பெங்களூரில் புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார் தரிசனம்!

2018 மாடலாக வெளியிடப்பட்ட புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஆடம்பர கார் பெங்களூரில் உள்ள வணிக வளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த உயர்வகை காரின் சிறப்புகள் மற்றும் பிரத்யேக படங்களை இந்த செய்தியில் காணலாம்.

பெங்களூரில் புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார் தரிசனம்!

பென்ட்லீ நிறுவனத்தின் பெங்களூர் டீலராக செயல்படும் எக்ஸ்க்ளூசிவ் மோட்டார்ஸ் நிறுவனம் 2018 பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஆடம்பர காரை பெங்களூரில் உள்ள வணிக வளாகத்தில் பொது பார்வைக்கு காட்சிப்படுத்தியது. பெங்களூர், விட்டல் மல்லையா சாலையில் உள்ள யுபி சிட்டி வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த இந்த ஆடம்பர காரை ஏராளமானோர் பார்த்து சிலிர்த்தனர். அத்துடன், தகுதியுடைய வாடிக்கையாளர்களும் நேரில் பார்ப்பதற்கான வாய்ப்பாக இது அமைந்தது.

பெங்களூரில் புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார் தரிசனம்!

ஆடம்பரமான தோற்றம், சொகுசு வசதிகள் அதிக செயல்திறன் கொண்ட இந்த கார் இந்தியாவில் மிக அரிதான உயர் வகை மாடல்களில் ஒன்றாக கூறலாம். பழைய மாடலைவிட 2018 மாடல் கூடுதல் சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. அலுமினிய நுரை என்ற புதிய மூலப்பொருள் கொண்டு தகடுகள் உருவாக்கப்பட்ட இருப்பதால், , நேர்த்தியாகவும், கச்சிதமாகவும் பாகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பெங்களூரில் புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார் தரிசனம்!

பென்ட்லீ முல்லினர் பேக்கேஜில் கொடுக்கப்படும் சிறப்பு ஆக்சஸெரீகள் மூலமகா காரின் அழகு மேலும் கூட்டப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 80க்கும் அதிகமான எல்இடி பல்புகள் கொண்ட ஹெட்லைட், கவர்ச்சியான க்ரில் அமைப்பு, 21 அங்குல விட்டமுடைய 5 ஸ்போக் அலாய் வீல்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. பல இடங்களில் க்ரோம் அலங்கார வேலைப்பாடுகளும் வெளிப்புறத்தில் கவர்ச்சியை கூட்டுகின்றன.

பெங்களூரில் புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார் தரிசனம்!

உட்புறத்திலும் அலங்கார வேலைப்பாடுகளும், சொகுச அம்சங்களும் ஒவ்வொரு பயணத்தையும் மிக இனிமையானதாக மாற்றும் விதத்தில் உள்ளன. டேஷ்போர்டு மூவர்ண கலவையாக தெரிகிறது. பியானோ பிளாக் பேனல்கள், பீஜ் வண்ண லெதர் பயன்பாடு மற்றும் நேர்த்தியான டிசைன் என ஒவ்வொரு பகுதியையும் பார்த்து பார்த்து இழைத்துள்ளனர்.

பெங்களூரில் புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார் தரிசனம்!

காரில் உள்ள லெதர் பயன்படுத்தப்பட்டுள்ள இருக்கை மற்றும் கதவுகளில் தையல்வேலைப்பாடுகளும் குறிப்பிட்டு சொல்லும்படியாக இருக்கின்றன. இன்டீரியரின் ஒவ்வொரு பகுதியும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. இந்த காரில் 4 பேர் பயணிப்பதற்கான 2+2 இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

MOST READ: புத்தாண்டில் நடக்கப்போவது இதுதான்... அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கும் முன்னணி கார் நிறுவனங்கள்...

பெங்களூரில் புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார் தரிசனம்!

புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரில் 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு கீழே இருக்கும் பிரெஸ் என்ற பட்டனை அழுத்தினால் திரை பின்னால் சென்று அனலாக் தெர்மோமீட்டர், காம்பஸ் மற்றும் க்ரோனோமீட்டர் என மூன்று டயல்கள் வெளியில் காட்டுகிறது. இது விசேஷமான விஷயமாக சொல்ல முடியும்.

பெங்களூரில் புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார் தரிசனம்!

இந்த புதிய மாடலில் 2,200 வாட் திறன் கொண்ட 18 ஸ்பீக்கர்கள் கொண்ட பேங்க் அண்ட் ஒலுஃப்சென் நிறுவனத்தின் நயீம் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நயீம் ஆடியோ சிஸ்டம் 2008ம் ஆண்டு முதல் பென்ட்லீ கார்களில் பயன்படுத்தப்படுகிறது.

பெங்களூரில் புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார் தரிசனம்!

புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரில் 6.0 லிட்டர் W12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 626 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க வல்லது. இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் பவர் செலுத்தப்படுகிறது.

பெங்களூரில் புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார் தரிசனம்!

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 333 கிமீ வேகம் வரை எட்டும் வல்லமை கொண்டது. ஸ்போர்ட்ஸ் கார்களை போல அல்லாமல் செயல்திறனுடன் அதிக சொகுசு வசதிகளை இந்த கார் அளிக்கும்.

MOST READ:டாடா ஹாரியர் பற்றிய 5 முக்கிய விஷயங்கள்!

பெங்களூரில் புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார் தரிசனம்!

புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார் ரூ.3.70 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. வழக்கம்போல் இந்த காரும் இந்திய வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

Tamil
மேலும்... #பென்ட்லீ
English summary
Exclusive Motors, the dealers of Bentley in India, has showcased the all-new Continental GT in Bangalore for potential customers and automotive enthusiasts to get closer to the iconic British Grand Tourer. The event was held at Oakwood Premier Prestige, UB City on Vittal Mallya Road.
Story first published: Thursday, December 6, 2018, 14:23 [IST]
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more