இங்கிலாந்தை அடுத்து வங்கதேசத்திலும் வெற்றி.. அசோக் லேலண்ட் நிறுவனத்தால் தமிழகத்திற்கு கவுரவம்..

வங்கதேச நாட்டிற்கு 300 டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை இந்திய நிறுவனமான அசோக் லேலண்ட் வென்றுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Arun

இந்தியாவை சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்று அசோக் லேலண்ட் லிமிடெட் (ALL). தமிழக தலைநகர் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அசோக் லேலண்ட் நிறுவனத்தை, ஹிந்துஜா குழுமம் நிர்வகித்து வருகிறது.

 இங்கிலாந்தை அடுத்து வங்கதேசத்திலும் வெற்றி.. அசோக் லேலண்ட் நிறுவனத்தால் தமிழகத்திற்கு கவுரவம்..

வணிக வாகன (commercial vehicle) உற்பத்தியில், இந்தியாவின் 2வது மிகப்பெரிய நிறுவனம் என்ற அந்தஸ்தை அசோக் லேலண்ட் பெற்றுள்ளது. அதிக அளவில் பஸ்களை உற்பத்தி செய்யும் உலக அளவிலான நிறுவனங்களின் பட்டியலில், அசோக் லேலண்ட் 4வது இடத்தில் உள்ளது.

 இங்கிலாந்தை அடுத்து வங்கதேசத்திலும் வெற்றி.. அசோக் லேலண்ட் நிறுவனத்தால் தமிழகத்திற்கு கவுரவம்..

அத்துடன் டிரக்குகளை (trucks) உற்பத்தி செய்யும் பணியிலும் அசோக் லேலண்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான டிரக்குகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பட்டியலில், அசோக் லேலண்ட் தற்போது 12வது இடத்தில் உள்ளது.

 இங்கிலாந்தை அடுத்து வங்கதேசத்திலும் வெற்றி.. அசோக் லேலண்ட் நிறுவனத்தால் தமிழகத்திற்கு கவுரவம்..

இதனிடையே வங்கதேச சாலை போக்குவரத்து கழகத்திற்கு (Bangladesh Road Transport Corporation-BRTC), 300 டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தை அசோக் லேலண்ட் நிறுவனம் வென்றுள்ளது.

 இங்கிலாந்தை அடுத்து வங்கதேசத்திலும் வெற்றி.. அசோக் லேலண்ட் நிறுவனத்தால் தமிழகத்திற்கு கவுரவம்..

வங்கதேச தலைநகர் டாக்காவில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே அதிக அளவிலான டபுள் டக்கர் பஸ்களை இயக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நடத்தப்பட்ட டெண்டரில், அசோக் லேலண்ட் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.

 இங்கிலாந்தை அடுத்து வங்கதேசத்திலும் வெற்றி.. அசோக் லேலண்ட் நிறுவனத்தால் தமிழகத்திற்கு கவுரவம்..

தற்போதில் இருந்து 8 மாதங்களுக்குள், 300 டபுள் டக்கர் பஸ்களையும், வங்கதேச சாலை போக்குவரத்து கழகத்திற்கு, அசோக் லேலண்ட் நிறுவனம் சப்ளை செய்து விடும். இதன்மூலம் டாக்கா நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை ஓரளவு சமாளிக்க முடியும் என வங்கதேச அரசு கருதுகிறது.

 இங்கிலாந்தை அடுத்து வங்கதேசத்திலும் வெற்றி.. அசோக் லேலண்ட் நிறுவனத்தால் தமிழகத்திற்கு கவுரவம்..

இதுகுறித்து அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வினோத் கே.தாசரி கூறுகையில், ''எங்களின் முக்கியமான ஏற்றுமதி மார்க்கெட்களில் வங்கதேசமும் ஒன்று. தற்போது வென்றுள்ள ஆர்டரின் மூலம், எங்களின் நிலையை அங்கு இன்னும் வலுவாக்கி கொள்ள முடியும்'' என்றார்.

 இங்கிலாந்தை அடுத்து வங்கதேசத்திலும் வெற்றி.. அசோக் லேலண்ட் நிறுவனத்தால் தமிழகத்திற்கு கவுரவம்..

முன்னதாக லண்டன் மாநகர போக்குவரத்து பயன்பாட்டிற்காக 31 எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் ஆர்டரை, ஆப்ட்ரா பிஎல்சி என்ற நிறுவனம் சமீபத்தில் வென்றது. ஆப்ட்ரா பிஎல்சி என்பது அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

 இங்கிலாந்தை அடுத்து வங்கதேசத்திலும் வெற்றி.. அசோக் லேலண்ட் நிறுவனத்தால் தமிழகத்திற்கு கவுரவம்..

டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டன் ( Transport for London-TfL) எனும் அரசு நிறுவனம்தான், ஆப்ட்ரா பிஎல்சி நிறுவனத்திற்கு, இந்த ஆர்டரை வழங்கியது. TfL என்பது ஓர் அரசு அமைப்பாகும். கிரேட்டர் லண்டனின் போக்குவரத்திற்கு, TfL நிறுவனமே முழு பொறுப்பு.

 இங்கிலாந்தை அடுத்து வங்கதேசத்திலும் வெற்றி.. அசோக் லேலண்ட் நிறுவனத்தால் தமிழகத்திற்கு கவுரவம்..

இந்த ஆர்டரை வென்ற ஆப்ட்ரா பிஎல்சி நிறுவனத்தின் பெருமளவிலான பங்குகளை, இந்திய நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம்தான் தன் கைவசம் வைத்துள்ளது. சமீப காலமாக பல்வேறு வெளிநாடுகளின் ஆர்டர்களை அசோக் லேலண்ட் நிறுவனம் வென்று வருவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Friday, August 17, 2018, 16:59 [IST]
English summary
Ashok Leyland Wins BRTC Order. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+