புதிய பிஎம்டபிள்யூ காரை வீட்டிற்கு ஓட்டி வர விரும்புகிறீர்களா? உங்களுக்கான சரியான தருணம் இதுதான்...
புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வீட்டிற்கு ஓட்டி வர விரும்புகிறீர்களா? அப்போது உங்களுக்கான சரியான தருணம் இதுவாகதான் இருக்கும்.
புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வீட்டிற்கு ஓட்டி வர விரும்புகிறீர்களா? அப்போது உங்களுக்கான சரியான தருணம் இதுவாகதான் இருக்கும்.

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம், லக்ஸரி கார் மார்க்கெட்டில் கொடி கட்டி பறந்து வருகிறது. இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களுடன் சேர்த்து ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.

வாழ்வில் ஒரு பிஎம்டபிள்யூ காரையாவது வாங்கி விட வேண்டும் என்பதே அவர்களின் ஆசை. ஆனால் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்கள் அனைத்தும் மிகவும் விலை உயர்ந்தவை என்பதால், அவற்றை நிறைவேற்றுவது என்பது சற்று சிரமமான விஷயம்தான்.

நிலைமை இப்படி இருக்கையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்களினுடைய விலை இன்னும் அதிகரிக்க போகிறது. அதாவது இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்களினுடைய விலையை தற்போது உள்ளதை காட்டிலும் 4 சதவீதம் வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திடீர் விலை உயர்வானது 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனை செய்து வரும் அனைத்து கார்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும்.

ஆனால் விலையை உயர்த்துவதற்கு என்ன காரணம்? என்ற தகவல்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போது வரை வெளியிடவில்லை. பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போது 3 சீரிஸ், 5 சீரிஸ், 7 சீரிஸ் மற்றும் எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்5 உள்ளிட்ட எஸ்யூவி கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்து வருகிறது.
Recommended Video


அதே நேரத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனமானது, எக்ஸ்6, இஸட்4, எம்3 செடான், எம்4 கூப், எம்5 செடான், எக்ஸ்5 எம் எஸ்யூவி மற்றும் எக்ஸ்6 எம், ஐ8 உள்ளிட்ட கார்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய லக்ஸரி கார் நிறுவனங்களின் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனம், நாளுக்கு நாள் வளர்ச்சியை சந்தித்து வருகிறது. நடப்பு ஆண்டின் முதல் 9 மாதங்களில் (ஜனவரி-செப்டம்பர்), மொத்தம் 7,915 கார்களை பிஎம்டபிள்யூ (மினி உள்பட) விற்பனை செய்துள்ளது.

இது கடந்த 2017ம் ஆண்டின் முதல் 9 மாதங்களுடன் ஒப்பிடுகையில் 11 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய 3 சீரிஸ் கார், 2019ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.

எனவே எதிர்வரும் 2019ம் ஆண்டிலும், விற்பனை அடிப்படையில் நல்ல வளர்ச்சி கிடைக்கும் என பிஎம்டபிள்யூ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காரின் அட்டகாசமான புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications