கார் விற்பனை அபார வளர்ச்சி; முதல் காலாண்டு மற்றும் ஜூன் மாத ரிப்போர்ட்

உச்சத்தில் நிற்கும் பெட்ரோல் விலை, அமெரிக்காவுடனான ஏற்றுமதி இறக்குமதி வரி தொடர்பான பிரச்னை போன்ற காரணங்களால் இந்தியாவில் வாகன விற்பனை பாதிக்கப்பட்டிருக்கும் என யூகித்திருக்ககூடும்.

By Balasubramanian

உச்சத்தில் நிற்கும் பெட்ரோல் விலை, அமெரிக்காவுடனான ஏற்றுமதி இறக்குமதி வரி தொடர்பான பிரச்னை போன்ற காரணங்களால் இந்தியாவில் வாகன விற்பனை பாதிக்கப்பட்டிருக்கும் என யூகித்திருக்ககூடும்.

கார் விற்பனை அபார வளர்ச்சி; கார் விற்பனை ரிப்போர்ட்

இவர்களின் கருத்துக்களை எல்லாம் பொய்யாக்கி கடந்தாண்டு ஜூன் மாதத்தை விட இந்தாண்டு ஜூன் மாதம் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் இந்த ஜூன் மாதத்தில் என்பது 2018-2019 ஆண்டிற்கான முதல் காலாண்டும் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கார் விற்பனை அபார வளர்ச்சி; கார் விற்பனை ரிப்போர்ட்

மாருதி சுஸூகி

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மட்டும் 1,44,981 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2017 ஆண்டு விற்பனை செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையை காட்டிலும், 36.3 சதவீதம் அதிகம்.

கார் விற்பனை அபார வளர்ச்சி; கார் விற்பனை ரிப்போர்ட்

ஓட்டு மொத்த விற்பனையில் 1,35662 வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 9319 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் உள்நாட்டு விற்பனை 24.5 சதவீதம் வளர்ச்சியும், ஏற்றுமதி 29 சதவீதம் வீழ்ச்சியும் அடைந்துள்ளது.

கார் விற்பனை அபார வளர்ச்சி; கார் விற்பனை ரிப்போர்ட்

18-19ம் நிதியாண்டிற்கான முதல் காலாண்டு விற்பனையை பொருத்தவரை மொத்தம் 4,90497 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது 17-18ம் நிதியாண்டின் முதல் காலாண்டின் விற்பனையை காட்டிலும் உள்நாட்டு விற்பனையில் 25.9 சதவீதம் வளர்ச்சியும், ஏற்றுமதியில் 1.9 சதவீதம் வளர்ச்சியும் பெற்றுள்ளது.

கார் விற்பனை அபார வளர்ச்சி; கார் விற்பனை ரிப்போர்ட்

மஹிந்திரா

கடந்த ஜூன் மாதம் மஹிந்திரா நிறுவனம் 25 சதவீதள வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 45,155 வாகனங்களை விற்பனை செய்துள்ளன. அதில் உள்நாட்டில் மட்டும் 41,689 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. 3466 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த 2017 ஜூன் மாதத்தைவிட ஏற்றுமதி 87 சதவிதம் அதிகரித்துள்ளது.

கார் விற்பனை அபார வளர்ச்சி; கார் விற்பனை ரிப்போர்ட்

18-19ம் நிதியாண்டிற்கான முதல் காலாண்டு நிலவரத்தை பொருத்தவரை மொத்தம் 1,40,101 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் விட 20 சதவீத வளர்ச்சியாகும். இந்த வளர்ச்சிக்கு எஸ்யூவி ரக வாகனங்கள் மற்றும் லைட் கமர்ஷியல் வாகனங்களின் விற்பனையே முக்கிய காரணம்.

கார் விற்பனை அபார வளர்ச்சி; கார் விற்பனை ரிப்போர்ட்

டொயோட்டா

டொயோட்டா நிறுவனம் இந்த மாதம் விற்பனையில் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. 2017 ஜூன் மாதம் வஎரம் 3628 கார்களை மட்டுமே விற்பனை செய்த அந்த நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 14,102 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

கார் விற்பனை அபார வளர்ச்சி; கார் விற்பனை ரிப்போர்ட்

இது அந்நிறுவனத்திற்கு 288.6 சதவீத வள்ர்ச்சியாகும். இதற்கு முக்கியமான காரணம் அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய யாரீஸ் மற்றும் பிரபலமாக விற்பனையாகி வரும் இன்னோவா க்ரைஸ்டா ஆகிய கார்கள் தான்.

கார் விற்பனை அபார வளர்ச்சி; கார் விற்பனை ரிப்போர்ட்

கடந்த ஜூன் மாதம் நடந்த மொத்த விற்பனையில் 13,088 வாகனங்கள் உள்நாட்டிலும், 1014 எட்டியோஸ் செடன் ரக வாகனங்கள் ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளது.

கார் விற்பனை அபார வளர்ச்சி; கார் விற்பனை ரிப்போர்ட்

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டாஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக நல்ல விற்பனையை பெற்று வந்தது. அதே போல் கடந்த ஜூன் மாதமும் கடந்தாண்டு ஜூன் மாதத்தை விட 54 சதவீதம் அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கார் விற்பனை அபார வளர்ச்சி; கார் விற்பனை ரிப்போர்ட்

கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 56,773 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு ஜூன் மாதத்தில் மொத்தம் 36,836 வாகனங்கள் தான் விற்பனையாகியிருந்தது. ஆக மொத்தம் கடந்தா மாத விற்பனை சுமார் 54 சதவீதம் அதிகரித்துள்ளது.

கார் விற்பனை அபார வளர்ச்சி; கார் விற்பனை ரிப்போர்ட்

அதே போல் கமர்ஷியல் வாகனம் மற்றும் ஏற்றுமதியிலும் 50 சதவீத விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் மட்டும் 38,560 கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. 3504 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது.

கார் விற்பனை அபார வளர்ச்சி; கார் விற்பனை ரிப்போர்ட்

18-19 நிதியாண்டிற்கான முதல் காலாண்டு நிலவரப்படி 1,64,579 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டு பகுதி விற்பனையை விட 64 சதவீதம் அதிகம் விற்பனையாகியுள்ளது.

கார் விற்பனை அபார வளர்ச்சி; கார் விற்பனை ரிப்போர்ட்

ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனத்தை பொறுத்தவரை கட்நத மாதம் மொத்தம் 60,779 கார்கள் விற்பனையாகியுள்ளன. இது அந்நிறுவனத்திற்கு 19.5 சதவீத வளர்ச்சியாகும். மேலும் மொத்த கார் விற்பனையில் இந்தியாவில் மட்டும் 45,371 கார்கள் விற்பனையாகியுள்ளது. 15,408 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கார் விற்பனை அபார வளர்ச்சி; கார் விற்பனை ரிப்போர்ட்

கடந்த ஜூன் மாதம் உள்நாட்டு விற்பனையில் 21 சதவீத வளர்ச்சியையும், ஏற்றுமதியில் 15.9 சதவீதள வளர்ச்சியையும் பெற்றுள்ளது. மேலும் இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் இதுவரை 80 லட்சம் வாகனங்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்தது.

கார் விற்பனை அபார வளர்ச்சி; கார் விற்பனை ரிப்போர்ட்

இந்நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்க சமீபத்தில் வெளியான க்ரெட்டா பேஸ்லிப்ட் வெர்ஷன், மற்றும் ஹூண்டாய் ஐ20 மற்றும் ஐ20 ஆக்டிவ் ஆகிய கார்களின் விற்பனை தான் முக்கிய காரணம்.

கார் விற்பனை அபார வளர்ச்சி; கார் விற்பனை ரிப்போர்ட்

ஹோண்டா கார்ஸ்

ஹோண்டா நிறுவனமும் இந்த மாதம் 2 இலக்க அளவிலான சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் மட்டும் 17,602 கார்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளது. 486 கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் 37.5 சதவீத வளர்ச்சியாகும்.

கார் விற்பனை அபார வளர்ச்சி; கார் விற்பனை ரிப்போர்ட்

18-19 நிதியாண்டின் முதல் காலாண்டு நிலவரத்தை பார்க்கும் போது மொத்தம் 42,609 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது நிதியாண்டின் முதல் காலாண்டில் விற்பனையான 38,563 கார்களை விட 10.5 சதவீதம் வள்ரச்சியாகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Monday, July 2, 2018, 12:43 [IST]
English summary
Car Sales In India: June 2018: Growth Trend Continues. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+