பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 எஸ்யூவியின் பிஎஸ்-4 பெட்ரோல் எஞ்சின் மாடல் அறிமுகம்!
புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவியில் பிஎஸ்-4 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ எக்ஸ்1 sDrive20i என்ற பெயரில் இந்த புதிய பெட்
புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவியின் புதிய பெட்ரோல் எஞ்சின் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 sDrive20i என்ற பெயரில் இந்த புதிய பெட்ரோல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பெட்ரோல் எஞ்சின் பாரத் ஸ்டேஜ்-4 மாசு உமிழ்வு தர நிர்ணயத்திற்கு இணையான அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டீசல் மாடலுக்கும், பெட்ரோல் மாடலுக்கும் தோற்றத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. எஞ்சின் மட்டுமே மாற்றமாக இருக்கிறது. இந்த மாடல் எக்ஸ்லைன் என்ற பிரத்யேக வரிசையில் விற்பனை செய்யப்பட இருப்பதுடன், சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 189 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இந்த எஞ்சினுடன் 7 ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் ஸ்போர்ட் டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 7.6 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 224 கிமீ வேகம் வரை செல்லும்.

முகப்பில் அலுமினியம் பிரேமுடன் கூடிய சிறுநீரக வடிவ க்ரில் அமைப்பு பிஎம்டபிள்யூ கார் என்பதன் தனித்துவதை கொாடுக்கிறது. 18 அங்குல அலாய் வீல்கள், பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட் சிஸ்டமும் ஆகியவை இதன் முக்கிய சிறப்பம்சங்களாக கூறலாம்.
இந்த காரில் லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், வேகத்திற்கு தக்கவாறு இயங்கும் ஸ்டீயரிங் சிஸ்டம், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பார்க் டிஸ்டன்ஸ் கன்ட்ரோல் வசதி உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.

இந்த காரின் இன்டீரியர் இரண்டு விதமான இரட்டை வண்ணக் கலவை ஆப்ஷன்களில் தேர்வு செய்ய முடியும். சென்சாடெக் ஆயிஸ்டர் மற்றும் கருப்பு வண்ணக் கலவை அல்லது சென்சாடெக் கருப்பு மற்றும் கருப்பு வண்ணக் கலவைகளில் கிடைக்கும்.

இந்த காரில் 6 ஏர்பேக்குகள்,பிரேக் அசிஸ்ட், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், கார்னரிங் கன்ட்ரோல், சைடு இம்பேக்ட் புரொடெக்ஷன், டைனமிக் டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவியானது மெட்டாலிக் மற்றும் மெட்டாலிக் அல்லாத பல் வண்ண தேர்வுகளில் கிடைக்கிறது. பிளாக் சஃபையர், மெடிட்டரானியன் புளூ மற்றும் ஸ்பார்க்ளிங் பிரவுன் ஆகியவை முக்கிய வண்ணங்களாக இருக்கின்றன.

பிஎஸ்-4 பெட்ரோல் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவிக்கு ரூ.37.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். ஆடி க்யூ3, வால்வோ எக்ஸ்சி40 ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications