இந்தியா வந்த மற்றுமொரு டெஸ்லா மாடல் எக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி!

டெஸ்லா மாடல் எக்ஸ் மின்சார எஸ்யூவியை அடுத்து ஒரு இந்தியர் ஒருவர் இறக்குமதி செய்து வாங்கி இருக்கிறார். டெஸ்லா மாடல் எக்ஸ் எஸ்யூவியின் நடுத்தர விலையிலான 100டி என்ற வேரியண்ட்தான் தற்போது இந்தியாவில் இறக்

By Saravana Rajan

டெஸ்லா மாடல் எக்ஸ் மின்சார எஸ்யூவியை அடுத்து ஒரு இந்தியர் ஒருவர் இறக்குமதி செய்து வாங்கி இருக்கிறார். அந்த காரின் படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியா வந்த மற்றுமொரு டெஸ்லா மாடல் எக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி!

டெஸ்லா எலக்ட்ரிக் கார்களின் செயல்திறனும், அதன் பயண தூரமும் உலக அளவில் வாடிக்கையாளர்களால் சிலாகித்து பேசப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவை தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளிலும் வர்த்தகத்தை துவங்குவதற்கான முயற்சிகளில் டெஸ்லா நிறுவனம் ஈடுபட்டு இருக்கிறது.

இந்தியா வந்த மற்றுமொரு டெஸ்லா மாடல் எக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி!

இந்தியாவிலும் வர்த்தகத்தை துவங்குவதற்கான முயற்சிகள் குறித்து டெஸ்லா நிறுவனம் பரிசீலித்து வருகிறது. இந்த சூழலில், டெஸ்லா மாடல் எக்ஸ் மின்சார எஸ்யூவியை இந்தியர் ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பரில் இறக்குமதி செய்து வாங்கினார். அது டெஸ்லா மாடல் எக்ஸ் எஸ்யூவியின் பி 90டி என்ற விலை உயர்ந்த வேரியண்ட்டாக இருந்தது.

இந்தியா வந்த மற்றுமொரு டெஸ்லா மாடல் எக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி!

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஆட்டோகிராஃப்ட் கஸ்டமைசேஷன் என்ற நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது டெஸ்லா மாடல் எக்ஸ் காரை வாடிக்கையாளருக்காக இறக்குமதி செய்து கொடுக்கும் பொறுப்பை ஏற்று செவ்வனே முடித்துள்ளது. இந்தியாவில் அந்த கார் வந்து இறங்கியபோது எடுக்கப்பட்ட படங்களை பெருமையுடன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது.

இந்தியா வந்த மற்றுமொரு டெஸ்லா மாடல் எக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி!

டெஸ்லா மாடல் எக்ஸ் எஸ்யூவியின் நடுத்தர விலையிலான 100டி என்ற வேரியண்ட்தான் தற்போது இந்தியாவில் இறக்குமதி செய்து டெலிவிரி கொடுக்கப்பட இருக்கிறது. இந்த கார் அமெரிக்காவில் 96,000 டாலர் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியா வந்த மற்றுமொரு டெஸ்லா மாடல் எக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி!

இறக்குமதி வரி, பதிவு கட்டணம், இறக்குமதிக்கான கட்டணம் என கூடுதலாக சேர்த்து ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் இந்த காருக்கு உரிமையாளர் செலவழித்துள்ளதாக தெரிகிறது. உரிமையாளர் விபரம் வெளியிடப்படவில்லை.

இந்தியா வந்த மற்றுமொரு டெஸ்லா மாடல் எக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி!

வலது பக்க ஸ்டீயரிங் வீல் அமைப்புடைய டெஸ்லா மாடல் எக்ஸ் 100டி மாடல்தான் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது. இது க்ராஸ்ஓவர் பாடி ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, எஸ்யூவி மற்றும் செடான் கார்களை கலந்து கட்டியதாக டிசைன் செய்யப்பட்டிருக்கும் மாடல் இது.

இந்தியா வந்த மற்றுமொரு டெஸ்லா மாடல் எக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி!

இந்த எஸ்யூவியில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. உலகின் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்ட எஸ்யூவி மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. மூன்று வரிசை இருக்கை அமைப்பை பெற்றிருக்கிறது. ஆட்டோபைலட் வசதியும் கொண்டது.

இந்தியா வந்த மற்றுமொரு டெஸ்லா மாடல் எக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி!

இந்த எஸ்யூவியின் 70டி என்ற பேஸ் மாடலில் 75kW பேட்டரி இருக்கிறது. இந்த பேஸ் மாடல் முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்யும்போது 380 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் வாய்ந்தது. 0 - 100 கிமீ வேகத்தை 4.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 209 கிமீ வேகம் வரை செல்லும்.

இந்தியா வந்த மற்றுமொரு டெஸ்லா மாடல் எக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி!

இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் டெஸ்லா மாடல் எக்ஸ் 100டி மாடலில் 100kW பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 474 கிமீ தூரம் வரை பயணிக்கும். மணிக்கு 249 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்ட எலக்ட்ரிக் கார் மாடல். அத்துடன் 0 - 100 கிமீ வேகத்தை 4.9 வினாடிகளில் எட்டிவிடும்.

இந்தியா வந்த மற்றுமொரு டெஸ்லா மாடல் எக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி!

இந்த காரில் சேட்டிலைட் ரேடியோ, உயர்ரக ஆடியோ சிஸ்டம், வைஃபை ஹாட் ஸ்பாட் வசதி, பகல்நேர ரன்னிங் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. பிரேக் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் மிரர், லேன் கீப்பிங் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

Source: autokraftcustoms

More from DriveSpark

Article Published On: Thursday, August 16, 2018, 17:29 [IST]
English summary
India’s second Tesla Model X and it’s a 100D this time. Word has it that this would call Ahmedabad it’s home.
மேலும்... #டெஸ்லா #tesla
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+