விபத்தில் சிக்கிய நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட பிஎம்டபிள்யூ டீலர்.. சமூக வலை தளங்களில் குமுறல்..

விபத்தில் சிக்கிய பாலிவுட் நடிகையிடம், பிஎம்டபிள்யூ டீலர் மோசமாக நடந்து கொண்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் அந்த நடிகையே இந்த புகாரை தெரிவித்துள்ளார்.

By Arun

விபத்தில் சிக்கிய பாலிவுட் நடிகையிடம், பிஎம்டபிள்யூ டீலர் மோசமாக நடந்து கொண்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் அந்த நடிகையே இந்த புகாரை தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விபத்தில் சிக்கிய நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட பிஎம்டபிள்யூ டீலர்.. டிவிட்டரில் குமுறி தீர்த்தார்

பாலிவுட் திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் பலர், கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கி வருகின்றனர். ஆனால் அதற்கு நேர் மாறாக, பிஎம்டபிள்யூ 630ஐ ஜிடி (BMW 630i GT) காரை, நடிகை ஷமிதா ஷெட்டி சமீபத்தில், மிகுந்த ஆர்வத்துடன் வாங்கினார்.

விபத்தில் சிக்கிய நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட பிஎம்டபிள்யூ டீலர்.. டிவிட்டரில் குமுறி தீர்த்தார்

இவர் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. ஷமிதா ஷெட்டி காரை வாங்கியது முதல் அனைத்தும் நன்றாகதான் சென்று கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் எதிர்பாராதவிதமாக நடைபெற்ற சிறிய விபத்தில் ஷமிதா ஷெட்டி சிக்கி கொண்டார்.

விபத்தில் சிக்கிய நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட பிஎம்டபிள்யூ டீலர்.. டிவிட்டரில் குமுறி தீர்த்தார்

இதனால் தனது பிஎம்டபிள்யூ 630ஐ ஜிடி காரை ரிப்பேர் செய்வது என ஷமிதா ஷெட்டி முடிவெடுத்தார். இதன்பின் மும்பையில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற ஒரு சர்வீஸ் சென்டரில் தனது காரை நடிகை ஷமிதா ஷெட்டி விட்டார்.

விபத்தில் சிக்கிய நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட பிஎம்டபிள்யூ டீலர்.. டிவிட்டரில் குமுறி தீர்த்தார்

ஆனால் அவர்களின் சேவை தரம் மிகவும் மோசமாக இருந்ததுடன், அவர்களின் அணுகுமுறை இரக்கமற்ற முறையில் இருந்தது என ஷமிதா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார். தொழில் நெறிமுறைகளை அவர்கள் கடைபிடிக்கவில்லை என்பதே ஷமிதா ஷெட்டியின் புகார்.

விபத்தில் சிக்கிய நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட பிஎம்டபிள்யூ டீலர்.. டிவிட்டரில் குமுறி தீர்த்தார்

ஷமிதா ஷெட்டியின் உரிய ஒப்புதலை பெறாமலேயே, அவர்கள் ரிப்பேர் பணிகளை தொடங்கியுள்ளனர். அதாவது பணிகளை தொடங்கும் முன்பாக, இ மெயில் மூலம் அவர்கள் ஷமிதா ஷெட்டியின் ஒப்புதலை உறுதிபடுத்தவில்லை. அத்துடன் தவறான எஸ்டிமேட்டை, ஷமிதா ஷெட்டிக்கு வழங்கியுள்ளனர்.

விபத்தில் சிக்கிய நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட பிஎம்டபிள்யூ டீலர்.. டிவிட்டரில் குமுறி தீர்த்தார்

பிஎம்டபிள்யூ போன்ற ஒரு நல்ல நிறுவனத்திற்கு, தொழில் நெறிமுறைகளை பின்பற்றாமல் வேலை செய்யும் இவர்கள் யார்? என அந்த டீலர் குறித்து ஷமிதா ஷெட்டி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த புகார் குறித்து பிஎம்டபிள்யூ மற்றும் சம்பந்தப்பட்ட டீலர் ஆகியோர் இதுவரை எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.

விபத்தில் சிக்கிய நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட பிஎம்டபிள்யூ டீலர்.. டிவிட்டரில் குமுறி தீர்த்தார்

இன்ஸ்டாகிராம் மட்டுமல்லாது தனது டிவிட்டர் பக்கத்திலும் ஷமிதா ஷெட்டி இந்த புகாரை முன் வைத்தார். இந்த புகார்களுக்கு பின், அவரது கார் நல்ல முறையில் சர்வீஸ் செய்து தரப்பட்டதா? என்கிற தகவலை ஷமிதா ஷெட்டி அப்டேட் செய்யவில்லை.

விபத்தில் சிக்கிய நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட பிஎம்டபிள்யூ டீலர்.. டிவிட்டரில் குமுறி தீர்த்தார்

பாலிவுட் திரையுலகம் முழுவதும் மெர்சிடிஸ் பென்ஸ் பக்கம் சாய்ந்து கொண்டிருக்கும் சூழலில், கடந்த ஜூன் மாத கடைசியில்தான் இந்த காரை ஷமிதா ஷெட்டி வாங்கினார். ஆனால் ஒரு சில நாட்களுக்கு உள்ளாக சர்வீஸில் பிரச்னை எழுந்துள்ளது.

விபத்தில் சிக்கிய நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட பிஎம்டபிள்யூ டீலர்.. டிவிட்டரில் குமுறி தீர்த்தார்

பிஎம்டபிள்யூ 630ஐ ஜிடி காரில், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு, 4 சிலிண்டர் பெட்ரோல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 258 பிஎச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது. பெட்ரோல் இன்ஜின் காரைதான் நடிகை ஷமிதா ஷெட்டி வைத்துள்ளார்.

விபத்தில் சிக்கிய நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட பிஎம்டபிள்யூ டீலர்.. டிவிட்டரில் குமுறி தீர்த்தார்

பிஎம்டபிள்யூ 630ஐ ஜிடி காரில், ஹெட் அப் டிஸ்பிளே (HUD), மூட் லைட்டிங், 10 சேனல் ஆம்ப்ளிஃபயருடன் கூடிய வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டம், க்வாட்-ஜோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கிய நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட பிஎம்டபிள்யூ டீலர்.. டிவிட்டரில் குமுறி தீர்த்தார்

இந்த காரின் டீசல் வேரியண்ட்டை கடந்த சில நாட்களுக்கு முன்தான் பிஎம்டபிள்யூ லான்ச் செய்தது. இந்த காரின் டீசல் இன்ஜின், 265 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. அனைத்து இன்ஜின்களும் 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood Actress Complains Against a BMW Dealer. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X