ஆடி - ஏர்பஸ் கூட்டணியின் புதிய பறக்கும் டாக்சி: சோதனை ஓட்டம் ஆரம்பம்!

ஆடி கார் நிறுவனத்தின் புதிய பறக்கும் டாக்சியின் சோதனை ஓட்டம் துவங்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஆடி கார் நிறுவனத்தின் புதிய பறக்கும் டாக்சியின் சோதனை ஓட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. முதல்முறையாக பொது பார்வையாளர்கள் முன்னிலையிலும் சோதனை செய்து காண்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதுமையான பறக்கும் டாக்சி கான்செப்ட் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஆடி - ஏர்பஸ் கூட்டணியின் புதிய பறக்கும் டாக்சி: சோதனை ஓட்டம் ஆரம்பம்!

ஆடி கார் நிறுவனம் ஏர்பஸ் மற்றும் இட்டால்டிசைன் நிறுவனங்களுடன் இணைந்து புதிய பறக்கும் டாக்சி வாகனத்தை உருவாக்கி இருக்கிறது. ட்ரோன் வகையிலான இந்த பயணிகளை சுமந்து செல்லும் இந்த பறக்கும் டாக்சியானது பாப் அப் நெக்ஸ்ட் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

ஆடி - ஏர்பஸ் கூட்டணியின் புதிய பறக்கும் டாக்சி: சோதனை ஓட்டம் ஆரம்பம்!

இந்த நிலையில், ஆம்ஸ்டர்டாம் நகரில் நடந்து வரும் ட்ரோன் வீக் என்ற புதுமையான பறக்கும் வாகன தயாரிப்புகளுக்கான திருவிழாவில் பாப்.அப் நெக்ஸ்ட் பறக்கும் டாக்சி மாடலின் சோதனை ஓட்டம் துவங்கப்பட்டுள்ளது.

ஆடி - ஏர்பஸ் கூட்டணியின் புதிய பறக்கும் டாக்சி: சோதனை ஓட்டம் ஆரம்பம்!

இந்த பறக்கும் டாக்சியில் என்ன புதுமையெனில், இதன் பயணிகளுக்கான கேபின் பகுதியை ஆடி காரிலும், ஆடி ட்ரோனிலும் எளிதாக இணைத்து பயணிக்க முடியும். ஆம், 2 இன் 1 என்ற டிசைன் தாத்பரியத்தில் இந்த புதுமையான பறக்கும் டாக்சி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஆடி - ஏர்பஸ் கூட்டணியின் புதிய பறக்கும் டாக்சி: சோதனை ஓட்டம் ஆரம்பம்!

தேவைப்படும்போது காரிலிருந்து ட்ரோனுக்கு பயணிகள் அமர்ந்திருக்கும் கேபின் பகுதியை சில வினாடிகளில் இணைத்துக் கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்கு பறந்துவிட முடியும். இந்த புதுமையான பறக்கும் டாக்சி முதல்முறையாக பார்வையாளர்கள் முன்னிலையில் சோதித்து காண்பிக்கப்பட்டுள்ளது.

ஆடி - ஏர்பஸ் கூட்டணியின் புதிய பறக்கும் டாக்சி: சோதனை ஓட்டம் ஆரம்பம்!

உதாரணத்திற்கு வீட்டிலிருந்து பறக்கும் டாக்சி நிலையத்திற்கு காரில் சென்று அங்கிருந்து இறங்கி ஏற வேண்டியதில்லை. அதே கேபினில் தொடர்ந்து செல்ல வேண்டிய இடத்திற்கு இந்த பறக்கும் ட்ரோனில் சென்று சேர்ந்து விட முடியும்.

ஆடி - ஏர்பஸ் கூட்டணியின் புதிய பறக்கும் டாக்சி: சோதனை ஓட்டம் ஆரம்பம்!

இது உண்மையான பறக்கும் டாக்சியின் 4 ல் 1 பங்கு பரிமாணம் உடைய ஸ்கேல் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. தொடர் சோதனை ஓட்டங்கள் மற்றும் அடுத்த கட்ட முயற்சிகளில் இந்த பறக்கும் டாக்சி உண்மையான வடிவத்திற்கு மேம்படுத்தப்படும்.

ஆடி - ஏர்பஸ் கூட்டணியின் புதிய பறக்கும் டாக்சி: சோதனை ஓட்டம் ஆரம்பம்!

இது முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் மின்சார பறக்கும் டாக்சியாக உருவாக்கப்பட்டு வருவதுடன், தானியங்கி முறையில் செல்லுமிடத்திற்கு பயணிகளை கொண்டு சேர்க்கும். எனவே, இதற்காக பைலட்ட பயிற்சி அல்லது தனி பைலட் தேவையில்லை.

ஆடி - ஏர்பஸ் கூட்டணியின் புதிய பறக்கும் டாக்சி: சோதனை ஓட்டம் ஆரம்பம்!

பயணத்தின்போது அலுவலகப் பணிகள் அல்லது பொழுதுபோக்கு அம்சங்களுடன் பயணத்தை கடந்து செல்வதற்கும் இந்த பறக்கும் டாக்சி வரப்பிரசாதமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பறக்கும் டாக்சியானது ஏர்பஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான வூம் என்ற பிரிவானது தென் அமெரிக்காவில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தி வருகிறது.

ஆடி - ஏர்பஸ் கூட்டணியின் புதிய பறக்கும் டாக்சி: சோதனை ஓட்டம் ஆரம்பம்!

அடுத்து முழுமையான அளவுடைய மாடலை உருவாக்கி சோதனை ஓட்டம் நடத்துவதற்கு ஆடி - ஏர்பஸ் கூட்டணி திட்டமிட்டுள்ளது. எனினும், இந்த பறக்கும் டாக்சி நடைமுறை பயன்பாட்டிற்கு வருவதற்கு குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் பிடிக்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஆடி
English summary
Audi - Airbus Alliance Starts Testing Flying Taxi Concept.
Story first published: Thursday, November 29, 2018, 11:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X