கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

கார் விபத்தில் படுகாயம் அடைந்த அரசு டாக்டர் ஒருவர், கோமா நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். இந்த விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி நீங்கள் காரில் பயணம் செய்யவே மாட்டீர்கள்.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் கங்காதர். எம்பிபிஎஸ் படித்துள்ள கங்காதர், மாவட்ட மலேரியா ஒழிப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். டாக்டர் கங்காதரிடம், 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஃபோர்டு எகோ ஸ்போர்ட் கார் ஒன்று உள்ளது.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஹொலேநரசிபுரா என்ற பகுதிக்கு அருகே உள்ள மாநில நெடுஞ்சாலை எண் 57-ல், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, தனது ஃபோர்டு எகோ ஸ்போர்ட் காரில், டாக்டர் கங்காதர் பயணம் செய்து கொண்டிருந்தார்.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

டாக்டர் கங்காதர்தான் காரை ஓட்டி சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக, மின் கம்பம் ஒன்றில் மோதி, கார் பயங்கரமான விபத்தில் சிக்கியது. இதில், டாக்டர் கங்காதர் படுகாயம் அடைந்தார். குறிப்பாக அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

எனவே மருத்துவ சிகிச்சைக்காக டாக்டர் கங்காதர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுமார் 6 வார காலமாக, டாக்டர் கங்காதருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் மூளையின் ஒரு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் சுய நினைவை இழந்து விட்டார்.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

இந்த சூழலில், டாக்டர் கங்காதர் விபத்தில் சிக்கியது தொடர்பாக, அவரது மனைவி ஷோபா கங்காதர், தனது பேஸ்புக் பக்கத்தில் தற்போது பகீர் கிளப்பும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், கூறப்பட்டிருக்கும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

ஷோபா கங்காதர் பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: ஹாசன் மாவட்டம் ஹொலேநரசிபுராவுக்கு அருகே உள்ள மாநில நெடுஞ்சாலை எண் 57-ல், எனது கணவர் டாக்டர் கங்காதர், அவரது ஃபோர்டு எகோ ஸ்போர்ட் காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார்.

MOST READ: நாட்டையே உலுக்கிய சம்பவம்... பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற ரிக்ஸா டிரைவர்... ஏன் தெரியுமா?

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

அப்போது மின் கம்பம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக மோதியதால், கார் விபத்தில் சிக்கியது. இதனால் எனது கணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து நடைபெற்ற சமயத்தில் காரின் ஏர் பேக்குகள் (Airbags) விரிவடையவில்லை.

MOST READ: எம்ஜி ஹெக்டர் காரை வாங்க போறீங்களா? அப்போ இந்த விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியாகதான் இருக்கும்...

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

விபத்து நடைபெற்று 5 மாதங்களாகி விட்டது. ஆனால் ஏர் பேக்குகள் விரிவடையாதது ஏன்? என்பதற்கான கேள்விக்கு என்னால் இன்று வரை பதில் கண்டறியவே முடியவில்லை. இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை, ஃபோர்டு கம்பெனியின் கவனத்திற்கு நான் கொண்டு சென்றேன்.

MOST READ: விரைவில் அறிமுகமாகும் பேருந்துகளுக்கான ஆப்... ஓலா, ஊபரை வீழ்த்த தமிழக அரசு அதிரடி!!!

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

ஆனால் அங்கிருந்த தொழில்நுட்ப நிபுணர்கள், எனது கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்கவே இல்லை. தாங்கள் வேலை செய்து வரும் நிறுவனத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, தொழில்நுட்ப நிபுணர்கள் நேர்மையான பதிலை அளிக்கவில்லை என நான் கருதுகிறேன்.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

எனவே இதன்பின் ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு, இந்த புகாரை எடுத்து சென்றேன். எனது புகாருக்கு அவர்கள் உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்தனர். இதனால் நான் ஆச்சரியம் அடைந்தேன்.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

எனக்கு உதவி செய்வதற்காக தொழில்நுட்ப ஆய்வு குழு தயாராக இருப்பதாக என்னிடம் அவர்கள் கூறினர். ஆனால் அதன்பின் அவர்கள் எவ்வித ரெஸ்பான்ஸையும் வழங்கவில்லை. பிரச்னை நிவர்த்தி செய்யப்படும் என்ற உறுதிமொழியை அவர்கள் எனக்கு வழங்கி தற்போது 4 வாரங்கள் கடந்து சென்று விட்டன.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

எனது புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாக அறிந்து கொள்வதற்காக, அவர்களுக்கு பலமுறை மெயில் அனுப்பி அனுப்பி ஓய்ந்தே விட்டேன். எனது மெயிலுக்கு பதில் அளிக்க தற்போது அவர்கள் மறுக்கின்றனர்.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

அவர்கள் பதில் அளிக்காமல் இருப்பது என்பது எனது பொறுமையின் எல்லையை சோதித்து பார்க்கும் ஒரு தேர்வு போன்று உள்ளது. 'சோஷியல் மீடியா' என்ற சக்தியின் மூலமாக, ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் கவனத்தை ஈர்க்க இதுவே என்னை தூண்டியது.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

இதன் காரணமாகதான் பேஸ்புக்கில் இந்த பதிவை எழுதியுள்ளேன். எனது சூழ்நிலையை புரிந்து கொண்டு, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை ஃபோர்டு இந்தியா நிறுவனம் எடுக்கும் என நம்புகிறேன். இவ்வாறு ஷோபா கங்காதர் கூறியுள்ளார்.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

