பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக் விற்பனை நிறுத்தம்!!

Written By:

பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக்கின் விற்பனை திடீரென நிறுத்தப்பட்டு இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக் விற்பனை நிறுத்தம்!!

மிக குறைவான விலை க்ரூஸர் பைக் என்ற பெருமையை பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக் பெற்றிருந்தது. இந்த சூழலில், விற்பனையில் சோபிக்காத மாடல்களை பஜாஜ் நிறுவனம் அதிரடியாக நீக்கி வருகிறது.

பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக் விற்பனை நிறுத்தம்!!

இந்த பட்டியலில் பஜாஜ் பல்சர் எல்எஸ்135 பைக் மற்றும் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 ஆகிய பைக்குகள் இப்போது சிக்கி உள்ளன. இந்த இரு மாடல்களும் இப்போது பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இணையதளத்தில் நீக்கப்பட்டுவிட்டது.

பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக் விற்பனை நிறுத்தம்!!

அதேநேரத்தில், அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக்கை அவென்ஜர் 180 பைக் மாடலாக மேம்படுத்தி இருப்பதாக பஜாஜ் ஆட்டோ சப்பை கட்டு கட்டுகிறது. எனினும், இனி அவென்ஜர் 150 பைக் கிடைக்காது என்பது உறுதியான விஷயம்.

பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக் விற்பனை நிறுத்தம்!!

கடந்த பிப்ரவரி மாதம் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.83,475 எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய மாடலை பஜாஜ் ஆட்டோ விற்பனைக்கு கொண்டு வந்தது. அவென்ஜர் 150 பைக்கை விற்பனையில் இருந்து தூக்குவதற்காகவே இந்த மாடலை அறிமுகம் செய்தது இப்போது தெரிய வந்திருக்கிறது.

பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக் விற்பனை நிறுத்தம்!!

பஜாஜ் அவென்ஜர் 180 பைக்கும், சக்திவாய்ந்த அவென்ஜர் ஸ்ட்ரீட் 220 மாடலும் தோற்றத்தில் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. வித்தியாசங்கள் எதுவும் இல்லை. எஞ்சின் திறன் மட்டுமே மாறுபடுகிறது.

பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக் விற்பனை நிறுத்தம்!!

பஜாஜ் அவென்ஜர் 150 பைக்கிற்கு மாற்றாக வந்திருக்கும் புதிய பஜாஜ் அவென்ஜர் 180 பைக்கில் 178.6சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 15.3 பிஎச்பி பவரையும், 13.7 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 13 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக் விற்பனை நிறுத்தம்!!

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக இடம்பெற வேண்டி இருப்பதும் பஜாஜ் அவென்ஜர் 150 பைக் மீண்டும் மார்க்கெட்டில் வராது என்று ஆணித்தரமாக நம்பலாம். விற்பனையில் சோபிக்காத மாடல்களில் அதிக முதலீடு செய்வதை விரும்பாமல் தொடர்ந்து பல மாடல்களுக்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கல்தா கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #பஜாஜ் #bajaj
English summary
Bajaj Avenger Street 150 has also been taken off the official website and the entry-level Avenger has been discontinued in India.
Story first published: Saturday, April 7, 2018, 10:59 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark