அக்.10ல் லான்ச் ஆகிறது புத்தம் புதிய டாடா டிகோர்.. பிராண்ட் அம்பாஸிடராக ஹிருத்திக் ரோஷன் நியமனம்

புத்தம் புதிய டாடா டிகோர் கார் வரும் 10ம் தேதி லான்ச் செய்யப்படவுள்ளது. இந்த காருக்கான பிராண்ட் அம்பாஸிடராக பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

புத்தம் புதிய டாடா டிகோர் கார் வரும் 10ம் தேதி லான்ச் செய்யப்படவுள்ளது. இந்த காருக்கான பிராண்ட் அம்பாஸிடராக பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அக்.10ல் லான்ச் ஆகிறது புத்தம் புதிய டாடா டிகோர்.. பிராண்ட் அம்பாஸிடராக ஹிருத்திக் ரோஷன் நியமனம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது அப்டேட் செய்யப்பட்ட புதிய டிகோர் காரை வரும் அக்டோபர் 10ம் தேதி இந்திய மார்க்கெட்டில் லான்ச் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பண்டிகை காலத்தில் டாடா மோட்டார்ஸ் லான்ச் செய்ய உள்ள மூன்றாவது கார் இதுவாகும்.

அக்.10ல் லான்ச் ஆகிறது புத்தம் புதிய டாடா டிகோர்.. பிராண்ட் அம்பாஸிடராக ஹிருத்திக் ரோஷன் நியமனம்

ஏனெனில் இதற்கு முன்னதாக நெக்ஸான் க்ராஜ், டியாகோ என்ஆர்ஜி க்ராஸ்ஓவர் ஹேட்ச்பேக் என 2 கார்களை டாடா அறிமுகம் செய்திருந்தது. இந்த வரிசையில் மூன்றாவதாக, அப்டேட் செய்யப்பட்ட காம்பேக்ட் செடான் வகை காரான புதிய டிகோர் காரை வரும் 10ம் தேதி டாடா லான்ச் செய்கிறது.

அக்.10ல் லான்ச் ஆகிறது புத்தம் புதிய டாடா டிகோர்.. பிராண்ட் அம்பாஸிடராக ஹிருத்திக் ரோஷன் நியமனம்

தற்போது இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் டிகோர் காரை காட்டிலும், புதிதாக லான்ச் செய்யப்பட உள்ள டிகோர் காரில் பல்வேறு பிரீமியம் வசதிகளை டாடா மோட்டார்ஸ் வழங்கும் என வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அக்.10ல் லான்ச் ஆகிறது புத்தம் புதிய டாடா டிகோர்.. பிராண்ட் அம்பாஸிடராக ஹிருத்திக் ரோஷன் நியமனம்

குறிப்பாக வெளிப்புறத்தில் புதிய அலாய் வீல்கள், உட்புறத்தில் பெரிய டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஆல் நியூ டாடா டிகோர் காரில் வழங்கப்படவுள்ளது. ஆனால் இன்ஜினில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன.

அக்.10ல் லான்ச் ஆகிறது புத்தம் புதிய டாடா டிகோர்.. பிராண்ட் அம்பாஸிடராக ஹிருத்திக் ரோஷன் நியமனம்

அதாவது அதே பழைய 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களில் இருந்துதான் ஆல் நியூ டாடா டிகோர் கார் சக்தியை பெறவுள்ளது. இதில், பெட்ரோல் இன்ஜினானது அதிகபட்சமாக 83 பிஎச்பி பவர் மற்றும் 114 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த வல்லது.

அக்.10ல் லான்ச் ஆகிறது புத்தம் புதிய டாடா டிகோர்.. பிராண்ட் அம்பாஸிடராக ஹிருத்திக் ரோஷன் நியமனம்

அதே நேரத்தில் டீசல் இன்ஜினானது அதிகபட்சமாக 69 பிஎச்பி பவர் மற்றும் 140 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. இந்த சூழலில் ஆல் நியூ டாடா டிகோர் காருக்கான பிராண்ட் அம்பாஸிடராக பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஹிருத்திக் ரோஷன் கூறுகையில், ''டாடா மோட்டார்ஸ் குடும்பத்துடன் தொடர்புபடுத்தப்பட்டதன் மூலமாக நான் கவுரவிக்கப்பட்டுள்ளேன். இந்த பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டிருக்கிறேன். புதிய டாடா டிகோர் மாடர்ன் ஸ்டைலிஷ் செடான் வகை கார் ஆகும்.

அக்.10ல் லான்ச் ஆகிறது புத்தம் புதிய டாடா டிகோர்.. பிராண்ட் அம்பாஸிடராக ஹிருத்திக் ரோஷன் நியமனம்

இதில், பல்வேறு அட்டகாசமான வசதிகள் இடம்பெற்றுள்ளன. விரைவில் லான்ச் ஆகவுள்ள டாடா டிகோர் காருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார். புதிய டாடா டிகோர் காரானது, மாருதி சுஸுகி டிசையர், ஹூண்டாய் எக்ஸ்சென்ட் மற்றும் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் உள்ளிட்ட கார்களுக்கு கடும் சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா டியாகோ என்ஆர்ஜி காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

Article Published On: Sunday, October 7, 2018, 9:30 [IST]
English summary
Bollywood Star Hrithik Roshan Is The Brand Ambassador For The Upcoming New Tata Tigor. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+