புதிய ஆடி க்யூ-5 சொகுசு எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!
புதிய ஆடி க்யூ5 சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
Recommended Video

புதிய ஆடி க்யூ-5 சொகுசு எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த 2016ம் ஆண்டு பாரிஸ் மோட்டார் ஷோவில் இரண்டாம் தலைமுறை ஆடி க்யூ5 எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், நீண்ட தாமதத்திற்கு பின்னர், இந்தியாவில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஆடி க்யூ5 எஸ்யூவி பிரிமியம் ப்ளஸ் மற்றும் டெக்னாலஜி ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். பிரிமியம் ப்ளஸ் மாடல் ரூ.53.25 லட்சம் விலையிலும், டெக்னாலஜி வேரியண்ட் ரூ.57.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

புதிய ஆடி க்யூ5 சொகுசு எஸ்யூவி காரில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரரில் 7 ஸ்பீடு எஸ் ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆடி க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கிறது. இந்த காரில் ஆன்ரோடு, ஆஃப்ரோடு இயக்க நிலைகளுக்கு தக்கவாறு 5 விதமான டிரைவிங் மோடுகளை கொண்டுள்ளது.

இந்த கார் லிட்டருக்கு 17.01 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. ஆடி க்யூ5 எஸ்யூவி 0 -100 கிமீ வேகத்தை 7.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 218 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

இந்த கார் ஆடி ஏ7 சொகுசு கார் உருவாக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்எல்பி எவோ என்ற அதே கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டது.

ஆடி க்யூ5 எஸ்யூவியின் முகப்பில் ஆடி கார்களுக்கு உரிய தனித்துவமான பிரம்மாண்டமான க்ரில் அைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள் இருக்கிறது.

இந்த காரில் ரூஃப் ஸ்பாய்லர், புதிய பின்புற பம்பர் அமைப்பு, ரியர் டிஃபியூசர், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. உட்புறத்தில் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் முன் இருக்கைகள், சீட் மெமரி வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஆடி க்யூ5 சொகுசு எஸ்யூவி காரில் 12.3 அங்குல ஆடி விர்ச்சுவல் காக்பிட் டிஸ்பிளே திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. 8.3 அங்குல எம்எம்ஐ திரை உள்ளது. இதில் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு சாதனங்களுடன் தொடர்புபடுத்தும் வசதி கொண்டது.

ஆடி க்யூ5 சொகுசு எஸ்யூவி காரில் வயர்லெஸ் சார்ஜிங், 10 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடி சவுண்ட் சிஸ்டம், 10 ஜிபி அளவுக்கு மெமரி உள்ளிட்டவை இருக்கின்றன. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் வசதி, அடாப்டிவ் சஸ்பென்ஷன், பனரோமிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல் வசதிகள் உள்ளன.

ஆடி க்யூ5 சொகுசு எஸ்யூவியில் 8 ஏர்பேக்குகள், ஆடி பார்க்கிங் சிஸ்டம் ப்ளஸ் என்ற எளிதான பார்க்கிங் செய்யும் நுட்பம், ஆக்டிவ் லேன் அசிஸ்ட் சிஸ்டம், பிளைண்ட் ஸ்பாட் வார்னிங் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய ஆடி க்யூ5 எஸ்யூவி ரூ.53.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி, லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மற்றும் வால்வோ எக்ஸ்சி60 ஆகிய எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








