பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி ஸ்போர்ட் கார் இந்தியாவில் அறிமுகம்!!

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் ஜிடி ஸ்போர்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.இந்த காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

By Saravana Rajan

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் ஜிடி ஸ்போர்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி ஸ்போர்ட் கார் இந்தியாவில் அறிமுகம்!!

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி ஸ்போர்ட் கார் மாடலின் டிசைன் அதன் டாப் வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படும் எம் ஸ்போர்ட் மாடலை ஒத்திருக்கிறது. ஆனால், இது பேஸ் மாடலாக வந்திருப்பதால், சில சிறப்பம்சங்கள் மற்றும் ஆக்சஸெரீகள் குறைவாக இருப்பதுடன், அது தோற்றத்தில் சிறிய வேறுபாடுகளை காட்டுகிறது.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி ஸ்போர்ட் கார் இந்தியாவில் அறிமுகம்!!

பேஸ் மாடலாக இருந்தாலும் இந்த புதிய மாடலில் பிரிமியம் டிசைன் அம்சங்கள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. அலுமினிய அலங்கார பாகங்கள், புகைப்போக்கியில் பிஎம்டபிள்யூ பிராண்டு பெயர், 18 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை முக்கிய அம்சங்கள்.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி ஸ்போர்ட் கார் இந்தியாவில் அறிமுகம்!!

இந்த காரில் அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் அடாப்டிவ் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெறவில்லை. அதேநேரத்தில், உயர்துல்லிய திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி ஸ்போர்ட் கார் இந்தியாவில் அறிமுகம்!!

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி ஸ்போர்ட் காரில் உயர்தர மர அலங்கார வேலைப்பாடுகளுடன் உட்புறம் கவர்கிறது. லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல் மற்றும் சிவப்பு வண்ண தையல் வேலைப்பாடுகள் என பல சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை கவரும்.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி ஸ்போர்ட் கார் இந்தியாவில் அறிமுகம்!!

இந்த காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ரியர் வீல் டிரைவ் சிஸ்டத்தில் இயங்குகிறது. 0 - 100 கிமீ வேகத்தை 7.7 வினாடிகளில் எட்டிப்பிடிக்கும்.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி ஸ்போர்ட் கார் இந்தியாவில் அறிமுகம்!!

அல்பைன் ஒயிட், பிளாக் சஃபையர் மெட்டாலிக், இம்பீரியல் புளூ பிரில்லியண்ட் எஃபெக்ட் மெட்டாலிக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி ஸ்போர்ட் கார் இந்தியாவில் அறிமுகம்!!

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி ஸ்போர்ட் கார் ரூ.46.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி வரிசையில் குறைவான விலை மாடலாக வந்திருப்பது இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, July 13, 2018, 10:21 [IST]
English summary
BMW 3 Series Gran Turismo Sport launched in India: BMW has launched the base variant of the 3 Series Gran Turismo, the 320d GT Sport in the country. The newly launched BMW 3 Series GT Sport is priced at Rs 46.60 lakh ex-showroom (India).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+