புதிய ஆடி ஆர்எஸ்6 அவாந்த் பெர்ஃபார்மென்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்!!
புதிய ஆடி ஆர்எஸ்6 அவாந்த் பெர்ஃபார்மென்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்டேஷன் வேகன் ரகத்தை சேர்ந்த இந்த காரில் சக்திவாய்ந்த 4.0 லிட்டர் பெட்ரோல் பொருத்தப்பட்டு இருக
புதிய ஆடி ஆர்எஸ்6 அவாந்த் பெர்ஃபார்மென்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மிக சக்திவாய்ந்த இந்த புதிய சொகுசு கார் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஆடி கார் நிறுவனத்தின் ஸ்டேஷன் வேகன் ரகத்தை சேர்ந்த இந்த புதிய கார் தனித்துவமான ரகத்தை சேர்ந்தது. இதுவரை இந்தியாவில் இதற்கு நிகரான இதே ரக கார் மாடல் இல்லை. இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த சக்திவாய்ந்த எஞ்சின் அதிகபட்சமாக 597 பிஎச்பி பவரையும், 750 என்எம் டார்க்கையும் அளிக்கும் திறன் வாய்ந்தது. சாதாரண ஆர்எஸ்6 அவாந்த் மாடலைவிட இந்த பெர்ஃபார்மென்ஸ் மாடல் 45 பிஎச்பி கூடுதல் பவரையும், 50 என்எம் கூடுதல் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் எட்டிவிடும். சாதாரண மாடலைவிட மிக குறைவான மணித் துளிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் வல்லமை வாய்ந்ததாக இதன் எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது.

ஆடி ஆர்எஸ்6 அவாந்த் பெர்ஃபார்மென்ஸ் மாடலில் 8 ஸ்பீடு டிரிப்ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆடி நிறுவனத்தின் க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இருக்கிறது. இதன்மூலமாக, இந்த கார் மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும். டைனமிக் பேக்கேஜ் மூலமாக இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 305 கிமீ வேகம் என்ற அளவில் கூட்ட முடியும்.

இந்த காரில் ஸ்பிளிட்டர், பின்புறத்தில் டிஃபியூசர், க்வாட்ரோ பேட்ஜ் பொருத்தப்பட்ட க்ரில் அமைப்பு, 21 அங்குல அலாய் வீல்கள், ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் சைலென்சர், அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன், குறைவான மாசு உமிழ்வு என ஏராளமான அம்சங்களை பெற்றிருக்கிறது.

இந்த காரில் பாதுகாப்பாக ஓட்டுவதற்கான பல்வேறு தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கார் 2 டன் எடை கொண்டதாக வந்துள்ளது. இது ஸ்டேஷன் வேகன் ரகத்தை சேர்ந்தது. இந்த கார் ரூ.1.56 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. சொகுசு கார் மார்க்கெட்டில் இதன் ரகத்தில் எந்த காரும் இந்தியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது மிகவும் தனித்துவமான ரகத்தை சேர்ந்தது.


Click it and Unblock the Notifications








