நடிகர் பாலகிருஷ்ணா சாகசத்தை கிண்டல் செய்து வாங்கி கட்டிக் கொண்ட ஆனந்த் மஹிந்திரா!

Written By:
Recommended Video - Watch Now!
Angry Bull Almost Rammed Into A Car - DriveSpark

வேடிக்கையாக கமென்ட் அடித்து தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ரசிகர்களிடம் வசமாக சிக்கி தவிக்கிறார் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா.

ஆனந்த் மஹிந்திராவை ட்விட்டரில் வறுத்தெடுக்கும் நடிகர் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் சினிமாக்களில் கற்பனைக்கும் எட்டாத சாகச காட்சிகள் இடம்பெறுவதுண்டு. அவர் சீரியசாக செய்யும் வீரபராக்கிரம காட்சிகளை வைத்தே பல மீம் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இந்த மீம் வீடியோ வயிறு குலுங்க சிரிக்க கியாரண்டியாக இருக்கும்.

 ஆனந்த் மஹிந்திராவை ட்விட்டரில் வறுத்தெடுக்கும் நடிகர் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!

இந்த நிலையில், நடிகர் பாலகிருஷ்ணா ஜெய்சிம்ஹா என்ற புதிய சினிமாவில் நடித்து வருகிறார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் வாலாட்டாதே என்றும் உன் வீரத்தை இப்போது காட்டு பார்க்கலாம் என்று நடிகர் பாலகிருஷ்ணாவை பார்த்து சவால் விடுகிறார்.

 ஆனந்த் மஹிந்திராவை ட்விட்டரில் வறுத்தெடுக்கும் நடிகர் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!

இதனை கண்டு வெகுண்டு எழும் பாலகிருஷ்ணா அருகில் நிற்கும் ஒன்றரை டன் எடையுடைய மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியை முன்புறத்தை ஒரு கையால் அலேக்காக தூக்குகிறார். திரைக்கு வருவதற்கு முன்னரே இந்த வீடியோ எப்படியோ வெளியாகி விட்டது.

மேலும், இந்த வீடியோவை பார்த்த விஷ்ணு சைத்தான்யா என்பவர் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திராவுக்கு ட்விட்டரில் டேக் செய்து வீடியோவை பார்க்கும்படி வேண்டி இருக்கிறார். ஆனந்த் மஹிந்திரா எப்போதுமே ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர்.

தனக்கு டேக் செய்யப்பட்ட அந்த வீடியோவை ஆனந்த் மஹிந்திரா பார்த்துள்ளார். பார்த்துவிட்டு அவர் கடந்து செல்லவில்லை.

பார்த்தவுடனே, "ஹா ஹா... இனி எங்களது சர்வீஸ் மையங்களில் பொலிரோ கார் பரிசோதனைக்கு ஹைட்ராலிக் லிஃப்ட் தேவை இல்லை போலும்," என்று கமென்ட் அடித்தார்.

 ஆனந்த் மஹிந்திராவை ட்விட்டரில் வறுத்தெடுக்கும் நடிகர் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!

கமென்ட் அடித்ததுதான் தாமதம். இந்த பதிவுக்கு நடிகர் பாலகிருஷ்ணா விசிறிகள் ட்விட்டரில் வரிசை கட்டி ஆனந்த் மஹிந்திராவை உண்டு இல்லை என்று செய்து வருகின்றனர். சம்பு மன்டவா என்பவர், நடிகர் பாலகிருஷ்ணாவை பற்றி உங்களுக்கு ஏதும் தெரியாமல் கமென்ட் அடித்துள்ளீர்கள்.

