மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடிக்க குறைந்த விலை கார்களை களமிறக்கும் ஆடி!!

இந்தியாவில் மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடிக்க குறைவான விலை சொகுசு கார்களை அறிமுகம் செய்வதற்கு ஆடி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

By Saravana Rajan

இந்தியாவில் மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடிக்க குறைவான விலை சொகுசு கார்களை அறிமுகம் செய்வதற்கு ஆடி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ரூ.22 லட்சம் விலையில் வரும் புதிய ஆடி சொகுசு கார்!!

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் பழம் தின்று கொட்டை போட்ட மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களை ஓரம் கட்டி வெகு சீக்கிரத்தில் நம்பர்-1 இடத்தை பிடித்தது ஆடி கார் நிறுவனம். பாலிவுட் நட்சத்திரங்களுடன் கைகோர்த்து தனது கார்களை வெகு சீக்கிரமாக பிரபலப்படுத்தி மார்க்கெட்டில் வலுவான இடத்தில் அமர்ந்தது.

ரூ.22 லட்சம் விலையில் வரும் புதிய ஆடி சொகுசு கார்!!

ஆனால், இந்த சந்தோஷம் ஆடி நிறுவனத்திற்கு நீண்ட காலம் நிலைக்கவில்லை. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விஸ்வரூபத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இப்போது ஆடி பின்தங்கிவிட்டது.

ரூ.22 லட்சம் விலையில் வரும் புதிய ஆடி சொகுசு கார்!!

இந்த நிலையில், போட்டியாளர்களான மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களை ஓரம் கட்டி மீண்டும் நம்பர்-1 இடத்தில் அமர்வதற்கு குறைவான விலை சொகுசு கார்களே ஒரே தீர்வாக ஆடி நிறுவனம் கருதுகிறது.

ரூ.22 லட்சம் விலையில் வரும் புதிய ஆடி சொகுசு கார்!!

இதையடுத்து, தனது ஏ3 செடான் கார் மற்றும் க்யூ3 எஸ்யூவி மாடல்களைவிட குறைவான விலை காரை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க போவதாக தெரிவித்துள்ளது. தற்போது கைவசம் உள்ள க்யூ2 க்ராஸ்ஓவர் மாடல் இந்திய மார்க்கெட்டிற்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறது.

ரூ.22 லட்சம் விலையில் வரும் புதிய ஆடி சொகுசு கார்!!

வடிவமைப்பில் மிக ஸ்டைலான இந்த கார் ஆடி கார் பிரியர்களை மட்டுமின்றி, சொகுசு கார் பிரியர்களையும், முதல்முறையாக சொகுசு கார் வாங்க திட்டம் போடுபவர்களையும் எளிதாக வளைத்து போட்டுவிடும். டிசைன் அப்படி!

ரூ.22 லட்சம் விலையில் வரும் புதிய ஆடி சொகுசு கார்!!

இதன் உட்புறத் தோற்றம் மிக பிரிமியமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதுடன், விர்ச்சுவல் காக்பிட் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்களையும் பெற்றிருக்கும். பாதுகாப்பு அம்சங்களிலும் குறைவில்லாத காராக இருக்கும்.

ரூ.22 லட்சம் விலையில் வரும் புதிய ஆடி சொகுசு கார்!!

இந்த கார் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் இரண்டு விதமான ஆற்றலை வெளிப்படுத்தும் திறனில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். பெட்ரோல் மாடலிலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 7 ஸ்பீடு எஸ்-டிரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கும்.

ரூ.22 லட்சம் விலையில் வரும் புதிய ஆடி சொகுசு கார்!!

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, புதிய ஆடி க்யூ2 காரை ரூ.22 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் விற்பனையை கணிசமாக உயர்த்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதோடு, நம்பர்-1 இடத்தை பிடிக்க வழியும் கிடைக்கும் என்று ஆணித்தரமாக நம்புகிறது ஆடி.

ரூ.22 லட்சம் விலையில் வரும் புதிய ஆடி சொகுசு கார்!!

ஆடி க்யூ2 காரை அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டம் போட்டுள்ளது. இதுதவிர, குறைவான விலை ஹேட்ச்பேக், செடான் மற்றும் எஸ்யூவி ரக கார்களையும் களமிறக்கி தனது மார்க்கெட்டை வலுப்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

Source: ET Auto

More from DriveSpark

Article Published On: Wednesday, April 18, 2018, 14:31 [IST]
English summary
German automaker Audi is revisiting its product strategy in India as it has lost its market leadership to Mercedes-Benz and BMW. Now, ETAuto reports that Audi is planning to launch affordable cars in the country. The volume products will be slotted below the A3 and Q3.
மேலும்... #ஆடி #audi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+