

Tamil
English summary
Advocate Son Arrested For Trying To Run Over Traffic Cop In Maharashtra: Video Goes Viral. Read in Tamil
Story first published: Monday, December 10, 2018, 19:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more