டோலிவுட்டில் நடிகரான பாலகிருஷ்ணா 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். உங்களது கார் மாடல்களை விட இது மிக அதிகம். இதுபோன்ற கமென்ட்டை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. உங்களை போன்ற பொறுப்பானவர்கள் அடுத்தவர் மீது இதுபோன்ற கமென்ட் செய்யக்கூடாது என்ற ரீதியில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மற்றொருவர், உங்களது மீது இருக்கும் மதிப்பை இழந்துவிடாதீர்கள். மஹிந்திரா நிறுவனத்தின் சர்வீஸ் மிக மோசமானது. பாலைய்யாவை[நடிகர் பாலகிருஷ்ணாவின் செல்லப்பெயர்] கிண்டல் செய்ய வேண்டாம். வார்த்தைகளில் கவனம் தேவை என்று சற்று தடித்த வார்த்தைகளுடன் பதிலடி கொடுத்துள்ளார்.

 ஆனந்த் மஹிந்திராவை ட்விட்டரில் வறுத்தெடுக்கும் நடிகர் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!

அத்துடன், #BoycottMahindra and #BanMahindra என்ற ஹேஷ்டேக்குகளையும் உருவாக்கி, மஹிந்திராவுக்கு எதிராக ட்விட்டர் போரை துவங்கி இருக்கின்றனர். இந்த விஷயம் ஆனந்த் மஹிந்திராவுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.


உஷார்... மிக மோசமான 'ரீ- சேல்' மதிப்புடைய புதிய கார்கள்!

ரீசேல் மதிப்பு குறைவான புதிய கார் மாடல்கள்!

காமெடியான விஷயத்தை பார்த்த உங்களுக்கு ஒரு சீரியசான விஷயத்தை தொடர்நது வழங்குகிறோம். ரீசேல் மதிப்பு குறைவான புதிய கார் மாடல்களை தொடர்ந்து பார்க்கலாம். காருக்கான உங்கள் முதலீட்டை சரியாக செய்ய இந்த செய்தி உதவலாம்.

ஃபியட் புன்ட்டோ

ஃபியட் புன்ட்டோ

கட்டுமானம், பாதுகாப்பில் சிறந்த கார் ஃபியட் புன்ட்டோ. ஆனால், இந்த காரின் விற்பனை மிக மோசமான நிலையை எட்டி இருக்கிறது. அத்துடன் ஃபியட் நிறுவனத்தின் வர்த்தகமும் நிச்சயமற்ற நிலையில் இருப்பதால் இந்த கார் வாங்குவதை தவிர்க்கலாம்.

ஃபியட் லீனியா

ஃபியட் லீனியா

ஃபியட் லீனியா காரும் விற்பனையில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. தரமான கட்டமைப்பு கொண்ட கார் மாடல் என்று கார் பிரியர்கள் மத்தியில் பெயர் எடுத்தாலும், ஃபியட் நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவை திருப்திகரமாக இல்லாததே, இந்த காரின் மதிப்பு குறைவதற்கு காரணமாகி விட்டது.

டாடா நானோ

டாடா நானோ

அடுத்து நமது பட்டியலில் நிச்சயமற்ற எதிர்காலத்துடன் விற்பனையில் இருக்கும் மாடல் டாடா நானோ ஜென்எக்ஸ். அசிங்கமான தோற்றம், திராணி இல்லாத எஞ்சின் போன்றவை இந்த காரின் தோல்விக்கு காரணங்கள். மேலும், ஒரு லட்ச ரூபாய் கார் என்று கூறி வந்த இந்த கார் தற்போது விலையிலும் மதிப்பு வாய்ந்ததாக இல்லை.

டாடா போல்ட்

டாடா போல்ட்

பெரும் எதிர்பார்ப்புடன் வந்த டாடா போல்ட் காருக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. இதனால், இந்த காரின் விற்பனை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. எனவே, இந்த காருக்கு ரீசேல் மதிப்பு நிச்சயம் குறைவாக கிடைக்கும். எனவே, இந்த காரையும் தவிர்ப்பது உத்தமம்.

