பெட்ரோல் விலை பற்றி இவர்களுக்கு கவலையில்லை...; மே மாத கார் விற்பனை ரிப்போர்ட்

கடந்த மே மாதம் கார் விற்பனை நிலவரங்கள் வரத்துவங்கியுள்ளன. முதற்கட்டமான வந்த நிறவனங்களில் அறிக்கையில் படி கடந்த மே மாதம் பல முக்கிய நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை சந்தித்துள்ளன. கடந்த மாதம் பெட்ரோல் வில

By Balasubramanian

கடந்த மே மாதம் கார் விற்பனை நிலவரங்கள் வரத்துவங்கியுள்ளன. முதற்கட்டமான வந்த நிறவனங்களில் அறிக்கையில் படி கடந்த மே மாதம் பல முக்கிய நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை சந்தித்துள்ளன. கடந்த மாதம் பெட்ரோல் விலை ஏறிகொண்டே இருந்தாலும், கார்விற்பனை என்னவோ குறைந்த பாடில்லை.

பெட்ரோல் விலை பற்றி இவர்களுக்கு கவலையில்லை...; மே மாத கார் விற்பனை ரிப்போர்ட்

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் இந்தியா முழவதும் உள்ள மக்கள் வாகனங்களை பயன்படுத்தவே யோசித்து வருகின்றனர். இந்த நிலைமையை பார்க்கும் போது எல்லோருக்கும் வாகனங்களின் விற்பனை சரிந்திருக்கும் என சொல்லுவார்கள். ஆனால் தற்போது வெளியாகியுள்ள மே மாத ரிப்போர்ட் அதற்கு நேர் மாறாக வாகன விற்பனை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளுது.

பெட்ரோல் விலை பற்றி இவர்களுக்கு கவலையில்லை...; மே மாத கார் விற்பனை ரிப்போர்ட்

மாருதி சுஸூகி மற்றும் டொயோட்டா ஆகிய கார்கள் பெரும்பாலான பிரிவு வாகனங்களில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மேலும் வரும் காலங்களில் இன்னும் சில மாடல்கள் கார்கள் அறிமுகமாகவுள்ளதால் இந்த வளர்ச்சி தொடரும் என்றே தான் எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் விலை பற்றி இவர்களுக்கு கவலையில்லை...; மே மாத கார் விற்பனை ரிப்போர்ட்

இந்த பட்டியலில் நாம் கவனிக்க வேண்டியது என்ன என்றால் இந்தியாவில் கார் வாங்கும் பலர் மெதுமெதுவாக பெட்ரோல் காருக்கு மாறி வருகின்றனர். டீசல் மற்றும் பெட்ரோல் விலையை ஒப்பிடும் போது பெரிய அளவில் வித்தியாசம் இல்லாததால் இந்த பெட்ரோல்களுக்கே மக்கள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது. சரி நாம் இந்த மாதம் எந்தெதந்த நிறுவனங்கள் எவ்வளவு கார்களை விற்பனை செய்துள்ளது என பார்ப்போம் வாருங்கள்.

பெட்ரோல் விலை பற்றி இவர்களுக்கு கவலையில்லை...; மே மாத கார் விற்பனை ரிப்போர்ட்

மாருதி சுஸூகி

மாருதி சுஸூகி நிறுவனத்தை பொருத்தவரை வாகன விற்பனையில் கடந்த மே மாதம், 2017ம் ஆண்டு மே மாதத்தை ஒப்பிடும் போது 26 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இந்தியாவில் மொத்தமாக விற்பனையான காரில் 50 சதவீத்திற்கும் அதிகமான கார்களை இந்நிறுவனம் தான் விற்பனை செய்துள்ளது. கடந்த மாதம் மட்டும் இந்நிறுவனம் 1,63,200 கார்களை விற்பனை செய்துள்ளது. 9312 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.

