பெங்களூரு நகர் முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்; நாளை முதல் பயன்பாடு தொடக்கம்..!!

Written By:

இந்தியாவிலேயே பெங்களூருவில் தான் மின்சார காரை பயன்படுத்துபவர்கள் அதிகம் உள்ளனர். இதன்காரணமாக அந்நகரத்தின் முக்கிய இடங்களில் மின்சார கார்கள் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

பெங்களூரு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்..!!

முதற்கட்டமாக பெஸ்காம் கார்ப்பரேஷன் அலுவலகம் அமைந்துள்ள கே.ஆர். சர்க்கிள் பகுதியில் பிப்ரவரி 15ம் தேதி (நாளை) பெங்களூருவின் முதல் மின்சார வாகன சார்ஜிங் நிலையம் நிறுவப்படுகிறது.

பெங்களூரு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்..!!

பெங்களூருவில் மொத்தம் 11 இடங்களில் மின்சார கார் சார்ஜிங் நிலையங்கள் வரவுள்ளன. அதில் முதல் நிலையம் தான் கே.ஆர். சர்க்கிள் பகுதியில் அமைக்கப்படுகிறது.

பெங்களூரு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்..!!

இந்த மின்சார நிலையத்தை தங்கள் பகுதியில் அமைக்க பெஸ்காம் கார்ப்பரேஷன் நிறுவனம் தான் கர்நாடக மின்சார வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

பெங்களூரு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்..!!

மேலும் அந்நிறுவனம் அலுவலக ரீதியாக பயன்படுத்தி வரும் 100 வாகனங்களை முதற்கட்டமாக மின்சார திறனுக்கு மாற்றப்படும் என அறிவித்துள்ளது.

Recommended Video - Watch Now!
Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
பெங்களூரு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்..!!

உபரி சக்தியை கொண்ட நகரமாக பெங்களூரு உள்ளது. அதனால் மின்சார வாகனங்களுக்கான புதிய சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படுவதால் வீடுகள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களுக்கு மின்சார சப்ளை செய்வதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என பெஸ்காம் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்..!!

2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் வகான பயன்பாட்டை மின்சார ஆற்றலுக்கு மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அதற்குகேற்றவாறான பணிகள் தொடங்கி நடைபெற்றுக்கொண்டு வருகிறது.

பெங்களூரு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்..!!

இருப்பினும் மின்சார வாகன உற்பத்தியை விரிவாக்கம் செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் மத்திய அரசு சுணக்கம் காட்டுவதாக பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

பெங்களூரு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்..!!

இந்தியாவில் மின்சார வாகனங்களை விற்பனை செய்யும் ஒரே நிறுவனமாக உள்ளது மஹிந்திரா. விரைவில் இந்த வரிசையில் டாடா, மாருதி சுஸுகி, டொயோட்டா மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்களும் எதிர்காலத்தில் இணையவுள்ளன.

English summary
Read in Tamil: Bengaluru Gets Electric Vehicle Charging Points Across the City. Click for Details...
Story first published: Wednesday, February 14, 2018, 10:46 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark