சின்ன சேலம் அருகே தடம் மாறி நேருக்கு நேர் வந்த லோடு வேன்... மயிரிழையில் தப்பிய கார்!

கவனக்குறைவாக எதிரில் வந்த லோடு வேன் மீது மோதாமல் கார் ஓட்டுனர் ஒருவர் சமார்த்தியமாக தவிர்த்த வீடியோ வைரலாகி இருக்கிறது.

By Saravana Rajan

நம் நாட்டு சாலைகளில் நடைபெறும் பெரும்பான்மையான விபத்துக்களுக்கு ஓட்டுனர்களின் கவனக்குறைவுதான் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இதற்கு சான்றான ஒரு சம்பவம் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி இருக்கிறது.

நேருக்கு நேர் வந்த லோடு வேன்... சாதுரியமாக செயல்பட்ட கார் ஓட்டுனர்: வீடியோ!

சின்ன சேலம்- வேப்பூர் இடையிலான மாநில நெடுஞ்சாலையில் ஃபியட் புன்ட்டோ கார் ஒன்று சென்றுள்ளது. அப்போது எதிரில் வந்த அசோக் லேலண்ட் தோஸ்ட் லோடு வேன் ஓட்டுனர் கவனக்குறைவு காரணமாக, திடீரென எதிர்புற தடத்தில் பாய்ந்து வருகிறது.

நேருக்கு நேர் வந்த லோடு வேன்... சாதுரியமாக செயல்பட்ட கார் ஓட்டுனர்: வீடியோ!

இதனை நொடிப்பொழுதில் கவனித்துவிட்ட, ஃபியட் புன்ட்டோ ஓட்டுனர் சாதுர்யமாக காரை எதிர்தடத்தில் செலுத்தி விபத்தை தவிர்த்துவிட்டார்.

நேருக்கு நேர் வந்த லோடு வேன்... சாதுரியமாக செயல்பட்ட கார் ஓட்டுனர்: வீடியோ!

ஒருவேளை, லோடு வேனுக்கு பின்னால் வேறு வாகனங்கள் வந்திருந்தால் நிச்சயம் ஃபியட் புன்ட்டோ கார் விபத்தில் சிக்குவதை தவிர்த்திருக்க முடியாது.

Recommended Video

New Maruti Swift Launch: Price; Mileage; Specifications; Features; Changes
நேருக்கு நேர் வந்த லோடு வேன்... சாதுரியமாக செயல்பட்ட கார் ஓட்டுனர்: வீடியோ!

அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் வேறு வாகனங்கள் வராததால், ஃபியட் புன்ட்டோ கார் தப்பியது. ஃபியட் புன்ட்டோ காரில் இருந்த டேஷ்போர்டு கேமரா மூலமாக இந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

நேருக்கு நேர் வந்த லோடு வேன்... சாதுரியமாக செயல்பட்ட கார் ஓட்டுனர்: வீடியோ!

நம் நாட்டு சாலைகளில் இதுபோன்று கவனக்குறைவால் ஏராளமான விபத்துக்கள் நடக்கின்றன. ஃபியட் புன்ட்டோ கார் ஓட்டுனர் சரியான சமயத்தில் முடிவு எடுத்திருக்காவிட்டால், நிச்சயம் இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்தும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டு இருக்கும்.

நேருக்கு நேர் வந்த லோடு வேன்... சாதுரியமாக செயல்பட்ட கார் ஓட்டுனர்: வீடியோ!

சாலை காலியாக உள்ளதே என்று நம் நாட்டு சாலைகளை நம்பி போக முடியாததற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும். நாம் சரியாக போனாலும், எதிரில் வரும் வாகன ஓட்டிகளும் ஜாக்கிரதை உணர்வுடன் வந்தால் மட்டுமே விபத்துக்களிலிருந்து தப்ப முடியும்.

நேருக்கு நேர் வந்த லோடு வேன்... சாதுரியமாக செயல்பட்ட கார் ஓட்டுனர்: வீடியோ!

ஒவ்வொரு நொடியும் மிக கவனமாக கார் ஓட்டினால் மட்டுமே இதுபோன்ற ஓட்டுனர்களிடமிருந்து தப்பிக்க முடியும். மேலும், எதிரில் வரும் வாகனங்களின் நகர்வுகளையும் கணித்து ஓட்டுவதுடன், போதுமான இடைவெளி விட்டு மாறி செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

நேருக்கு நேர் வந்த லோடு வேன்... சாதுரியமாக செயல்பட்ட கார் ஓட்டுனர்: வீடியோ!

பொதுவாக இதுபோன்ற இருவழித் தட சாலைகளில்தான் அதிக விபத்துக்கள் நடக்கின்றன. எனவே, இதுபோன்ற இருவழித்தடங்களில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனும், நிதானத்துடன் கார் ஓட்டுவது அவசியம்.

நேருக்கு நேர் வந்த லோடு வேன்... சாதுரியமாக செயல்பட்ட கார் ஓட்டுனர்: வீடியோ!

சூரிய உதயத்திற்கு முன்பாகவும், அந்திசந்தி வேளைகளிலும் இதுபோன்ற சாலைகளில் மிக மிக கவனமாக செல்லவும். அயர்ந்து விடும் வாகன ஓட்டிகளும் இந்த சாலைகளில் பேராபத்தை விளைவித்து விடுவார்கள்.

கண் இமைக்கும் நேரத்தில் இரு வாகனங்களும் கடந்து செல்லும் பதை பதைக்க வைக்கும் அந்த வீடியோ காட்சிகளை இங்கே பார்க்கலாம்.

Video: Sai Aditya

More from DriveSpark

Article Published On: Thursday, February 22, 2018, 10:05 [IST]
English summary
Beware Of Distracted Drivers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+