புதிய நிஸான் மைக்ரா கார் இந்தியா வருவது உறுதியானது!

Written By:

புதிய நிஸான் மைக்ரா கார் இந்தியாவில் விற்பனைக்கு வருவது குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய நிஸான் மைக்ரா கார் இந்தியா வருவது உறுதியானது!

கடந்த ஆண்டு புதிய தலைமுறை அம்சங்களுடன் நிஸான் மைக்ரா கார் சர்வதேச அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் நிஸான் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக ஓவர்டிரைவ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

புதிய நிஸான் மைக்ரா கார் இந்தியா வருவது உறுதியானது!

வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் மாடலைவிட குறைவான விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக சில வசதிகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் குறைத்து இந்தியாவில் வெளியிட நிஸான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால், வடிவமைப்பில் மாறுதல்கள் இருக்காது.

புதிய நிஸான் மைக்ரா கார் இந்தியா வருவது உறுதியானது!

வெளிநாடுகளில் இருக்கும் நிஸான் மைக்ரா கார் நிஸான் நிறுவனத்தின் வி என்று குறிப்பிடப்படும் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்தியாவுக்கான புதிய நிஸான் மைக்ரா கார் ரெனோ- நிஸான் கூட்டணியியன் சிஎம்எஃப்-ஏ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட இருக்கிறது.

புதிய நிஸான் மைக்ரா கார் இந்தியா வருவது உறுதியானது!

மேலும், இந்திய மோட்டார் வாகனச் சட்ட விதிகள் மற்றும் சாலை நிலைகளை மனதில் கொண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. விலையை கட்டுக்குள் வைக்கும் விதத்தில் வெளிநாடுகளில் இருக்கும் பிரிமியம் அம்சங்கள் இடம்பெறாது. இருப்பினும், இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களுடன் போட்டி போடும் அளவுக்கு சிறப்பம்சங்களை பெற்றிருக்கும்.

புதிய நிஸான் மைக்ரா கார் இந்தியா வருவது உறுதியானது!

புதிய நிஸான் மைக்ரா காரில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், எல்இடி பகல்நேர விளக்குகள், ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய நிஸான் மைக்ரா கார் இந்தியா வருவது உறுதியானது!

புதிய நிஸான் மைக்ரா காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. தற்போதைய மாடலில் இருக்கும் எஞ்சின்கள்தான் என்றாலும், மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது.

புதிய நிஸான் மைக்ரா கார் இந்தியா வருவது உறுதியானது!

புதிய நிஸான் மைக்ரா காருக்கு இந்தியாவிலுள்ள சப்ளையர்களிடமிருந்தே அதிக அளவில் உதிரிபாகங்களை பெற்று உற்பத்தி செய்வதற்கு நிஸான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால், விலையும் மிக சவாலாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய நிஸான் மைக்ரா கார் இந்தியா வருவது உறுதியானது!

இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த புதிய நிஸான் மைக்ரா கார் மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 உள்ளிட்ட பிரிமியம் ஹேட்ச்பேக் ரக கார்களுடன் போட்டி போடும்.

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan introduced the all-new Micra hatchback in the global markets in 2017. The updated Micra features a new platform and comes with significant updates. Now, Overdrive reports that Nissan is working on an India-spec version of the new Micra.
Story first published: Saturday, March 31, 2018, 7:58 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark