சத்தமேயில்லாமல் புதிய எக்ஸ் 3 எக்ஸ் டிரைவ் 20டி ஸ்போர்ட் மாடலை வெளியிட்ட பிஎம்டபுள்யூ..!!
சத்தமேயில்லாமல் புதிய எக்ஸ் 3 எக்ஸ் டிரைவ் 20டி ஸ்போர்ட் காரை ரூ. 54 லட்சம் விலையில் வெளியிட்ட பிஎம்டபுள்யூ..!!
Recommended Video

பிஎம்டபுள்யூ எக்ஸ்3 எக்ஸ்.டிரைவ் ஸ்போர்ட் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரின் எக்ஸ் 3 டாப் வேரியன்ட் மாடலுக்கு ரூ. 54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் எக்ஸ்-லைன் வேரியன்டுக்கு மாற்றாக புதிய மாடலாக தற்போது வெளிவந்துள்ள எக்ஸ் 3 லைன்-அப் அமைந்துள்ளது. 2.0 லிட்டர் டீசல் எஞ்சினில் மட்டும் கிடைக்கும் இந்த காரின் 2.0 லிட்டர் 28 ஐ எக்ஸ்லைன் பெட்ரோல் எஞ்சின் தயாரிப்பு நிறுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டாப்-ஸ்பெக் ட்ரிம் காரில் உள்கட்டமைப்பு மற்றும் வெளிக்கட்டமைப்பு ஆகியவற்றில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இரண்டு பகுதிகளிலுமே எம்-பேட்ஜிங்
இருக்கும், எம்-மிற்கான காற்றியக்கிவியல் தொழில்நுட்பம், எம்-ஸ்போர்ட் உயர ரக லெதர் வேலைபாடுகள் ஆகியவை உள்ளன.
Trending On Drivespark Tamil:

8.8 இஞ்ச் ஐ-டிரைவ் தொடுதிரை கொண்ட இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம், 205 வாட் திறன் பெற்ற 9 ஸ்பீக்கர் , பொருட்களை வைக்கும் பெட்டி, 12 வோல்ட் பவர் சாகெட்ஸ்,

இரண்டு கப் ஹோல்டர்களுடன் கூடிய ஆர்ம்ரெஸ்ட், இருக்கைக்கு பிறகான தட்டுகள் ஆகியவை பிஎம்டபுள்யூ எக்ஸ்3 டிரைவ் 20டி காரில் இடம்பெற்றுள்ளன.

எம் ஸ்போர்ட் டிரிம் கார் மெல்போர்ன் ரெட், ஸ்பேஸ் கிரே, கார்பன் பிளாக் மற்றும் ஆல்பைன் வைட் நிறங்களில் வெளிவருகின்றன.

பிஎம்டபுள்யூ எக்ஸ்3 கார் ரூ. 49.10 லட்சம் விலையில் இருந்து தொடங்குகிறது . அதனுடைய டாப்-ஸ்பெக் எம் ஸ்போர்ட் வேரியன்ட் ரூ. 54 லட்சம் விலை பெறுகிறது.

எக்ஸ் 3 காரின் இரண்டாவது தலைமுறைக்கான மாடலை ஓரம் கட்டவதற்காக தான், எக்ஸ் 3 மாடலின் டாப்-ஸ்பெக் வேரியன்டை பிஎம்டபுள்யூ தற்போது வெளியிட்டுள்ளது. பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் தாயாராகி வரும் இந்த காரின் மூன்றாவது தலைமுறைக்கான புதிய மாடல் மே 2018ம் ஆண்டில் வெளியிடப்படுகிறது.
Trending On Drivespark Tamil:

அதற்கு முன்னதாகவே புதிய ரக எக்ஸ் 3 காரை 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பிஎம்டபுள்யூ நிறுவனம் களமிறக்கும் என இந்திய ஆட்டோமொபைல் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Trending DriveSpark YouTube Videos


Click it and Unblock the Notifications








