அட்டகாசமான அம்சங்களுடன் ஆடி எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்: முழு விபரம்!

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த நிகழ்ச்சியில் ஆடி e-Tron மின்சார எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டது. ஆடி நிறுவனத்தின் முத்தாய்ப்பான டிசைன் அம்சங்களுடன் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் வடிவமை

ஆடி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பேட்டரியில் இயங்கும் இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அட்டகாசமான அம்சங்களுடன் ஆடி எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்: முழு விபரம்!

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த நிகழ்ச்சியில், ஆடி e-Tron மின்சார எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டது. ஆடி நிறுவனத்தின் முத்தாய்ப்பான டிசைன் அம்சங்களுடன் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பிற ஆடி எஸ்யூவி மாடல்களை போலவே, இது க்ராஸ்ஓவர் ரக மாடலாகவே இருக்கிறது.

அட்டகாசமான அம்சங்களுடன் ஆடி எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்: முழு விபரம்!

முன்புற ஆக்சிலில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டார்களை குளிர்விப்பதற்காக முன்புற க்ரில் அமைப்பில் காற்று செலுத்தும் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எஸ்யூவி கார்களுக்கு உரிய மிக கம்பீரமான தோற்றம், பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள், சரிவான கூரை அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

அட்டகாசமான அம்சங்களுடன் ஆடி எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்: முழு விபரம்!

ஆடி க்யூ5 மற்றும் ஆடி க்யூ7 எஸ்யூவி மாடல்களுக்கு இடையில் இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி நிலைநிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும், இது தனித்துமான பல டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது.

அட்டகாசமான அம்சங்களுடன் ஆடி எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்: முழு விபரம்!

ஆடி இ- ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் முன்புற மற்றும் பின்புற ஆக்சில்களில் தலா ஒரு மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 167 பிஎச்பி பவரையும், பின்புற மின் மோட்டார் 187 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும். மொத்தமாக 355 பிஎச்பி பவரையும், 561 என்எம் டார்க்கையும் வாரி வழங்கும் வல்லமை கொண்டவை இந்த மின்மோட்டார்கள்.

அட்டகாசமான அம்சங்களுடன் ஆடி எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்: முழு விபரம்!

ஆடி இ- ட்ரான் காரில் இருக்கும் பூஸ்ட் மோடு பயன்படுத்தும்போது அதிகபட்சமாக 402 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். இந்த கார் சாதாரண மோடில் வைத்து இயக்கும்போது 0 - 100 கிமீ வேகத்தை 6.6 வினாடிகளிலும், பூஸ்ட் மோடில் 5.7 வினாடிகளிலும் எட்டிவிடும். மணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

அட்டகாசமான அம்சங்களுடன் ஆடி எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்: முழு விபரம்!

இந்த காரில் 432 செல்கள் 36 பிரிவுகளாக பொருத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு செல்லும் 60Ah திறன் வாய்ந்தது. மொத்தமாக 95kWh திறன் கொண்ட பேட்டரியை பெற்றிருக்கிறது. காரின் தரை தளத்தில் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி 699 கிலோ எடை கொண்டது. டெஸ்லா மற்றும் நிசான் கார்களில் இருக்கும் செல்கள் 35 முதல் 56Ah திறன் வாய்ந்தது. ஆடி இ-ட்ரான் காரின் பேட்டரி செல் கூடுதல் திறன் வாய்ந்ததாக இருக்கிறது.

அட்டகாசமான அம்சங்களுடன் ஆடி எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்: முழு விபரம்!

இந்த பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்யும் குயிக் சார்ஜர் கொடுக்கப்படும். இந்த சார்ஜர் மூலமாக வெறும் 30 நிமிடங்களில் பேட்டரியை 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். அதேநேரத்தில், பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்போது எவ்வளவு தூரம் பயணிக்கும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

அட்டகாசமான அம்சங்களுடன் ஆடி எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்: முழு விபரம்!

இந்த காரில் ஏராளமான நவீன தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன. உட்புறத்தில் மூன்று மின்னணு திரையுடன் கூடிய சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. சைடு மிரருக்கு பதிலாக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், நேவிகேஷன் வசதி, திறன் விரயமாதலை தவிர்க்கும் தொழில்நுட்பங்களுடன் வருகிறது ஆடி இ- ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்.

அட்டகாசமான அம்சங்களுடன் ஆடி எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்: முழு விபரம்!

அடுத்த ஆண்டு இந்த காருக்கு புதிய அம்சங்களையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன்படி, எல்இடி ஹெட்லைட்டுகள் பொருத்தும் வசதியையும் பெற முடியும். இந்த காரில் 660 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி இருக்கிறது. முன்புற பானட்டில் 60 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி உள்ளது.

அட்டகாசமான அம்சங்களுடன் ஆடி எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்: முழு விபரம்!

இந்த கார் 79,000 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.67 லட்சம்) விலையில் இந்த மாதம் ஐரோப்பாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியிலிருந்து அங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்படும் என்று ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Wednesday, September 19, 2018, 14:13 [IST]
English summary
The Audi e-Tron electric SUV has finally been revealed at the company's 2018 Global Summit in San Francisco. The 2018 Audi e-Tron SUV is said to go on sale in Europe in September this year, with deliveries starting by the year-end.
மேலும்... #ஆடி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+