கார்களில் எல்இடி ஹெட்லைட்டுகளின் நன்மைகள்!

வாகனங்களில் எல்இடி ஹெட்லைட்டுகள் அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதற்கு காரணம், மிகுந்த திறன் சேமிப்பு வழங்குவதுதான். சாதாரண ஹாலஜன் பல்புகளை விட எல்இடி விளக்குகள் 85 சதவீதம் அளவுக்கு மின் சி

கார்களின் பரிணாம வளர்ச்சி அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியை தொட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் வாகனங்களின் முகப்பு விளக்குகள் மண்ணெண்ணெய் விளக்குகளுடன் துவங்கி, சாதாரண பல்புகள் என்று கடந்து இன்று எல்இடி, லேசர் ஹெட்லைட்டுகள் என புதிய உச்சத்தை தொட்டுள்ளன.

கார்களில் எல்இடி ஹெட்லைட்டுகளின் நன்மைகள்!

பகட்டான கார்களில் காணப்பட்ட சில விசேஷ ஆக்சஸெரீகள் இப்போது பட்ஜெட் கார்களிலும் கிடைக்கிறது. அந்த வகையில், எல்இடி ஹெட்லைட்டுகள் இப்போது பட்ஜெட் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சர்வசாதாரணமாக கொடுக்கப்படுகிறது. இந்த எல்இடி ஹெட்லைட்டின் நன்மைகளை இப்போது காணலாம்.

கார்களில் எல்இடி ஹெட்லைட்டுகளின் நன்மைகள்!

வாகனங்களில் ஹெட்லைட், பிரேக் லைட் மற்றும் ஃபாக் லேம்புகளில் எல்இடி பல்புகள் அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதற்கு காரணம், மிகுந்த திறன் சேமிப்பை வழங்குவதுதான். சாதாரண ஹாலஜன் பல்புகளை விட எல்இடி விளக்குகள் 85 சதவீதம் அளவுக்கு மின் சிக்கனத்தை தர வல்லது.

கார்களில் எல்இடி ஹெட்லைட்டுகளின் நன்மைகள்!

சாதாரண பல்புகள் ஒளிர்வதற்கு அதிக வெப்பம் தேவைப்படுகிறது. ஆனால், எல்இடி விளக்குகளுக்கு அதிக வெப்பம் தேவையில்லை. சரி, குறைவான மின்சாரத்தில் ஒளிரும் என்பதால், பிரகாசத்தில் குறைபாடு இருக்குமா என்ற சந்தேகம் எழுவது இயல்பு.

கார்களில் எல்இடி ஹெட்லைட்டுகளின் நன்மைகள்!

ஆனால், எல்இடி பல்புகள் மின்சார சிக்கனத்தை தரும் அதேவேளையில், அதிக பிரகாசத்தை வழங்குகின்றன. சாதாரண பல்புகளின் பிரகாசத்தை வழங்கும் திறன் 14 lm/W என்ற அளவில் இருக்கிறது. ஆனால், எல்இடி பல்புகளின் பிரகாசத்தை வெளிப்படுத்தும் திறன் 57 lm/W என்ற அளவில் 4 மடங்கு கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்களில் எல்இடி ஹெட்லைட்டுகளின் நன்மைகள்!

எல்இடி பல்புகளில் இருந்து வெளிப்படும் ஒளியை குறிப்பிட்ட திசை நோக்கி மிக துல்லியமாக பாய்ச்ச முடியும். இதனால், கார் ஓட்டுனர் சாலையை தெளிவாக பார்த்து ஓட்டுவதற்கு துணை நிற்கிறது. இரவு நேர பயணங்கள் பாதுகாப்பாக அமைய முக்கிய காரணியாக இருக்கிறது.

கார்களில் எல்இடி ஹெட்லைட்டுகளின் நன்மைகள்!

மேலும், மிக விரைவாக ஒளிரும் தன்மையை பெற்றிருக்கின்றன. இதனால், தற்போது பிரேக் லைட்டுகளில் அதிக அளவில் கொடுப்பதற்கு கார் நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு மிக விரைவாகவும், அதிக பிரகாசத்துடன் எச்சரிக்கும் தன்மையை பெற்றிருக்கின்றன.

கார்களில் எல்இடி ஹெட்லைட்டுகளின் நன்மைகள்!

கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தப்படும் எல்இடி பல்புகள் கொண்ட ஹெட்லைட் அமைப்பு அதிக விலை கொண்டதாக இருப்பதாக பரவலாக கருத்து உள்ளது. ஆனால், அதிக மின்சிக்கனத்தை தருவதால், சமன் செய்துவிடுகிறது.

கார்களில் எல்இடி ஹெட்லைட்டுகளின் நன்மைகள்!

கார், பைக்குகளில் தரமான எல்இடி பல்புகள் பொருத்துவதே சாலச் சிறந்தது. ஏனெனில், தரமற்ற பல்புகள் சீக்கிரமே பழுதடைந்துவிடுவதுடன், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை தரும் அபாயம் உள்ளது.

கார்களில் எல்இடி ஹெட்லைட்டுகளின் நன்மைகள்!

சாதாரண பல்புகள் ஃபிளமண்ட் எனப்படும் இழை மூலமாக ஒளியை வழங்குகின்றன. இவை அதிர்வுகள் மற்றும் நீடித்த உழைப்பின்போது பழுதடைந்துவிடும். ஆனால், தரமான எல்இடி பல்புகள் குறைந்தது 30,000 மணிநேரம் ஒளிரும் தன்மை கொண்டது. இதில், இழை மூலமாக ஒளிரும் நுட்பம் இல்லை என்பது முக்கிய காரணம்.

கார்களில் எல்இடி ஹெட்லைட்டுகளின் நன்மைகள்!

மேலும், கார், பைக்குகளில் இப்போது லோ பீம் மட்டுமே எல்இடி பல்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில், ஹை பீமில் அதிக கண்கூச்சத்தை தரும் என்பதே காரணம்.

கார்களில் எல்இடி ஹெட்லைட்டுகளின் நன்மைகள்!

எனினும், உயர் வகை சொகுசு கார்களில் ஹை பீம் எல்இடி ஹெட்லைட்டுகள் வழங்கப்படுகின்றன. அந்த கார்களில் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் கூச்சத்தை தராத வகையில், தானியங்கி முறையில் லோ பீம் முறையில் மாறிவிடும்.

கார்களில் எல்இடி ஹெட்லைட்டுகளின் நன்மைகள்!

தற்போது ரூ.15 லட்சம் விலை கொண்ட கார்களில் இந்த எல்இடி ஹெட்லைட்டுகள் விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. எனினும், லோ பீமில் பயன்படுத்தும் விதத்தில் வருகின்றன. விலை அதிகமாக இருந்தாலும், இரவு நேரத்தில் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்பதால், எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்ட வேரியண்ட்டை தேர்வு செய்வது உசிதமாக இருக்கும்.

Most Read Articles
English summary
Benefits And Advantages of Car LED Lights.
Story first published: Monday, December 17, 2018, 16:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X