ஆனி மாதத்தில் ஆடி காருக்கு ரூ 10 லட்சம் தள்ளுபடி...! அதிரடியில் இறங்கியது ஆடி..!
ஆடி கார்களின் விலையில் ஜூன் மாதம் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி தள்ளுபடியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ 2.74 லட்சத்தில் இருந்து ரூ 9.7 லட்ச ரூபாய் வரை தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது. இத
ஆடி கார்களின் விலையில் ஜூன் மாதம் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி தள்ளுபடியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ 2.74 லட்சத்தில் இருந்து ரூ 9.7 லட்ச ரூபாய் வரை தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது. இதனால் கார் விற்பனை அதிகரிக்கும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

ஆடி கார் என்றாலே சொகுசு கார்களில் பெயர் பெற்ற கார்கள் தான். இந்தியர்களுக்கு ஆடி கார் மீது ஈர்ப்பு மட்டும் அல்ல ஆடி காரை வைத்திருப்பவர்கள் மீதும் கூட ஈர்ப்பு இருக்கிறது. அவ்வாறாக ஆடி காரை வாங்கும் கனவு பல இந்தியர்களுக்கு இருக்கிறது.

பலர் ஆடி காரை வாங்குவதற்காவே பல ஆண்டுகளாக பணம் சேர்த்து வைக்கும் கதை எல்லாம் கூட நாம் கேட்டிருப்போம் அவ்வாறன ஆடிக்கார் பிரியர்களுக்கு வரம் அளிக்கும் விதமாக ஆடிநிறுவனம் ஆடிக்கார்களுக்காக விலையில் குறுகிய காலத்திற்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது.

ஜூன் மாதம் இறுதி வரை அறிவிக்கப்பட்டுள்ள இந்த தள்ளுபடி அறிவிப்பிற்கு " யூ பிளிங்க், யூ லுஸ்" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் யோசித்தால் இழந்து விடுவீர்கள் என்று இந்த தள்ளுபடியை அறிவித்துள்ள இந்நிறுவனம் ரூ 2.74 லட்சத்தில் இருந்து ரூ 9.7 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி ஏ3,ஏ4,ஏ6 மற்றும் க்யூ3 வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது அதிஷ்டம் அடித்துள்ளது. ரூ 33.1 லட்சம் மதிப்புள்ள ஆடி ஏ3 கார் ரூ 5.1 லட்சம் தள்ளுபடியுடன் ரூ 27.99 லட்சத்திற்கு விற்பனைசெய்யப்படவுள்ளது.

அதே போல் ரூ 41.47 லட்சத்திற்கு விற்பனையாகி வரும் ஏ4 ரக கார் ரூ 5.5 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ 35.99 லட்சத்திற்கு விற்பனை செய்ப்படும். அந்நிறுவனத்தின் ஏ6 கார் தான் அதிகபட்ச தள்ளுபடியாக ரூ 9.7 லட்ச ரூபாய் தள்ளுபடி பெறுகிறது.

ஏற்கனவே ரூ 56.69 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட இந்த கார் தள்ளுபடி காலத்தில் ரூ 46.99 லட்சத்தில் விற்பனைக்கு வரும். 2019ம் ஆண்டு ஏ6 காரின் 8வது தலைமுறை கார் விற்பனைக்கு வரவிருப்பதால் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

ஆடி க்யூ3 ரக கார் தான் இருப்பதிலேயே குறைந்த விலை தள்ளுபடியாக ரூ 2.74 லட்சம் தள்ளுபடியை பெருகிறது. ரூ 34.73 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த கார் தள்ளுபடி காலத்திங் ரூ 31.99 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆடி கார்களுக்கு போட்டியாக வெளியாகவுள்ள வால்வோ எக்ஸ் சி40 கார் தற்போது விற்பனைக்கு வரவுள்ள நிலையில் இந்த அதிரடி விலை தள்ளுபடி மக்களின் கவனத்தை ஆடிக்கார் பக்கம் இழுக்கும், வால்வோ கார் வாங்க நினைக்கும் பலர் ஆடிக்கார் பக்கம் தங்கள் விருப்பத்தை மாற்றவிடுவர் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








