ஆப்பிள் கார் பிளே தொழிற்நுட்பத்தை பெறுகிறது டாடா நெக்ஸான்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆப்பிள் கார்பிளே தொழிற்நுட்பத்தை நெக்ஸான் கான்செப்ட் எஸ்யூவி காரில் கொண்டு வந்துள்ளது. டாடா நெக்ஸான் கார் முதன் முதலாக இந்தியாவில் ரிலீஸ் ஆன போது அதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ

By Balasubramanian

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆப்பிள் கார்பிளே தொழிற்நுட்பத்தை நெக்ஸான் கான்செப்ட் எஸ்யூவி காரில் கொண்டு வந்துள்ளது. டாடா நெக்ஸான் கார் முதன் முதலாக இந்தியாவில் ரிலீஸ் ஆன போது அதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ தொழிற்நுட்பம் மட்டுமே இருந்தது. தற்போது புதிய ஆப்பிள்பிளே தொழிற்நுட்பம் பொருத்தப்டபட்ட கார் இந்த ஆகஸ்ட் மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது.

ஆப்பிள் கார் பிளே தொழிற்நுட்பத்தை பெறுகிறது டாடா நெக்ஸான்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே கார் வாங்கிய டாடா நெக்ஸான் வாடிக்கையாளர்களும் இந்த அப்டேட்டை அருகில் உள்ள டீசல்ஷிப்பிற்கு சென்று பெற்று கொள்ளலாம் என கூறப்படுகிறது.

ஆப்பிள் கார் பிளே தொழிற்நுட்பத்தை பெறுகிறது டாடா நெக்ஸான்

எக்ஸ்இசட், எக்ஸ் இசட் பிளஸ், மற்றும் எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஆகிய வேரியன்ட்களில் 6.5 இன்ச் ப்ளோட்டிங் டச்ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ பிளே உடன் இது வரை விற்பனையானது. இதில் அதில் ஆப்பிள் கார் பிளேவும் இருக்கும்.

ஆப்பிள் கார் பிளே தொழிற்நுட்பத்தை பெறுகிறது டாடா நெக்ஸான்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் எக்ஸ்யூவி கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாகியது. அந்த கார் அறிமுகமாகியதில் இருந்து இந்தியாவில் நல்ல விற்பனையில் இருந்தது.

ஆப்பிள் கார் பிளே தொழிற்நுட்பத்தை பெறுகிறது டாடா நெக்ஸான்

கடந்த மே மாதம் இந்த காரின் ஏஎம்டி வெர்ஷன் இதன் டாப் வேரியன்ட் காரான எக்ஸ்இசட்ஏ பிளஸ் காரில் பொருத்தப்பட்டது. சமீபத்தில் எக்எம் எனும்நடுத்தர வேரியன்டிலும் ஏஎம்டி கயர் பாக்ஸ் பொருத்தப்பட்டது.

ஆப்பிள் கார் பிளே தொழிற்நுட்பத்தை பெறுகிறது டாடா நெக்ஸான்

டாடா நெக்ஸான் காரில் உள்ள டச் ஸ்கிரின் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தில் வாய்ஸ் கமெண்ட், நேவிகேஷன், டெக்ஸ்ட் மற்றும் வாட்ஸ்அப் ரீட் அவுட், ஆகிய வசதிகளும், முகப்பு பகுதியில் புரோஜக்டர் ஹெட்லைட் மற்றும் எல்இடி டே டைம் லைட் மற்றும் 16 இன்ச் அலாய் வில் கிடைக்கிறது.

ஆப்பிள் கார் பிளே தொழிற்நுட்பத்தை பெறுகிறது டாடா நெக்ஸான்

டாடா நெக்ஸான் காரின் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை டூயல் ஏர் பேக், ஏபிஎஸ், இபிடி, ஐஎஸ்ஓ பிக்ஸ் சைல்டு சீட், சீட் பெல்ட் ப்ரீ டென்ஸர், ஆகிய வசதிகள் இருக்கிறது.

ஆப்பிள் கார் பிளே தொழிற்நுட்பத்தை பெறுகிறது டாடா நெக்ஸான்

முக்கியமாக இந்த கார் குளோபல் என்சிஏபி க்ராஸ் டெஸ்டடில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. டாடா நெக்ஸான் காரை பொருத்தவரை 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது.

ஆப்பிள் கார் பிளே தொழிற்நுட்பத்தை பெறுகிறது டாடா நெக்ஸான்

இதில் பெட்ரோல் இன்ஜின் 108 பிஎச்பி பவரையும், 170 என்ம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. டீசல் இன்ஜின் 108 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் தினையும் வெளிப்படுத்துகிறது. இதன் கியர் பாக்ஸை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

English summary
Apple CarPlay get installed in Tata Nexon. Read in Tamil
Story first published: Friday, August 10, 2018, 13:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X