மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புதிய ஸ்பை படம் மற்றும் புதிய தகவல்கள்!!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் ஸ்பை படம் மற்றும் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 7 பேர் செல்வதற்கான இடவசதி கொண்ட இந்த மஹிந்திரா எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் பெட்ரோல் மாடல்

By Saravana Rajan

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில், காரில் முகப்பு முதல் பக்கவாட்டு டிசைனை முழுமையாக காண்பதற்கான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புதிய ஸ்பை படம் மற்றும் புதிய தகவல்கள்!!

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சர்வதேச வாகன கண்காட்சியில் புதிய தலைமுறை சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி மஹிந்திரா பிராண்டில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இது ஆட்டோ எக்ஸ்போவிற்கு வந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புதிய ஸ்பை படம் மற்றும் புதிய தகவல்கள்!!

மேலும், புதிய தலைமுறை சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி இந்தியாவில் மஹிந்திரா பிராண்டில் வருவதும் உறுதியானது. மேலும், இந்த கார் எக்ஸ்யூவி700 என்ற பெயரில் வர இருப்பதாகவும் தகவல்கள் றெக்கை கட்டி பறக்கின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புதிய ஸ்பை படம் மற்றும் புதிய தகவல்கள்!!

இந்தநிலையில், புதிய தலைமுறை சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி இந்தியாவில் தொடர்ந்து சாலை சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதுதொடர்பான ஸ்பை படங்களும் வெளியாகி வருகின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புதிய ஸ்பை படம் மற்றும் புதிய தகவல்கள்!!

இந்த சூழலில், முன்பறமாக எடுக்கப்பட்ட ஸ்பை படம் ஒன்று இப்போது வெளியாகி இருக்கிறது. பழைய மாடலிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும் இந்த எஸ்யூவி மிக பிரம்மாண்டமாகவும், தோரணையுடன் இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புதிய ஸ்பை படம் மற்றும் புதிய தகவல்கள்!!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 பிராண்டில் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய எஸ்யூவி உயர்வகை க்வாட்- ப்ரேம் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 3 வரிசை இருக்கையில் 7 பேர் வரை செல்ல முடியும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புதிய ஸ்பை படம் மற்றும் புதிய தகவல்கள்!!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியானது 4.85 மீட்டர் நீளமும், 1.92 மீட்டர் அகலமும், 1.8 மீட்டர் உயரம் கொண்டது. இந்த கார் 2,865மிமீ வீல் பேஸ் பெற்றிருக்கிறது. இதன்மூலமாக, மிகச் சிறப்பான உட்புற இடவசதியை பெற்றிருப்பது உறுதியாகிறது. இதன் நேரடி போட்டியாளராக கருதப்படும் டொயோட்டா ஃபார்ச்சூனரை விட 120மிமீ வீல் பேஸ் அதிகம் என்பதும் கவனிக்கத்தக்க விஷயம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புதிய ஸ்பை படம் மற்றும் புதிய தகவல்கள்!!

ஒவ்வொரு இருக்கையின் ஹெட்ரெஸ்ட்டிலும் 10.1 அங்குல திரையுடன் கூடிய பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன. சாய்மான இருக்கைகளில் மசாஜ் செய்யும் வசதியும் உண்டு. இந்த காரில் வைஃபை வசதியை அளிக்கும் சாதனம் மற்றும் ஆப்பிள் கார் ப்ளே அல்லது ஆன்ட்ராய்டு ஆட்டோ சாப்ஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் இடம்பெறுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புதிய ஸ்பை படம் மற்றும் புதிய தகவல்கள்!!

இந்த காரில் 9 ஏர்பேக்குகள், நவீன எமர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டம், தடம் மாறுதல் குறித்து எச்சரிக்கும் வசதி, கண்ணுக்கு புலப்படாத பகுதியில் வரும் வாகனங்கள், பாதசாரிகள் குறித்து எச்சரிக்கும் வசதி, ஹை பீம் அசிஸ்ட், பாதுகாப்பாக தடம் மாறுவதற்கான தொழில்நுட்பம் என பாதுகாப்பு அம்சங்களுக்கு குறைவில்லை.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புதிய ஸ்பை படம் மற்றும் புதிய தகவல்கள்!!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியில்ல 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 181 பிஎஸ் பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் அளிக்க வல்லது. யூரோ-6 மாசுக் கட்டுப்பாட்டு அம்சத்தை பெற்றிருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புதிய ஸ்பை படம் மற்றும் புதிய தகவல்கள்!!

இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 225 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்த் திறனையும் வழங்க வல்லதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புதிய ஸ்பை படம் மற்றும் புதிய தகவல்கள்!!

ரூ.25 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவிகளுடன் நேருக்கு நேர் போட்டியிடும்.

Spy Image Credit: Team BHP

More from DriveSpark

Article Published On: Wednesday, April 18, 2018, 16:09 [IST]
English summary
All New Mahindra XUV700 SUV Spied Again.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+