பெட்ரோல் விலை பற்றி இவர்களுக்கு கவலையில்லை...; மே மாத கார் விற்பனை ரிப்போர்ட்

இந்நிறுவனத்தின் ஸ்விப்ட், டிசையர், பெலேனோ, ஆகிய கார்கள் நல்ல விற்பனையை பெற்றுள்ளது. விட்டாரா ப்ரீஸ்ஸா காரில் உள்ள ஏஎம்டி கியர் ஆப்ஷன் வேன் பிரிவில் நல்ல விற்பனையை அடைந்துள்ளது. ஆனால் ஆல்டோ மற்றும் வேகன் ஆர், சியஸ் ஆகிய கார்களின் விற்பனை மந்தமாகியுள்ளது.

பெட்ரோல் விலை பற்றி இவர்களுக்கு கவலையில்லை...; மே மாத கார் விற்பனை ரிப்போர்ட்

டொயோட்டா

டொயோட்டா நிறுவனம் கடந்த 2017ம் மே மாதம் நடந்த விற்பனை விட கடந்த மே மாதம் 20 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. அந்நிறுனவத்தின் புதிய செடன் ரக காராக யாரீஸ் கார் 4000 கார்களை மே மாத மத்தியிலேயே விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனத்தின் பார்ச்சூனர், இன்னோவா ஆகிய கார்கள் நல்ல விற்பனையை பெற்று இந்த நிலைக்கு அந்நிறுவனத்தை உயர்த்தியுள்ளது.

பெட்ரோல் விலை பற்றி இவர்களுக்கு கவலையில்லை...; மே மாத கார் விற்பனை ரிப்போர்ட்

மஹேந்திரா

மஹேந்திரா நிறுவனத்தின் ஓட்டு மொத்த வாகன விற்பனை 12 சதவிதம் வரை கடந்த மே மாதத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. இந்நிறுவனத்தின் பயணிகள் மற்றும் கர்மர்ஷியல் வாகனங்கள் 8 சதவீத வளர்ச்சியும் ஏற்றுமதியில் 134 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்நிறுவனம் 3031 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.

பெட்ரோல் விலை பற்றி இவர்களுக்கு கவலையில்லை...; மே மாத கார் விற்பனை ரிப்போர்ட்

இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட மஹேந்திரா எஸ்யூவி 500 மற்றும் எப்பொழுதும் நல்ல விற்பனையை தரும் ஸ்கார்ப்பியோ ஆகிய கார்கள் 2சதவீத வளர்ச்சியை பெற்று மொத்தம் 20715 கார்களை விற்பனை செய்துள்ளது. எளியரக கமர்ஷியல் வாகனங்களை பொருத்தவரை 15 சதவீதிகமும் வேன் செக்மெனட்டில் 34 சதவீதமும் கடந்த 2017ம் ஆண்டு மே மாதத்தை காட்டிலும் வளர்ச்சி பெற்றுள்ளது.

பெட்ரோல் விலை பற்றி இவர்களுக்கு கவலையில்லை...; மே மாத கார் விற்பனை ரிப்போர்ட்

ஃபோர்டு

ஃபோர்டு நிறுவனத்தை பொருத்தவரை ஃபோர்டு பிரீ ஸ்டைல் மற்றும் எக்கோஸ்போர்ட்ஆகிய கார்கள் நல்ல விற்பனையைய பெற்றுள்ளது. இந்நிறுவனம் மே மாதத்தில் மொத்தம் 26,188 கார்களை விற்பனை செய்துள்ளுது. டோமெஸ்டிக் விற்பனையக 9069 கார்கள் விற்பனையானது. கடந்தாண்டு இதே பிரிவில் 6742 கார்தா் விற்பனையாகியிருந்தது.

பெட்ரோல் விலை பற்றி இவர்களுக்கு கவலையில்லை...; மே மாத கார் விற்பனை ரிப்போர்ட்

ஏற்றுமதியை பொருத்தவரை கடந்தாண்டு மே மாதம் 16761 கார்கள் ஏற்றுமதியாகியிருந்தன. இந்தாண்டு 17119 கார்கள் ஏற்றுமதியாகின்றன. சமீபத்தில் இந்நிறுவனம் எக்கோஸ்போர்ட் காரில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டது தான். இந்த விற்பனை உயர்வுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Friday, June 1, 2018, 16:54 [IST]
English summary
Car Sales In India: May 2018: Automakers Show Sales Growth Despite Fuel Prices. Read in tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+