இந்தியாவின் விலை உயர்ந்த எஸ்யூவி காரை 2வது முறையாக வாங்கிய அம்பானி.. ரகசியங்கள் கசிந்தன..
இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த எஸ்யூவி வகை கார்களில் ஒன்றான பென்ட்லி பென்டேகா காரை அம்பானி குடும்பம் 2வது முறையாக வாங்கியுள்ளது.
இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த எஸ்யூவி கார்களில் ஒன்று பென்ட்லி பென்டேகா. இந்த காரை முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி ஏற்கனவே வைத்துள்ளார். இந்த சூழலில், மீண்டும் ஒரு பென்ட்லி பென்டேகா காரை அம்பானி குடும்பம் வாங்கியுள்ளது. இதன் சுவாரசியமான பின்னணி குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, பென்ட்லி பென்டேகா லக்ஸரி எஸ்யூவி வகை காரை பயன்படுத்தி வருகிறார். அவரது பென்ட்லி பென்டேகா கார், பிரிட்டீஷ் ரேஸிங் க்ரீன் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும்.

ஆகாஷ் அம்பானியின் பென்ட்லி பென்டேகா காரில், மிகவும் சக்தி வாய்ந்த டபிள்யூ12 (W12) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பென்ட்லி பென்டேகா W12 காரின் விலை 3.85 கோடி ரூபாய். இந்த சூழலில், அம்பானி குடும்பம் மீண்டும் ஒரு பென்ட்லி பென்டேகா எஸ்யூவி வகை காரை வாங்கியுள்ளது.

ஆகாஷ் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி ஸ்லோகா மேத்தா ஆகியோருக்கு இந்த கார் பரிசாக வழங்கப்பட்டதாக தகவல்கள் உலா வருகின்றன. பிரபல வைர வியாபாரியான ரஸல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தா-ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது.

ஆகாஷ் அம்பானி-ஸ்லோகா மேத்தா திருமணம் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. முன்னதாக நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியின்போது, ஆகாஷ் அம்பானி-ஸ்லோகா மேத்தா ஆகியோருக்கு புதிய பென்ட்லி பென்டேகா கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த செய்திக்கு நம்பிக்கை சேர்க்கும் விதமாக சில சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. புதிய பென்ட்லி பென்டேகா காருடன் ஸ்லோகா மேத்தாவை சமீப நாட்களாக அடிக்கடி பார்க்க முடிகிறது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியன்று கூட, ஸ்லோகா குடும்பத்தினருடன் அம்பானிகள் இந்த காரில் பயணித்தனர்.

பென்ட்லி பென்டேகா எஸ்யூவி காரை, செல்வ செழிப்பு மிக்கவர்களால் மட்டுமே வாங்க முடியும். எனவே இந்தியாவின் பெரும் பணக்காரரின் மூத்த மகனிடம் ஒன்றுக்கு இரண்டு பென்ட்லி பென்டேகா கார்கள் இருப்பதில் பெரிதாக ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

ஆனால் ஆகாஷ் அம்பானியிடம் ஏற்கனவே உள்ள பென்டேகா காருக்கும், தற்போது புதிதாக அவரிடம் வந்து சேர்ந்துள்ள பென்டேகா காருக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. பழைய பென்டேகா கார் பச்சை நிறமுடையது. இதில், W12 இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

ஆனால் புதிய பென்டேகா எஸ்யூவி காரில், வி8 (V8) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் பென்டேகா V8 காரின் அடிப்படை விலை 3.78 கோடி ரூபாய். W12 வேரியண்ட் உடன் ஒப்பிடுகையில், V8 வேரியண்ட்டின் விலை 7 லட்ச ரூபாய் மட்டுமே குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பானி குடும்பத்தின் கேரேஜை வந்தடைந்துள்ள 2வது பென்ட்லி பென்டேகா காரில், 4.0 லிட்டர் V8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 542 பிஎச்பி பவர் மற்றும் 770 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி, சாலைகளில் சீறிப்பாயும் வல்லமை மிக்கது.

அதே சமயம் ஆகாஷ் அம்பானியிடம் ஏற்கனவே உள்ள பென்ட்லி பென்டேகா காரில், 6.0 லிட்டர் W12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 600 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க் திறனையும் வழங்கக்கூடிய திறன் வாய்ந்தது.

பவர் மற்றும் டார்க் உள்ளிட்ட விஷயங்களில் W12 வேரியண்ட்டை காட்டிலும் V8 வேரியண்ட் சற்றே பின்தங்குகிறது. எனினும் மற்ற அம்சங்களில் ஏறக்குறைய W12 வேரியண்ட் போல்தான் V8 வேரியண்ட்டும் உள்ளது.

இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த எஸ்யூவி வகை கார்களில், பென்ட்லி பென்டேகாவும் ஒன்று. அம்பானி குடும்பத்தின் செல்வ செழிப்பை, அவர்களிடம் உள்ள 2 பென்ட்லி பென்டேகா கார்களும் பறைசாற்றுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