டாடா சஃபாரி ஸ்ட்ராம்

டாடா சஃபாரி ஸ்ட்ராம்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியும் மறுவிற்பனை மதிப்பில் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இந்த காரை பலர் விரும்பி வாங்கி நீண்ட கால அடிப்படையில் பயன்படுத்தினாலும், மீண்டும் விற்பனை செய்ய நினைக்கும்போது போதிய மதிப்பை பெற்றுத் தருவதில்லை.

மஹிந்திரா நூவோஸ்போர்ட்

மஹிந்திரா நூவோஸ்போர்ட்

மஹிந்திரா குவான்ட்டோ என்ற பெயரில் அறிமுகமாகி, தோல்வி கண்ட மாடலை புதுப்பித்து நூவோஸ்போர்ட் என்ற பெயரில் மஹிந்திரா களமிறக்கியது. ஆனால், அப்போதும் கூட இந்த கார் எதிர்பார்த்த அளவு விற்பனையில் சோபிக்கவில்லை. மேலும், இந்த காருக்கான மறுவிற்பனை மதிப்பும் குறைவாக உள்ளது.

மஹிந்திரா வெரிட்டோ வைப்

மஹிந்திரா வெரிட்டோ வைப்

ரெனோ கார் நிறுவனம் பிரிந்தபோது, அந்த நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட லோகன் காரை வெரிட்டோ என்ற பெயரிலும், அந்த காரில் மாற்றங்களை செய்து ஹேட்ச்பேக் ரகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வெரிட்டோ வைப் காரையும் தவிர்ப்பது நல்லது. வெரிட்டோ வைப் காருக்கு மிக மோசமான ரீசேல் மதிப்பு இருக்கிறது.

ஹோண்டா பிரியோ

ஹோண்டா பிரியோ

ஹோண்டா பிரியோ காரின் விற்பனையும் வெறும் 500க்கும் கீழாக இருக்கிறது. இந்த காருக்கும் போதிய வரவேற்பு இல்லை. இதனால், இந்த காரின் மதிப்பு வெகுவாக குறைத்து கேட்கப்படுகிறது. இந்த காரின் டிசைன்தான் இதற்கு எதிரியாக இருக்கிறது.

நிஸான் டெரானோ

நிஸான் டெரானோ

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் சிறிய மாற்றங்களை செய்து நிஸான் நிறுவனம் டெரானோ என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது. இந்த எஸ்யூவியின் விற்பனையும் மிக மோசமான நிலையிலேயே இருக்கிறது. மேலும், டஸ்ட்டரைவிட அதிக விலை கொண்ட இந்த எஸ்யூவிக்கு ரீசேல் மதிப்பு குறைவாகவே இருக்கிறது.

ரெனோ லாட்ஜி

ரெனோ லாட்ஜி

மாருதி எர்டிகாவைவிட சற்று இடவசதி கூடுதலாகவும், டொயோட்டா இன்னோவா காரைவிட விலை குறைவாகவும் களமிறக்கப்பட்ட ரெனோ லாட்ஜி காருக்கும் வரவேற்பு எதிர்பார்த்த அளவு இல்லை. இந்த காரின் விற்பனை மதிப்பும் குறைவாகவே இருக்கிறது.

டட்சன் கோ

டட்சன் கோ

மிக மோசமான கட்டுமானத் தரம், குறைவான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருப்பதால், வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

டட்சன் கோ ப்ளஸ்

டட்சன் கோ ப்ளஸ்

மினி எம்பிவி கார் என்ற விளம்பரத்துடன் வந்தாலும், மூன்றாவது வரிசை ஒப்புக்கு கொடுக்கப்பட்டதும், போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததும் இந்த டட்சன் கோ ப்ளஸ் காருக்கும் வரவேற்பு இல்லை. இந்த காரின் ரீசேல் மதிப்பும் மிக குறைவாகவே இருக்கிறது.

English summary
Anand Mahindra ‘trolls’ Actor Balakrishna Movie Scene Video Goes Viral On Twitter.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark