பிஎம்டபிள்யூவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் டீசர் வெளியீடு

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது ஐஎக்ஸ்3 என்ற உலகின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை "ஆட்டோ சீனா 2018" என்று சீனநாட்டில் நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்துகிறது.

By Balasubramanian

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது ஐஎக்ஸ்3 என்ற உலகின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை "ஆட்டோ சீனா 2018" என்று சீனநாட்டில் நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்துகிறது.

உலகின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்துகிறது பிஎம்டபிள்யூ நிறுவனம்

பிஎம்டபிள்யூ நிறுவனம் ஏற்கனவே கடந்த மாதம் தனது புதிய ஐஎக்ஸ்3 என்ற எலெக்ட்ரிக் காரை சீனாவில் நடக்கும் ஆட்டோ சீனா 2018 எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்திருந்தது.

உலகின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்துகிறது பிஎம்டபிள்யூ நிறுவனம்

இது தான் எலெட்ரிக் மாடலில் வெளியாகும் முதல எக்ஸ்யூவி கார். பிஎம்டபிள்யூ நிறுவனம் ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு ஐ3 என்ற எலெக்ட்ரிக் ரக கார்களை தயாரிக்க துவங்கியது, எனினும் இந்த ஐஎக்ஸ் 3 என்ற எலெக்ட்ரிக் காரே முதல் அறிமுகமாக வெளியாகிறது.

உலகின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்துகிறது பிஎம்டபிள்யூ நிறுவனம்

இந்த காருக்கான டீசரை பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கே உண்டான கிரில் டிசைன் வேறு ஒரு டிசைனாக மாறுகிறது. அதை தவிர காரின் லுக், அம்சங்கள் குறித்த தகவலும் டீசரில் இடம் பெறவில்லை.

இந்த டீசரை நீங்கள் கீழே காணலாம்

இந்த காரின் தகவல் குறித்த எதுவும் வெளியாகத நிலையில் அதன் பெயரை பார்க்கும் போது இது பிஎம்டபிள்யூவின் எக்ஸ்3 ரக காரின் எலக்ட்ரிக் மாடலாகவே இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்துகிறது பிஎம்டபிள்யூ நிறுவனம்

ஏற்கனவே டீசரில் உள்ளபடி பிஎம்டபிள்யூவின்கான கிரில்லே இந்த எக்ஸ் 3 காரில் உள்ளது. இந்த கிரில்லை வேறு ஒரு கிரில்லாக மாற்றுவதாக டீசல் அமைந்துள்ளது மூலம் எக்ஸ் 3 காரின் எலெக்ட்ரிக் மாடலே இந்த ஐஎக்ஸ்3 கார் என நாம் எதிர்பார்க்கலாம்.

உலகின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்துகிறது பிஎம்டபிள்யூ நிறுவனம்

பிஎம்டபிள்யூ நிறுவனம் வரும் 2025ம் ஆண்டிற்குள் 12 எலெக்ட்ரிக் கார் மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதில் செடன் மற்றும் ஆடம்பர சொகுசு கார்களும் உள்ளடக்கம்.

உலகின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்துகிறது பிஎம்டபிள்யூ நிறுவனம்

மேலும் பிஎம்டபிள்யூ நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களுக்கான பாட்டரிகளை தயாரிக்கவும், அதை மற்ற எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர்களுக்கு வழங்கவும் முடிவு செய்துள்ளது.

உலகின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்துகிறது பிஎம்டபிள்யூ நிறுவனம்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த ஐஎக்ஸ்3 கார் சீனா ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. வரும் ஏப் 25ம் தேதி ஆட்டோ எக்ஸ்போ துவங்கவுள்ள நிலையில் இந்த காரின் முழு விபரங்களும், புகைப்படங்களும் நமக்கு கிடைக்கும் அதுவரை ஆவலுடன் காத்திருங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, April 23, 2018, 10:10 [IST]
English summary
BMW releases a teaser for the iX3, its first all-electric SUV. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+