பெட்ரோல் விலை குறைப்பின் 'கெத்தான' பின்னணி.. இந்தியாவின் அதிரடியால் வாலை சுருட்டி கொண்ட அமெரிக்கா

இந்தியாவில் கடந்த ஒரு மாத காலமாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் அமெரிக்காவை இந்தியா அலற விட்ட 'கெத்தான' தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஈரான் நாட்டு அரசுடன் செய்து கொண்டிருந்த அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து மே மாதம் அமெரிக்கா விலகியது. இதனால் ஈரான் அரசுக்கு அமெரிக்கா பல்வேறு வழிகளில் குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறது.

பெட்ரோல் விலை குறைப்பின் 'கெத்தான' பின்னணி.. இந்தியாவின் அதிரடியால் வாலை சுருட்டி கொண்ட அமெரிக்கா

இதன் ஒரு பகுதியாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை படிப்படியாக குறைத்து கொள்ள வேண்டும் என உலக நாடுகளுக்கு அமெரிக்கா பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது. இதனை மீறும் நாடுகளின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை செய்தது.

பெட்ரோல் விலை குறைப்பின் 'கெத்தான' பின்னணி.. இந்தியாவின் அதிரடியால் வாலை சுருட்டி கொண்ட அமெரிக்கா

முழுக்க முழுக்க கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு நாடு ஈரான். ஆனால் கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து ஈரானை தனிமைப்படுத்தி விட வேண்டும் என்பதற்காகவே அமெரிக்கா இவ்வாறு உலக நாடுகளை மிரட்டியது.

பெட்ரோல் விலை குறைப்பின் 'கெத்தான' பின்னணி.. இந்தியாவின் அதிரடியால் வாலை சுருட்டி கொண்ட அமெரிக்கா

முன்னதாக இந்த விவகாரத்தில் கெடு ஒன்றை அமெரிக்கா விதித்திருந்தது. கடந்த நவம்பர் 4ம் தேதிதான் அந்த கெடு. அதாவது நவம்பர் 4ம் தேதிக்கு பிறகு ஈரானில் இருந்து எந்த ஒரு நாடும் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என அமெரிக்கா வலியுறுத்தியது.

பெட்ரோல் விலை குறைப்பின் 'கெத்தான' பின்னணி.. இந்தியாவின் அதிரடியால் வாலை சுருட்டி கொண்ட அமெரிக்கா

ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஏனெனில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தினால், உலகின் பல்வேறு நாடுகளும் வெகுவாக பாதிக்கப்படும்.

பெட்ரோல் விலை குறைப்பின் 'கெத்தான' பின்னணி.. இந்தியாவின் அதிரடியால் வாலை சுருட்டி கொண்ட அமெரிக்கா

எனவேதான் டொனால்டு ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியது. முன்னதாக நவம்பர் 4ம் தேதி நெருங்க நெருங்க பெரும் பரபரப்பு தொற்றி கொண்டிருந்தது. இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர் திருப்பம் ஒன்று அரங்கேறியது.

பெட்ரோல் விலை குறைப்பின் 'கெத்தான' பின்னணி.. இந்தியாவின் அதிரடியால் வாலை சுருட்டி கொண்ட அமெரிக்கா

அதாவது ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்ற தனது எச்சரிக்கையில் இருந்து, இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, இத்தாலி, துருக்கி, கிரீஸ் மற்றும் தைவான் ஆகிய 8 நாடுகளுக்கு அமெரிக்கா திடீரென அடுத்த விலக்கு அளித்தது.

பெட்ரோல் விலை குறைப்பின் 'கெத்தான' பின்னணி.. இந்தியாவின் அதிரடியால் வாலை சுருட்டி கொண்ட அமெரிக்கா

என்றாலும் மேற்கண்ட 8 நாடுகளுக்கும் தற்காலிகமாக மட்டுமே விலக்கு அளிக்கப்படுகிறது என அமெரிக்கா தெரிவித்தது. அதாவது அடுத்த 6 மாதங்களுக்கு இந்த விலக்கு பொருந்தும். அதற்குள்ளாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என அமெரிக்கா கூறியது.

