இந்தியாவில் அறிமுகமாகிறது ஆடி ஏ1 ஸ்போர்ட்பேக் சொகுசு கார்?
இரண்டாம் தலைமுறை ஏ1 ஸ்போர்ட்பேக் என்ற சொகுசு ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவது குறித்து ஆடி பரிசீலித்து வருகிறது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB A0 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட
இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் முதல் இடத்தில் இருந்த ஆடியை விற்பனையில் துவைத்து எடுத்து வருகிறது மெர்சிடிஸ் பென்ஸ். இந்த நிலையில், மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது ஆடி கார் நிறுவனம்.

இதற்கு வலு சேர்க்கும் விதமாக குறைவான விலை கொண்ட ஹேட்ச்பேக் ரக சொகுசு காரை இந்தியாவில் களமிறக்க ஆடி திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, இரண்டாம் தலைமுறை ஏ1 ஸ்போர்ட்பேக் என்ற சொகுசு ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவது குறித்து ஆடி பரிசீலித்து வருகிறது.

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB A0 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட இந்த புதிய ஆடி ஹேட்ச்பேக் கார் கடந்த மாதம்தான் ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்பட்டது. மிக வசீகரமான தோற்றத்துடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆடி ஏ1 ஸ்போர்ட்பேக் கார் 40,000 டாலர் விலையில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.27.46 லட்சம் விலை கொண்டதாக இருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவில் இந்த கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். மேலும், ஆடி ஏ3 காரைவிட விலை குறைவாக நிலைநிறுத்தப்படும்.

மேலும், 3,000சிசி.,க்கும் மேற்பட்ட திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2,500சிசி திறனுக்கும் மேற்பட்ட டீசல் எஞ்சின்களுக்கு இந்தியாவுக்கென மாற்றங்கள் செய்யாத வகையில் இறக்குமதி செய்வதற்கு வழிவகை செய்யும் விதத்தில், சட்டத்தில் தளர்வுகள் கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

எனவே, அதிக திறன் வாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களை இந்தியாவில் எளிதாக இறக்குமதி செய்து விற்பனை செய்ய வாய்ப்பு சொகுசு கார் நிறுவனங்களுக்கு கிட்ட இருக்கிறது. இது அனைத்து சொகுசு கார் நிறுவனங்களுக்கும் மகிழ்ச்சியான தகவலாக இருப்பதுடன், அதிக எஞ்சின் ஆப்ஷன்களை இந்தியாவில் வழங்குவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.

இதன் காரணமாக, ஆடி ஏ1 ஸ்போர்ட்பேக் காரை இந்தியாவில் எளிதாக விற்பனைக்கு கொண்டு வர முடியும் என்று ஆடி கார் நிறுவனம் கருதுகிறது. இந்த கார் இந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பாவில் விற்பனைக்கு செல்கிறது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source:IAB


Click it and Unblock the Notifications








