2019 அஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் கார் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய தலைமுறை அம்சங்களுடன் அஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வெளிப்புறம் மற்றும் உட்புறம் முற்றிலும் மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த காரில

புதிய தலைமுறை அம்சங்களுடன் அஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

2019 அஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் கார் விற்பனைக்கு அறிமுகம்!!

முதல்கட்டமாக 20 புதிய அஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் கார்கள் இந்தியாவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் இந்திய வினியோகஸ்தராக செயல்பட்டு வரும் இன்ஃபினிட்டி நிறுவனம் இந்த காரின் விற்பனையை கவனிக்கும்.

2019 அஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் கார் விற்பனைக்கு அறிமுகம்!!

மும்பை மற்றும் பெங்களூரில் உள்ள இன்ஃபினிட்டி ஷோரூம்கள் வாயிலாக இந்த கார்களுக்கு முன்பதிவு மற்றும் டெலிவிரி கொடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இப்போது முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டிசம்பர் முதல் டெலிவிரி கொடுக்கப்படும்.

2019 அஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் கார் விற்பனைக்கு அறிமுகம்!!

பழைய அஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் கார்களிலிருந்து முற்றிலும் வேறுபடும் விதத்தில் டிசைனில் அதிக மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. அஸ்டன் மார்ட்டின் டிபி11 காரின் அடிப்படையில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 70 சதவீத பாகங்கள் முற்றிலும் புதிதாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

2019 அஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் கார் விற்பனைக்கு அறிமுகம்!!

பழைய மாடலைவிட இலகு எடை கொண்டதாகவும், அதிக சக்திவாய்ந்த மாடலாகவும் இருக்கிறது. காற்றை கிழித்துக் கொண்டு தங்கு தடையில்லாமல் செல்லும் விதத்தில், முன்புறம் மற்றும் பின்புறத்திற்கான துணை ஃப்ரேம்கள் மற்றும் ஸ்பிளிட்டர் மற்றும் டிஃபியூசர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வீல் ஆர்ச்சுகளில் புகும் காற்று பக்கவாட்டில் இருக்கும் செவுள் பகுதி வழியாக வெளியேறும்.

2019 அஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் கார் விற்பனைக்கு அறிமுகம்!!

உட்புறமும் முற்றிலும் புதிதாக மாற்றி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மெர்சிடிஸ் ஏஎம்ஜி கார்களின் டிசைன் தாத்பரியங்களையும் உட்புறத்தில் காண முடிகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல், உட்புறத்தை கஸ்டமைஸ் செய்து பெற முடியும்.

2019 அஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் கார் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த காரில் பான்டட் அலுமினியத்தாலான அடிச்சட்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 1,530 கிலோ எடையை கொண்டுள்ளது. 122மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கிறது. எலக்ட்ரானிக் ரியர் டிஃபரன்ஷியல் கொண்ட முதல் அஸ்டன் மார்ட்டின் காராக புதிய வான்டேஜ் கார் வந்துள்ளது.

2019 அஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் கார் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய அஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் காரில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 503 பிஎச்பி பவரையும், 685 என்எம் டார்க் திறனையும் வழஹ்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 315 கிமீ வேகம் வரை செல்லும்.

2019 அஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் கார் விற்பனைக்கு அறிமுகம்!!

முற்றிலும் புதிய காராக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் புதிய அஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் கார் ரூ.2.95 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி, போர்ஷே 911 டர்போ மற்றும் ஆடி ஆர்8 வி10 ஆகிய கார் மாடல்களுடன் போட்டி போடும்.

Article Published On: Wednesday, September 26, 2018, 13:21 [IST]
English summary
Aston Martin has launched their latest generation Vantage in India. The new Aston Martin Vantage has been priced at Rs 2.95 crore, ex-showroom (India). Aston Martin India dealers, Infinity Cars will be handling the sales of the brand from Mumbai and Bangalore.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+