ஏர் பேக் என்பது கார்களில் இடம்பெற்றிருக்கும் ஒரு முக்கியமான பாதுகாப்பு அம்சம் ஆகும். விபத்து நேரும் சமயங்களில், ஏர் பேக்குகள் விரிவடைந்து, காரில் பயணிப்பவர்களை பாதுகாக்கும். ஆனால் ஃபோர்டு எகோ ஸ்போர்ட் காரில் ஏர் பேக் விரிவடையாததால், டாக்டர் கங்காதர் தற்போது உயிருக்கு போராடி வருகிறார்.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

ஃபோர்டு நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 20 ஆயிரம் எகோ ஸ்போர்ட் கார்களை ரீ கால் செய்தது. எகோ ஸ்போர்ட் கார்களை ஃபோர்டு நிறுவனம் திரும்ப பெற்றதற்கு, ஏர் பேக்குகளில் நிலவிய பிரச்னையும் ஒரு முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

இந்த சூழலில் தற்போது மீண்டும், ஃபோர்டு எகோ ஸ்போர்ட் காரின் ஏர் பேக்குகளின் பாதுகாப்பு குறித்து புகார் எழுந்திருப்பது, வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பையும், அச்சத்தையும் உண்டாக்கியுள்ளது. இதற்கு ஃபோர்டு நிறுவனம் உரிய விளக்கத்தை வழங்க வேண்டும்.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

எகோ ஸ்போர்ட் மட்டுமின்றி, ஃபோர்டு நிறுவன கார்கள் எல்லாம் பாதுகாப்பானவைதானா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், ஃபோர்டு என்டேவர் காரில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக தொழிலதிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததே சந்தேகம் வலுப்பதற்கு முக்கியமான காரணம்.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

குஜராத் மாநிலம் வதோதரா நகரை சேர்ந்த தொழிலதிபர் மிஹிர் பன்ச்சால். வதோதரா நகரில் மிகவும் புகழ்பெற்ற நபராக விளங்கிய மிஹிர் பன்ச்சால், ஃபோர்டு நிறுவனத்தின் என்டேவர் கார் ஒன்றை வைத்திருந்தார். இதன் விலை சுமார் 40 லட்ச ரூபாய்.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

கடந்த அக்டோபர் மாதம்தான் இந்த காரை மிஹிர் பன்ச்சால் வாங்கியிருந்தார். இந்த சூழலில் கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி காலை 11 மணியளவில், தனது ஃபோர்டு என்டேவர் காரில், மிஹிர் பன்ச்சால் பயணித்து கொண்டிருந்தார்.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

அப்போது காரின் இன்ஜினில் திடீரென தீப்பற்றியது. இதை உடனடியாக கவனித்து விட்ட மிஹிர் பன்ச்சால், ஒரு வழியாக போராடி, காரை சாலையோரமாக நிறுத்தினார். அவர் சாலையோரமாக நிறுத்திய நேரத்தில், காரில் தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

இதனால் மிஹிர் பன்ச்சால் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக காரை விட்டு கீழே இறங்கி விட அவர் முயற்சி செய்தார். ஆனால் அவரால் சீட் பெல்ட்டை கழற்ற முடியவில்லை. துரதிருஷ்டவசமாக சீட் பெல்ட் ஜாம் ஆகி விட்டது. எனவே சீட் பெல்ட்டை கழற்றி விட்டு, காரை விட்டு வெளியேற மிஹிர் பன்ச்சாலால் முடியவில்லை.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

இதன் காரணமாக காருக்கு உள்ளேயே சிக்கி மிஹிர் பன்ச்சால் பரிதாபமாக உயிரிழந்தார். சீட் பெல்ட்டை கழற்ற முடியாததால், தீப்பற்றி எரிந்த காரில், தொழிலதிபர் ஒருவர் சிக்கி கொண்டு உயிரிழந்த சம்பவம், வதோதரா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

ஆனால் ஃபோர்டு என்டேவர் கார் ஒன்று தீப்பற்றி எரிவது என்பது இது முதல் முறையாக நடக்கும் விஷயம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், டாக்டர் சரனா ரெட்டி என்பவருக்கு சொந்தமான ஃபோர்டு என்டேவர் கார் ஒன்று, கடந்த ஏப்ரல் மாதம் திடீரென தீப்பற்றி எரிந்தது.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

அப்போது அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த அனைவரும் உடனடியாக கீழே இறங்கி விட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் அதன்பின் மீண்டும் ஃபோர்டு என்டேவர் தீப்பிடித்த சம்பவத்தில், தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்து விட்டார்.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

தற்போதைய விலை உயர்ந்த மாடர்ன் கார்களில், ஏர் பேக், ஏபிஎஸ் உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதால்தான், அதிக விலை என்பதை சற்றும் பொருட்படுத்தாமல், மக்கள் அவற்றை வாங்குகின்றனர்.

கோமா நிலையில் போராடும் டாக்டர்.. விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி காரில் பயணிக்கவே மாட்டீர்கள்

ஆனால் அப்படிப்பட்ட கார்கள் கூட சில சமயங்களில் போதிய பாதுகாப்பை வழங்குவது இல்லை என்ற உண்மை, இத்தகைய சம்பவங்கள் மூலமாக உறுதி செய்யப்படுகிறது. ஃபோர்டு மட்டுமல்லாது பல்வேறு முன்னணி நிறுவன கார்களின் பாதுகாப்பு கருவிகளும், அதில் பயணிப்பவர்களை கைவிட்டுள்ள சம்பவம் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக கார்களில் பயணம் செய்யவே மக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் உருவாகி விடும் சூழல் நிலவுகிறது.

Source: TV9 Gujarati

Most Read Articles

English summary
Airbags Didn't Deploy During Accident: Ford Ecosport Owner Suffered Severe Traumatic Head Injury
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more