பெட்ரோல் விலை குறைப்பின் 'கெத்தான' பின்னணி.. இந்தியாவின் அதிரடியால் வாலை சுருட்டி கொண்ட அமெரிக்கா

எனவே இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனெனில் இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை மிகவும் அதிப்படியான விலையில் விற்பனையாகி கொண்டிருக்கிறது.

பெட்ரோல் விலை குறைப்பின் 'கெத்தான' பின்னணி.. இந்தியாவின் அதிரடியால் வாலை சுருட்டி கொண்ட அமெரிக்கா

இந்த சூழலில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டால், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை தற்போது இருப்பதை காட்டிலும் இன்னும் அதிகமாக உயர்ந்து விடக்கூடிய அபாயம் நிலவி வந்தது.

பெட்ரோல் விலை குறைப்பின் 'கெத்தான' பின்னணி.. இந்தியாவின் அதிரடியால் வாலை சுருட்டி கொண்ட அமெரிக்கா

எனவேதான் இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் அமெரிக்காவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது இந்தியா.

பெட்ரோல் விலை குறைப்பின் 'கெத்தான' பின்னணி.. இந்தியாவின் அதிரடியால் வாலை சுருட்டி கொண்ட அமெரிக்கா

கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஈரானில் இருந்து மொத்தம் 2.57 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. ஆனால் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 1.89 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை மட்டுமே ஈரானில் இருந்து இந்தியா இறக்குமதி செய்திருந்தது.

Recommended Video

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்
பெட்ரோல் விலை குறைப்பின் 'கெத்தான' பின்னணி.. இந்தியாவின் அதிரடியால் வாலை சுருட்டி கொண்ட அமெரிக்கா

அதாவது 2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை, சுமார் 36 சதவீதம் என்கிற அளவிற்கு இந்தியா அதிகரித்துள்ளது.

பெட்ரோல் விலை குறைப்பின் 'கெத்தான' பின்னணி.. இந்தியாவின் அதிரடியால் வாலை சுருட்டி கொண்ட அமெரிக்கா

பணத்தின் அடிப்படையில் பார்த்தால், கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மொத்தம் 1.42 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அளவிற்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது இந்தியா. இது கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அப்படியே இரட்டிப்பாகியுள்ளது.

பெட்ரோல் விலை குறைப்பின் 'கெத்தான' பின்னணி.. இந்தியாவின் அதிரடியால் வாலை சுருட்டி கொண்ட அமெரிக்கா

நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்கள் (ஏப்ரல்-அக்டோபர்) என்ற அளவில் பார்த்தாலும், ஈரானில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு அதிகரிக்கவே செய்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் 7 மாதங்களில், 17.62 மில்லியன் டன் ஈரான் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கியுள்ளது.

பெட்ரோல் விலை குறைப்பின் 'கெத்தான' பின்னணி.. இந்தியாவின் அதிரடியால் வாலை சுருட்டி கொண்ட அமெரிக்கா

இது கடந்த நிதியாண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில் 38.41 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பணத்தின் அடிப்படையில் பார்த்தால், நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் 9.16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு ஈரான் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கியுள்ளது.

பெட்ரோல் விலை குறைப்பின் 'கெத்தான' பின்னணி.. இந்தியாவின் அதிரடியால் வாலை சுருட்டி கொண்ட அமெரிக்கா

இது கடந்த நிதியாண்டின் முதல் 7 மாதங்களை காட்டிலும் 100 சதவீதம் அதிகம் என்பது கவனிக்கத்தக்க விஷயம். அதுவும் அமெரிக்க தடை போன்ற பிரச்னைகள் நிலவும் சூழலிலும் தொடர்ச்சியாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா அதிகரித்து கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலை குறைப்பின் 'கெத்தான' பின்னணி.. இந்தியாவின் அதிரடியால் வாலை சுருட்டி கொண்ட அமெரிக்கா

இந்தியாவில் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு வரை பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வந்தது. ஆனால் அதன்பின் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்றே குறைக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல் விலை குறைப்பின் 'கெத்தான' பின்னணி.. இந்தியாவின் அதிரடியால் வாலை சுருட்டி கொண்ட அமெரிக்கா

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு, தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் என இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அந்த வகையில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்திருப்பதும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பிற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

Most Read Articles
English summary
Amid US Sanctions, India’s Crude Oil Imports From Iran Increased 36 Percent In 2018 October. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X