டீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிட மாட்டோம்: மஹேந்திரா

இந்தியாவில் 2020ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரவிருக்கும் பிஎஸ் 6 ரக மாசு கட்டுப்பாட்டு விதிகளால் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் டீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிடப்போவதாக அறிவித்துள்ளன. ஆனால் மஹேந்திரா நிறுவன

By Balasubramanian

இந்தியாவில் 2020ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரவிருக்கும் பிஎஸ் 6 ரக மாசு கட்டுப்பாட்டு விதிகளால் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் டீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிடப்போவதாக அறிவித்துள்ளன. ஆனால் மஹேந்திரா நிறுவனம் அந்த காட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி டீசல் இன்ஜினை அந்நிறுவனம் வடிவமைக்கும் என்றும், டீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிடும் எண்ணம் இல்லை என்றும் அறிவித்துள்ளது.

டீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிட மாட்டோம்: மஹேந்திரா

இந்தியாவில் உள்ள வாகனங்களால் ஏற்படும் மாசுகளை கட்டுப்படுத்த இந்திய அரசு கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சில விதிமுறைகளை வழங்கியுள்ளது. ஒரு வாகனம் இந்த அளவு வரை தான் புகையை வெளியிட வேண்டும். அந்த புகையில் உள்ள கெமிக்கல்கள் இந்த இந்த அளவில் தான் இருக்க வேண்டும். என சில விதிகள் உள்ளன.

டீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிட மாட்டோம்: மஹேந்திரா

இந்த விதிகள் அவ்வப்போது மாற்றம் அடைந்து கொண்டே வரும். அந்த வகையான மாற்றங்களை பிஎஸ் என நாம் குறிப்பிடுவோம். இப்படி ஒவ்வொரு மாற்றமாக ஏற்பட்டு தற்போது வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையின் அளவை நாம் இன்று நாம் பெரும் அளவு கட்டுப்படுத்தி விட்டோம்.

டீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிட மாட்டோம்: மஹேந்திரா

வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு கட்டுப்பட்டதே தவிர பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் மாசுபடும் அளவு குறையவில்லை. அதை கண்காணித்த அரசு அடுத்த மாற்றத்தின் போது அதிகமான கட்டுப்பாடுகளை எடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது.

டீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிட மாட்டோம்: மஹேந்திரா

தற்போது பிஎஸ் 4 ரக கட்டுப்பாட்டின் படி வாகனங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக பிஎஸ்5 ரக கட்டுபாட்டிற்கு நாம் நகர வேண்டும். ஆனால் பெருகி வரும் மாசு காரணமாகவும், அதை கட்டுப்படுத்த போதிய காலம் இல்லை என்பதாலும், அரசு பிஎஸ் 5 கட்டுப்பாட்டு தரத்தை கை விட்டு விட்டு நேரடியாக பிஎஸ் 6 ரக கட்டுப்பாட்டை வரும் 2020ம் ஆண்டு நடைமுறை படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

டீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிட மாட்டோம்: மஹேந்திரா

பிஎஸ்6 ரக கட்டுப்பாடுகள் குறித்து அவ்வப்போது கார் தயாரிப்பு நிறுவனங்களிடையே அரசு கூட்டம் ஒன்றை நடத்தும், பிஎஸ் 6ரக காட்டுப்பாடுகளில் வரவுள்ள அம்சங்கள் குறித்து அதை நடைமுறைபடுத்த கார் தயாரிப்பு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்தும் அதில் விவாதிக்கப்படும்.

டீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிட மாட்டோம்: மஹேந்திரா

இந்தியாவில் கொண்டு வரப்படும் பிஎஸ் 6 ரக கட்டுப்பாடு என்பது மாசு மிக அதிக அளவில் கட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது. அதில் உள்ள விதிகளை பின்பற்றி டீசல்கள் கார்களை தயாரிப்பது கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெறும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் டீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

டீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிட மாட்டோம்: மஹேந்திரா

மேலும் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வகையான இன்ஜிகள் குறைந்த அளவு மாசுவையோ சில இன்ஜின்கள் மாசு ஏற்படுத்தாத நிலையிலோ தயாரிக்க முடிகிறது.

டீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிட மாட்டோம்: மஹேந்திரா

சமீப காலமாக பெரிய பிரண்ட் கார் தயாரிப்பு நிறுவனங்கள் கூட எலெக்ட்ரிக் கார்களையும், ஹைபிரிட் இன்ஜின் கார்களையும் தயாரிக்க தயாராகிவிட்டனர். நிஸான், டோயாட்டோ, வால்வோ ஆகிய நிறுவனங்கள் டீசல் இன்ஜின் தயாரிப்புகளை கைவிட தயாராகிவிட்டனர்.

டீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிட மாட்டோம்: மஹேந்திரா

இந்நிலையில் சமீபத்தில் பிஎம் 6 சம்மந்தமாக நடந்த கூட்டத்தில் இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனம் டீசல் காரை தொடரப்போவதாக அறிவித்துள்ளது. பிஎஸ் 6 கட்டுப்பாட்டு விதிகளின் படி தங்களால் டீசல் இன்ஜினை தயாரிக்க முடியும் எனவும் அறிவித்துள்ளது.

டீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிட மாட்டோம்: மஹேந்திரா

இது குறித்து அந்நிறுவன அதிகாரி வதேரா கூறுகையில் பிஎஸ் 6ரக கட்டுப்பாட்டின் படி தயாரிக்கப்படும் டீசல்கள் தற்போது உள்ள மிக சுத்தமாக இருக்கும். வாகனத்தில் இருந்து வெளியாகும் புகையின் அளவு டீசலின் தரத்தை பொருத்தே அமைவதால், பிஎஸ் 6 கட்டுப்பாட்டின் படி இன்ஜின் இருந்து வெளியாகும் புகையையும் எங்களால் கட்டுப்படுத்த முடியும். இந்த ரக டீசல் பெட்ரோலை காட்டிலும் சுத்தமாக இருக்கும். அதனால் நாங்கள் டீசல் இன்ஜினை தொடர்வதாக உள்ளோம்" என கூறியுள்ளார்.

டீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிட மாட்டோம்: மஹேந்திரா

மஹேந்திரா நிறுவனத்தை பொருத்தவரை டீசல் இன்ஜின்கள் தான் நல்ல மைலேஜை தரக்கூடியது என்றும் பெட்ரோல் இன்ஜினை விட 40 மடங்கு அதிக பவரை இந்த இன்ஜின்கள் வெளிப்படுத்தும் என்றதாலும் அதை அவர்கள் தொடர விரும்புகின்றனர்.

டீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிட மாட்டோம்: மஹேந்திரா

மேலும் கார் வாங்கும் இந்தியர் பெரும்பாலோனோர் கார் வாங்கும் போது எந்த காரை வாங்க வேண்டும் என்று முடிவு செய்வதில் மைலேஜை பெரிய விஷயமாக கருதுவதால் டீசல் கார் தான் பெரும்பாலான இந்தியர்களுக்கு ஏற்ற கார் என மஹேந்திர நிறுவனம் முடிவு செய்து டீசல் இன்ஜினை கைவிடப்போவதில்லை என அறிவித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
BS6 diesel to be cleaner than petrol, says Mahindra’s president.Read in Tamil.
Story first published: Tuesday, May 22, 2018, 13:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X